Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தடை செய்யப்பட்ட 'கேரிபேக்' திடீர் ஆய்வு நடத்த ஆலோசனை

Print PDF

தினமலர் 13.01.2010

தடை செய்யப்பட்ட 'கேரிபேக்' திடீர் ஆய்வு நடத்த ஆலோசனை

ஊட்டி : "தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் அதிகரிக்கப்பட்டுள்ள உபயோகிப்பதை தடுக்க, முன்னறிவிப்பின்றி அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்,' என வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்க செயலர் ஜனார்தனன் மாவட்ட கலெக்டருக்கு கொடுத்துள்ள மனு:

ஊட்டி மத்திய பஸ் நிலையம் தூய்மை பகுதியாக அறிவிக்க வேண்டும்; தூய்மைப் பணியாளர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தி சுகாதாரத்தில் அக்கறை காட்ட வேண்டும்; ஸ்டோன் ஹவுஸ் பகுதியில் வருவாய் பணியாளர் குடியிருப்பு கட்டும் திட்டத்தை கைவிட வேண்டும்; நகராட்சி மார்க்கெட் தூய்மை பகுதியாக அறிவிக்கப்பட்டு மாவட்ட கலெக்டர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்; தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் அதிகமாகஉபயோகிப்பதை தடுக்க முன்னறிவிப்பின்றி அனைத்து கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்;

நகரில் சுற்றித்திரியும் மனநோயாளிகள் கட்டுப்படுத்த உரிய நிதியோ, அவர்களை மருத்துவமனையில் சேர்க்க வாகன வசதி சமூக நலத்துறைக்கு வழங்க மாநில அரசுக்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும். தனியார் மருத்துவமனையில் மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டுகின்றனர்; ஓட்டலில் மீதமாகும் உணவு பொருட்கள் கொட்டப்படுவதும், மனநோயாளிகள் அந்த உணவை உண்கின்றனர். ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் குழந்தைகள் மையத்தில் கண்ணாடி ஜன்னல்கள் பொருத்தி காற்றோட்டமான சூழலை உருவாக்க வேண்டும். இவ்வாறு ஜனார்தனன் கூறியுள்ளார்.

Last Updated on Wednesday, 13 January 2010 06:55