Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்

Print PDF

தினமணி 01.04.2010

பிளாஸ்டிக் மாற்றுப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும்

புதுச்சேரி, மார்ச் 31: புதுச்சேரியில் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள லையில் அதற்கான மாற்றுப் பொருள்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று திமுக எம்.எல்.. விஎம்சி சிவக்குமார் கூறினார்.

÷சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் அவர் பேசியது:

÷புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 4 பிராந்தியங்களுக்கும் நிதியைச் சமமாகப் பிரித்துக் கொடுக்க வேண்டும். ஏரிகளைச் சுற்றி அதிக அளவில் மரக்கன்றுகள் நட்டு காடுகள் வளர்க்க வேண்டும்.

÷காரைக்காலில் உள்ள எரிவாயு மின் உற்பத்தி நிலையத்துக்கு இப்போது போதிய அளவில் எரிவாயு கிடைக்கவில்லை. புதுச்சேரி அரசு இதில் தலையிட்டு பெற்றுக் கொடுக்க வேண்டும். மேலும் மின்சார கார்ப்பரேஷன் லாபம் ஈட்டும் நிறுவனமாக இருக்கிறது. அதில் பணியாற்றும் தொழிலாளர்கள், அதிகாரிகளின் பிரச்னைகளைத் தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

÷புதுச்சேரிக்கு இடம் பெயர்ந்த தலித் மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் உரிய சலுகை கொடுக்காவிட்டாலும் நலத் திட்டங்களில் கொடுக்க வேண்டும். காவல் நிலையங்களைச் சுத்தம் செய்ய துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் என்றார் வி.எம்.சி. சிவக்குமார்.