Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

2013 முதல் பிளாஸ்டிக் பைக்கு தடை நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமலர்            30.08.2012

2013 முதல் பிளாஸ்டிக் பைக்கு தடை நகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

அரியலூர்: அரியலூர் நகராட்சி கவுன்சிலர் கூட்டத்தில், நகராட்சி பகுதியில் வரும் 2013ம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அரியலூர் நகராட்சி கூட்ட மன்றத்தில் நடந்த கவுன்சிலர்கள் கூட்டத்துக்கு, நகராட்சி தலைவர் முருகேசன் தலைமை வகித்தார். நகராட்சி கமிஷனர் சரஸ்வதி முன்னிலை வகித்தார். இளநிலை உதவியாளர் பாலச்சந்தர் தீர்மானங்களை படித்தார்.இந்திய அரசின் பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை மற்றும் கையாளுதல் விதியின் படி, அரியலூர் நகராட்சி பகுதியில் வரும் 2013 ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகளை தடை செய்வது, அரியலூர் நகராட்சி தலைவருக்கு ஆறு லட்சம் ரூபாயில் புதிய ஜீப் வாங்குவது, அரியலூர் நகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம் சீராக வழங்கிட இயலாத நேரத்தில், பொதுமக்களுக்கு சீரான குடிநீர் விநியோத்தை தடையில்லாமல் செய்ய, 20 லட்சம் ரூபாய் செலவில் புதிய குடிநீர் லாரி வாங்குவது உள்பட16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் பேசிய கமிஷனர் சரஸ்வதி, ""கடந்த மாதம் 23ம் தேதி பொறுப்பேற்றது முதல், எனது பணியை குறைவில்லாமல் செய்து வருகிறேன். அதில் ஏதேனும் தவறிருந்தால் நகராட்சி கவுன்சிலர்கள் எனக்கு தெரிவிக்கலாம்,'' என்று பேசினா. தொடர்ந்து நகராட்சி கவுன்சிலர்கள் பேசியதாவது:கருணாநிதி, சிவஞானம்(அ.தி. மு.க.,): அரியலூர் நகராட்சி பகு தி அருகே உள்ள மின்நகர் குடியிருப்பு பகுதிகளை அரியலூர் நகராட்சி எல்லைக்குள் இணைக்க வேண்டும். அரியலூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் வழங்கிய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவி க்கும் வகையில், அரியலூர் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் நுழைவு வாயில் அமைக்கவேண்டும்.குணா, மாலா (தி.மு.க.,): அரியலூர் நகராட்சி பகுதியில் உள் ள வடிகால்களை சீரமைத்து, தூ ய்மையாக பராமரிக்க நடவடிக் கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு கவுன்சிலர்கள் பேசினர்.

கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் கோவிந்தராஜன், தலைமை எழுத்தர் ராஜேந்திரன், துப்புரவு ஆய்வாளர் செல்வமணி, ஓவர்சியர் துரைக்கண்ணு, இளநிலை உதவியாளர் கந்தசாமி, நகராட்சி துணைதலைவர் மலர்கொடி, கவுன்சிலர்கள் அமுதலட்சுமி, மாரிமுத்து, மணிவண்ணன், ராமு, பக்ருதீன், ஆனந்தி, மாலா, கோகுல், குணா, குமார், சிவஞானம், அபிராமி, லட்சுமி, ராஜேந்திரன், ஜெயலட்சுமி ராஜேந்திரன், பாபு, கருணாநிதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.]