Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

"வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் 2 மடங்கு மரக்கன்று நட வேண்டும்'

Print PDF

தினமணி 21.04.2010

"வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் 2 மடங்கு மரக்கன்று நட வேண்டும்'

கோவை, ஏப். 20: சாலைவிரிவாக்கப் பணிகளின் போது வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதில் 2 மடங்கு மரக்கன்று நட வேண்டும் என்று, மாநகராட்சி சுற்றுச்சூழல் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி சுற்றுச்சூழல் கூட்டம், மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை மேயர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற குழு உறுப்பினர்கள் பேசியது:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதை ஒட்டி, நகரில் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள சாலையோரக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.

திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் வெளியாகும் கழிவுகளை தரம்பிரித்து குப்பைத் தொட்டியில் போட அறிவுறுத்த வேண்டும். 20 மைக்ரான் எடைக்கு குறைவான ஒருமுறை பயன்படுத்தக்கூடிய தட்டுகள், தம்பளர்களை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை நகரில் சாலைவிரிவாக்கப் பணிகளின்போது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் 2 மடங்கு மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோழி, ஆடு, மாட்டு இறைச்சிக் கழிவுகளை பயோ பேக் மூலம் மாநகராட்சி வசம் ஒப்படைக்க இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும், என்றனர்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் வே.சாந்தா, கல்விக்குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம், சுகாதாரக் குழுத் தலைவர் நாச்சிமுத்து, ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர் க.காளிதாசன், பாஸ்கர் உள்பட பலர்

Last Updated on Wednesday, 21 April 2010 10:42