Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காய்கறி கழிவில் இருந்து றீ90 லட்சத்தில் மின்உற்பத்தி திட்டம்.

Print PDF

தினகரன்            21.08.2013

காய்கறி கழிவில் இருந்து றீ90 லட்சத்தில் மின்உற்பத்தி திட்டம்.

பொள்ளாச்சி:  பொள்ளாச்சியில் காய்கறி கழிவுகளை கொண்டு, பயோ காஸ் மூலம், ரூ.90 லட்சத்தில் மின்சாரம் தயா ரிக்க நடவடிக்கை எடுக் கப்படுவதாக நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.பொள்ளாச்சியில் காந்தி, திருவிக, தேர்நிலை தினசரி ஆகிய மார்க்கெட் டுகள் உள்ளன.  இங்கு உள் ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்படும் காய் கறிகள் மொத்த மாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. கொண்டு வரப்படும் காய்கறிகள் வெகு நாட்கள் கடந்ததும் கெட்டு போகி றது. இதனால் வியாபாரிகள் ஆங்காங்கே காய்கறிகளை கொட்டி விடுகின்றனர். இது நகராட்சி சார்பில் அப் புறப்படுத்தப்படுகிறது. சில நேரங்களில் மார்க் கெட் வெளியே கொட் டப்படும் காய்கறி கழிவுகள் அப்ப டியே கிடப்பில் போ டப் படுகின்றன. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

இந்நிலையில், மார்க் கெட்டுகளில் இருந்து வெளியேற்றப்படும் காய்கறி கழிவுகளிலிருந்து பயோ காஸ் மூலம் மின்சாரம் தயாரிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. இதற்காக காந்தி மார்க்கெட் அருகே சுமார் அரை ஏக்கர் நிலம் தேர்வு  செய்யப்பட்டுள்ளது. அப்ப ணிகளுக்காக ரூ 90 லட்சம் ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறுகையில், “பொள்ளாச்சி நகரில் காந்தி, திருவிக, தேர்நிலை ஆகிய 3 தினசரி மார்க் கெட்டுகள் உள்ளன. இவை களிலிருந்து தினமும் சுமார் 3 முதல் 5டன் வரை காய் கறி கழிவுகள் வெளியேற் றப்படுகிறது. இந்த காய்க றிகழிவுகளை கொண்டு, பயோ காஸ் மூலம் மின்சா ரம் தயாரிக்க நகராட்சி திட்டம் முடிவு செய்துள் ளது. கிடைக்கும் மின் சாரத்தை நகராட்சி பகுதி களுக்கு வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எரி வாயு கலன் அமைக்க ரூ.90 லட்சம் நிதி ஒதுக்கப் படுகிறது. விரைவில் டெண் டர் விடப்பட்டு, அதற்கான பணி மேற்கொள் ளப்படும்‘ என்றனர்.