Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.4 லட்சம் செலவில் சூரியமின்கலன் அமைக்க முடிவு

Print PDF

தினத்தந்தி             30.06.2013

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் ரூ.4 லட்சம் செலவில் சூரியமின்கலன் அமைக்க முடிவு

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் சாதாரணக் கூட்டம் தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் துவாரகநாத்சிங் முன்னிலை வகித்தார்.இதில் உத்தரகாண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட இயற்கைச்சீற்றத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பொதுக்கட்டிடங்கள், வீடுகள், வணிக நிறுவனங்களில் மழைநீரைச் சேகரிக்க தொட்டிகள் அமைப்பதைக் கட்டாயமாக்கி அதனைத் தீவிரமாக செயல்படுத்துவது, ரூ.4 லட்சம் செலவில் 3 கே.வி. உற்பத்தி திறனுடைய சூரிய மின்கலன் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டது. கூட்டத்தில் துணைத்தலைவர் சந்திரன், சுகாதார ஆய்வாளர் பரமசிவம் மற்றும் அனைத்து கவுன்சிலர்களும் கலந்து கொண்டனர்.