Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பாலிதீன், பிளாஸ்டிக் தடை தீவிர அமல் நகராட்சி மார்க்கெட்டில் பயன்பாடு

Print PDF

தினமலர் 19.01.2010

பாலிதீன், பிளாஸ்டிக் தடை தீவிர அமல் நகராட்சி மார்க்கெட்டில் பயன்பாடு

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் ஜன., 14 முதல் பாலிதீன், பிளாஸ்டிக் பைகளுக்கான தடையை,தீவிரமாக அமல்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், நகராட்சி மார்க்கெட் மற்றும் பள்ளி விழாக்களில் இதன் பயன்பாடு அதிகமாக உள்ளது.ராமேஸ்வரம்,தங்கச்சிமடம் மற்றும் பாம்பன் பகுதியில் பொது இடங்களிலும்,ரோட்டோரத்திலும் மக்களால் வீசி எறியப்பட்ட பாலிதீன் பைகளை அகற்றும் வகையில், பள்ளி மாணவர்கள், தன்னார்வ ஊழியர்கள் பங்குபெற்ற மாஸ் கிளினீங், விழிப்புணர்வு ஊர்வலம் என, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. பாலிதீன் பைகளை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும், அதிகாரிகள் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதால், வர்த்தகர்களும் கடைகளில் பாலிதீன் பைகள் , பிளாஸ்டிக் கப்புகளை விற்பதை தவிர்க்கின்றனர். இங்குள்ள ஒருசில ஒட்டல் கள் தவிர , அனைத்து ஓட்டல்களிலும், பாலிதீன் பொருட்களில் உணவு பொருட்கள் கொடுப்பதும் தவிர்க்கப் பட்டுள்ளது.

மக்களும் பாலிதீன் பைகளுக்குப்பதில் துணிப்பைகளை பயன்படுத்த துவங்கி உள்ளனர். கடைகளிலும் பாலிதீன் பைகள் விற்பனை இல்லை என எழுதி வைக்கப்பட்டுள் ளது. இதனால் ராமேஸ்வரம் நகர் பகுதியில் ,பாலிதீன் பைகள் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டுள் ளது. ஆனால் ,ராமேஸ்வரம் நகராட்சி தினசரி மார்க் கெட்டில் நேற்று கூட பாலிதீன் பைகளில் காய்கறி, மீன் போன்றவை விற்பனை செய்யப் பட்டது. இங்குள்ள மளிகை கடைகளிலும் பாலிதீன்,பிளாஸ்டிக் பைகளில் பொருட்கள் கொடுக்கப் பட்டது. "நகராட்சியில் இருந்து எங்களுக்கு எந்த அறிவிப்பும் செய்யப்படவில்லை,' என, இங்குள்ள வியாபாரிகள் சிலர் தெரிவித்தனர். இது போல் அரசு மதுபானகடை பார், சைக்களில் டீ விற்பனை செய்பவர்களும் பிளாஸ்டிக் கப்புகளையே பயன்படுத்துகின்றனர். மேலும், பள்ளி விழாக்களில் பிளாஸ்டிக் கப்புகளே பயன்படுத்தப்படுகின்றன. மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், அரசு அலுவலகங்கள்,பள்ளிகள்,அரசு சார்ந்த பிற நிறுவனங்களில் பிளாஸ்டிக், பாலிதீன் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க, முதலில் நடவடிக்கைஎடுக்க வேண்டும

Last Updated on Tuesday, 19 January 2010 06:40