Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மட்காத பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களை மூட நடவடிக்கை

Print PDF

தினமலர்         31.08.2012

மட்காத பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்களை மூட நடவடிக்கை

தேனி:மட்காத பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களை மூட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக,சுற்றுச்சூழல் துறை இயக்குனர் தெரிவித்தார். தேனியில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் காலநிலை மாற்றம் குறித்த, மாணவர்களின் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.உத்தமாபாளையம் மாவட்ட கல்வி அலுவலர் முருகன் தலைமை வகித்தார்.மாவட்ட வன அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தார். சுற்றுசூழல் துறை இயக்குனர் மல்லேசப்பா ஊர்வலத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
 
பள்ளிகளில் சுற்றுச்சூழல் மன்றங்கள் துவக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 13 ஆயிரம் மன்றங்கள் உள்ளன. புதிதாக 5,000 மன்றங்கள் துவக்கப்படஉள்ளன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வில் சிறந்து விளங்கும் மாணவர்கள், கிராமம், மகளிர் மன்றங்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட உள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை கொண்டு, பிளாஸ்டிக் ரோடு அமைக்க அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. மட்காத பிளாஸ்டிக் உற்பத்தி செய்யும் பிளாஸ்டிக் கம்பெனிகளை மூடுவதற்கு சுற்றுசூழல் அமைச்சகத்தில் முடிவு செய்து, மாசுக் கட்டுபாட்டு வாரியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது, என்றார்.ஓருங்கிணைப்பாளர் வெங்கடேசன் நன்றி கூறினார். ஆர்.சி. உயர்நிலைப்பள்ளியில் இருந்து தொடங்கிய ஊர்வலம், பஸ் நிலையம் வழியகா பி.சி.கான்வென்ட்டில் முடிவடைந்தது.