Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட 80 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Print PDF
தினகரன்         05.03.2013

சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட 80 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்


சேலம், : சேலம் புதிய பேருந்து நிலையத்தில் தடை செய்யப்பட்ட 80 கிலோ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து, ரூ.2400 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

சேலம் மாநகராட்சி பகுதிகளில் 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகளை வணிக நிறுவனங்கள், மளிகை கடைக்காரர்கள், பொதுமக்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது சோதனைகள் நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து வருகிறார்கள். மேலும், அபராதமும் விதிக்கப்பட்டு வருகிறது.

இதன்படி, சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வணிக நிறுவனங்கள், கடைகளில் நேற்று, சுகாதார ஆய்வாளர்கள் கந்தசாமி, வெங்கடாசலம் மற்றும் ஊழியர்கள் சோதனை நடத்தினர். இதில் 46 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது.

அங்கு வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் பைகளை பரிசோதித்ததில், 16 கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 80 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக கடைகாரர்களிடம் ரூ.2400 அபராதம் வசூலிக்கப்பட்டது. இந்த சோதனை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Last Updated on Tuesday, 05 March 2013 11:30