Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஒற்றையால்விளையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி 19.03.2010

ஒற்றையால்விளையில் பிளாஸ்டிக் விழிப்புணர்வுப் பேரணி

கன்னியாகுமரி, மார்ச் 18:ஒற்றையால்விளை அரசு மேல்நிலைப் பள்ளி சார்பில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வுப் பேரணி (படம்) வியாழக்கிழமை நடைபெற்றது.

பேரணியை பள்ளியின் பெற்றோர்-ஆசிரியர் கழகத் தலைவர் என். சுடலைமணி தொடக்கிவைத்தார்.

பள்ளித் தலைமை ஆசிரியர் பி. முருகன் தலைமை வகித்தார். பேரூராட்சி 1-வது வார்டு கவுன்சிலர் என். இந்திரலேகா, பெற்றோர்-ஆசிரியர் கழக துணைத் தலைவர் ஹரிஜெயராஜா முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி செயல் அலுவலர் கே. ராசையா, பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவிகள் திரளாகப் பங்கேற்றனர்.

பஞ்சலிங்கபுரம் ஊராட்சி அளவிலான சுய உதவிக் குழு கூட்டமைப்பு சார்பில் பிளாஸ்டிக் தவிர்ப்புப் பேரணி நடைபெற்றது.

பேரணியை, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் இரா. சுந்தரராஜு தொடக்கிவைத்தார். ஊராட்சித் தலைவர் ஆ. கண்ணன், துணைத் தலைவர் எஸ். துரைசாமி, சுண்டன்பரப்பு ஊர்த் தலைவர் பி. பெரியசாமி, ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பி. காமராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மகளிர் சுய உதவிக் குழு கூட்டமைப்புச் செயலர் எம். சசிகலா வரவேற்றார்.

பேரணியில், மகளிர் திட்ட உதவி அலுவலர்கள் ஆன்றனி சிலுவை, வி.எஸ். சுப்பையா, வட்டார வளர்ச்சி துணை அலுவலர் நீலபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மகளிர் கூட்டமைப்புத் தலைவர் எஸ். தங்கம் நன்றி கூறினார். இதையொட்டி பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு, வென்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

Last Updated on Friday, 19 March 2010 10:50