Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் கப்,பைகள் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை: திண்டுக்கல் நகராட்சி முடிவு

Print PDF

தினமலர் 06.03.2010

பிளாஸ்டிக் கப்,பைகள் பயன்படுத்துபவர்கள் மீது நடவடிக்கை: திண்டுக்கல் நகராட்சி முடிவு

திண்டுக்கல்:திண்டுக்கல் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கப், பைகளை பயன் படுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.திண்டுக்கல் நகராட்சி கூட்டம் தலைவர் நடராஜன் தலைமையில் நடந்தது.

நடந்த விவாதம் வருமாறு:

துணை தலைவர் கல்யாணசுந்தரம்: சொந்த கட்டடங்களில் சிறுதொழில் நடத்துபவர்கள் மீது வரி விதிக்கும் போது, தொழில் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

தலைவர்: இதனால் பாதிப்பு எதுவும் இருக்காது. சென்னை நகராட்சி இயக்குனரின் உத்தரவுப்படி சொத்து வரி நிர்ணயம் செய்யப்படும்.

ஜெயபாலன்: அரசு பணிமனையில் பழுதுபட்ட வாகனங்களை செப் பனிட வெவ்வேறு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.அரசு நிர்ணயித்த தொகை என்ன.

தலைவர்: அரசு உத்தரவுப்படி வாகனங்கள் பராமரிக்கப்படுகிறது.

துணை தலைவர்: குப்பை தொட் டிகள் நகராட்சியில் பற்றாக்குறை உள்ளது. இந்நிலையில் 39 தொட்டிகளுக்கு 25 தொட்டிகள் மராமத்துக்கு எடுத்து சென்றால், மக்கள் எங்கே குப்பை கொட்டுவார்கள். சுகாதாரக்கேடு ஏற்படும்.

தலைவர்: குப்பை தொட்டிகளை அதே இடத்தில் வைத்து மராமத்து செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துணை தலைவர்: பாலதிருப்பதி சத்துணவு கூடத்தில் ஆரம்ப பள்ளியும் செயல்படுவதால் இட நெருக் கடி ஏற்பட்டுள்ளது. ஆர்.எம்., காலனி பகுதி இரண்டுக்கு இன்னும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்யவில்லை.

தலைவர்: நிதி ஒதுக்கீடு வந்தவுடன் சத்துணவுகூடம் மராமத்து செய்யப்படும்.

கோபாலகிருஷ்ணன்: ஆத்தூர் அணையில் உள்ள கிணறுகளில் சகதிகள் அகற்றி அனைத்து பகுதிக்கும் குடிநீர் சப்ளை செய்ய வேண்டும்.

தலைவர்: ஆத்தூர் அணையில் உள்ள கிணறுகளில் சகதி அகற்றப் பட்டு, தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். பேரணை திட்டத்தின் மூலம் விரைவில் குடிநீர் சப்ளை தொடங்கும்.

ஜெயபாலன்: நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் கப்,கேரி பேக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும். அப்படி விதிக்கும் போது தொழிலாளர்களுக்கு சிறிது காலம் அவகாசம் தர வேண்டும்.தலைவர்: பிளாஸ்டிக் கப்பில் சூடான பானங்கள் குடிக்கும் போது நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. வரும் 15 நாட்களுக்குள் நகராட்சி பகுதிக்குள் யாரும் பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்தக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக் கப்படும். தலைவரின் இந்த தீர்மானத்திற்கு அனைத்து கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தனர்.

Last Updated on Saturday, 06 March 2010 10:04