Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பிளாஸ்டிக் கழிவுகளை விலைக்கு வாங்கும் திட்டம்: சென்னை மாநகராட்சி அறிமுகம்

Print PDF

தினமலர் 07.04.2010

பிளாஸ்டிக் கழிவுகளை விலைக்கு வாங்கும் திட்டம்: சென்னை மாநகராட்சி அறிமுகம்

சென்னை : குப்பை கொட்டும் இடங்களில் சேரும் குப்பையின் அளவை குறைக்கும் வகையில், மறு சுழற்சிக்கு பயன்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சி பணம் கொடுத்து வாங்க திட்டமிட்டுள்ளது.சென்னை நகரில் குப்பை அளவை குறைக்க மாநகராட்சி, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.மக்காத குப்பையை மறு சுழற் சிக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற் கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள் ளது. இது தொடர்பாக, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல வகைகளில் பிரசாரங் களை செய்து வருகிறது.குடிசைப் பகுதிகளில் குப்பைகளை தனித்தனியே போட்டு வைக்க, நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குப்பை கூடைகள் வழங் கப்பட்டது. கீழ்ப்பாக்கம் மண்டலத்தில், அண்ணா நகர் பகுதியில் இரண்டு வார்டுகளில் தனியார் நிறுவனம் வீடுதோறும் பைகள் கொடுத்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பேப்பர் கழிவுகளை தனியே போடும் படி வலியுறுத்தப்படுகிறது.வாரத்திற்கு ஒரு முறை தனியார் நிறுவன ஊழியர்கள் வீடு வீடாக சென்று, பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கழிவுகளை எடை கணக்கில் பணம் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். அதுபோல், அடையாறு மண்டலத்தில் துப்புரவு பணி செய்யும் நீல் மெட்டல் நிறுவனம், குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கி வருகிறது.இது போல் பிளாஸ்டிக் கழிவுகளை தனியே வாங்கி மறு சுழற்சிக்கு பயன் படுத்துவதால் குப்பை அளவு வெகுவாக குறைகிறது. இதுனால், நகரம் முழுக்க குப்பையை தரம் பிரித்து கொடுக்க வலியுறுத்துவதோடு பிளாஸ்டிக் கழிவுகளை பணம் கொடுத்து வாங்கவும் திட்டமிட்டுள் ளது.இதற்கு முன்னோட்டமாக மாநகராட்சி 703 வது வார்டு அமைந்தகரை, முத்துவிலாண்டி காலனியில் பிளாஸ் டிக் கழிவுகளை தனியே போட்டு வைக்க, வீடு தோறும் இலவசமாக பை கொடுக்கும் திட்டத்தை மேயர் சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

மேயர் மற்றும் கமிஷனர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் முத்துவிலாண்டி காலனியில், வீடு வீடாக சென்று குப்பை தரம் பிரித்து கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை தனியே போட்டு வைக்க அறிவுறுத் தினர். கழிவுகளை சேர்க்கும் பைகளை பொதுமக்களிடம் வழங்கினார்.அப்போது மேயர் சுப்ரமணியன் கூறியதாவது:குப்பையை தரம் பிரித்து சேகரிக் கப்படும், பிளாஸ்டிக் மற்றும் காகித கழிவுகளை விலை கொடுத்து வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை தனியே சேகரித்து வைத்திருந்தால், மாநகராட்சி ஊழியர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை வீடுவீடாக சென்று பிளாஸ்டிக் கழிவுகளை, எடை போட்டு கிலோ 2 ரூபாய்க்கு வாங்கிக் கொள்வர்.முதற்கட்டமாக தற்போது இந்த வார்டில் 850 வீடுகளுக்கு பைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இது போல், அனைத்து மண்டலங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் பணம் கொடுத்து வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்காக வீடுதோறும் இலவசமாக பைகள் வழங்கப்படும்.நகரின் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் பிரதானமாக இடம் பெறும் வகையில், எழுத மே 31 வரை கெடு விதிக்கப் பட்டுள்ளது. மே மாத்திற்குள் வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளில் தமிழில் பிரதானமாக இடம் பெறாவிட்டால், அப்படிப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்படும்.இவ்வாறு மேயர் கூறினார்.

Last Updated on Wednesday, 07 April 2010 06:36