Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் சூரியசக்தி மூலம் மின்உற்பத்தி செய்யும் வசதி தொடக்கம்

Print PDF

தினத்தந்தி          05.08.2013

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் சூரியசக்தி மூலம் மின்உற்பத்தி செய்யும் வசதி தொடக்கம்

http://202.191.144.185/dt/sites/default/files/newsarticleimages/cbe408cepsolar03.jpg

 

 

 

 

 

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில் சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்து பயன்படுத்தும் வசதி தொடங்கப்பட்டது.

சூரியசக்தி மின்கலம்

தமிழகத்தில் சூரிய மின் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி அலுவலகத்தில், சூரிய சக்தி மூலம் மின் உற்பத்தி செய்யும் வகையில், அலுவலக மாடிக்கட்டிடத்தில் ரூ.3½ லட்சம் செலவில் 3 கிலோவாட் சக்தி கொண்ட சோலார் பேனல்கள் (சூரிய சக்தி மின்கலம்) அமைக்கப்பட்டது.

இதன் தொடக்க நிகழ்ச்சிக்கு பேரூராட்சி தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் துவாரகநாத் சிங், துணைத்தலைவர் சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.சி.ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. சூரியசக்தி மின்கலனை அலுவலக பயன்பாட்டுக்கு இயக்கி வைத்தார்.

முதல்-அமைச்சர் உத்தரவு

இதுகுறித்து பேரூராட்சி தலைவர் பி.ஆர்.ஜி.அருண்குமார் கூறியதாவது:- புதிதாக அமைக்கப்பட்டுள்ள இந்த சூரிய சக்தி மின்கலத்தால் எரிபொருள் செலவு குறையும். இதன் மூலம் அலுவலகத்தில் உள்ள அனைத்து மின்சாதன பொருட்களும் இயங்கும் அளவுக்கு மின்சக்தி கிடைக்கும். மேலும் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும் தங்கள் வீடுகளில் இதுபோன்ற சூரியசக்தி மின்கலம் அமைக்க ஊக்குவிக்கப்படும் என்று அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் கவுன்சிலர்கள் மாரியப்பன், சுப்பிரமணியன், குணசேகரன், தனலட்சுமி, திலகவதி, சுகாதார ஆய்வாளர் பரமசிவம், பொறியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.