Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி குப்பை கிடங்கில் இருந்து எழும் புகை மண்டலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?

Print PDF
தினகரன்                   07.03.2013

மாநகராட்சி குப்பை கிடங்கில் இருந்து எழும் புகை மண்டலத்தால் விபத்துகள் ஏற்படும் அபாயம் தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்படுமா?


தூத்துக்குடி,  : தூத்துக்குடி மாநகராட்சி குப்பை கிடங்கில் வைக்கப்படும் தீயினால் ஏற்படும் புகை மண்டலம் பெரும் விபத்துகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. உயிர்ப்பலி ஏற்படும் முன் தகுந்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்களும், வாகன ஓட்டுனர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான உரக்கிடங்கு தருவைகுளம் ரோட்டில் உள்ளது. இதில் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் இருந்து தினமும் சேகரிக்கப்படும் குப்பைகள், கழிவுகள் மொத்தமாக கொட்டப்படுகிறது. இங்கு கொட்டப்படும் பல கழிவுகளுக்கு மாநகராட்சி ஊழியர்களால் தீவைத்து கொளுத்தி உரமாக்கப்படுகிறது. இதற்காக அங்கு மலைபோல் குவிக்கப்பட்டுள்ள குப்பைகள் எரிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. ஆனால் தற்போது பரந்து விரிந்த அந்த உரக்கிடங்கின் துவக்க பகுதியி லேயே பெரும்பாலான குப்பைகள் கொட்டப்பட்டு அவை எரிக்கப்படுகின்றன.

தொடர்ந்து தினமும் இங்குள்ள குப்பைகள் எரிக்கப்படும் போது அவை அதிகமாக இருப்பதால் நாள்கணக்கில் எரிந்து வருகிறது. இதனால் கரும்புகை மண்ட லம் உருவாகிறது. இந்த புகை மண்டலம் காற்றில் திசையில் நகர்ந்து சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2 சதுர கிமீ தொலை வுக்கு  பரவிவருகிறது. இதில் மாப்பிள்ளையூரணியில் இருந்து தருவைகுளம் செல்லும் சாலையிலும் இந்த புகை மண்டலம் பரவி விடுகிறது.

இதனால் பகலில் கூட வாகனங்கள் சாலையில் செல்ல முடியாத நிலை உள்ளது. இருசக்கர வாகன பயணிகள் கண்களில் எரிச்சல் மற்றும் இருமல் ஏற்பட்டு வண்டி ஓட்ட முடியாத அளவிற்கு பாதிக்கப்படுகின்றனர்.

மேலும் கார்கள், பஸ்கள், லாரிகள் உள்ளிட்டவை பகலில் மிஸ்ட் லைட்களை எரியவிட்டே இந்த சாலையை கடக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள் ளன. இந்த புகை மண்டலத்தால் வாகன ஓட்டிகள் பாதிக்கப்பட்டு, அவ்வப் போது சிறு, சிறு விபத்துகள் ஏற்பட்டு தினமும் பலர் கைகால்கள் ஓடிந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். வாகனங்கள் பல சேதமடைந்து வருகின்றன.

டோல்கேட் கட்டணத்தில் இருந்து தப்பிக்க குறுக்கு வழியை பயன்படுத்தும் பல லாரிகளும், மணல் கடத்தல் லாரிகளும்கூட இந்த பாதையை பயன்படுத்துவதால் இங்கு பெரிய அளவிலான விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த புகையால் பெரும் உயிர்ப்பலி ஏற்படும் முன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிக்களும் தெரிவித்துள்ளனர்.