Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கான பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

Print PDF

தினமணி 29.03.2010

தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கான பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வுக் கூட்டம்

நாகர்கோவில், மார்ச் 28:நாகர்கோவிலில் தொண்டு நிறுவன பிரதிநிதிகளுக்கான பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு கலந்தாய்வுக் கூட்டம் நாகர்கோவிலில் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ பேசியதாவது:

சுற்றுச்சூழலை வெகுவாகப் பாதித்தது, சமுதாயத்துக்கு பெரும் கேடு விளைவிக்கும், பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப் ஆகியவற்றை பொதுமக்கள் பயன்பாட்டிலிருந்து முற்றிலும் தவிர்க்கும் வகையில் மாவட்டம் முழுவதும் விளம்பரம் செய்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன.

ஏப்ரல் 1 முதல் மாவட்டத்தில் ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பைகள் மற்றம் கப்புகளை பயன்டுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்ட மாவட்டமாக அறிவிக்கப்படவுள்ளது. அந்த வகையில் பொதுமக்களிடையே பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் அனைத்து தொண்டு நிறுவனங்களின் பங்கும் மகத்தானது என்றார் ஆட்சியர்.

கூட்டத்தில் லால்மோகன், சுற்றுச்சூழல் பாதுகாப்புத் துறை உதவி செயற்பொறியாளர் கிருபானந்தராஜன், செய்தி - மக்கள் தொடர்பு அலுவலர் பெ. தமிழ் இனியன் உள்ளிட்டோர் பங்கேற்றன