Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சென்னையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: மாநகராட்சி ஒப்புதல்

Print PDF

தினமலர் 30.04.2010

சென்னையில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை: மாநகராட்சி ஒப்புதல்

சென்னை : சென்னை நகரில் ஒருமுறை உபயோகப்படுத்தப்படும், 'பிளாஸ்டிக்' பொருட்களை தடை செய்ய மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மேயர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை மாநகராட்சி கூட்டம் நேற்று நடைபெற்றது. மேயர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்த கூட்டத்தில் 76 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டம் முடிந்த பின், மேயர், நிருபர்களிடம் கூறியதாவது:சென்னை நகரில், ஒருமுறை உபயோகப்படுத்தப்படும் 20 'மைக்ரான்' அளவுள்ள பிளாஸ்டிக் பொருள் களை முற்றிலும் தடை செய்ய மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்கு அரசின் அனுமதி கிடைத் ததும், 20 மைக்ரான் அளவுள்ள பிளாஸ்டிக்கில் தயார் செய்து விற்கப் படும் குடிநீர் பாக் கெட்டுகள், குளிர்பானங்கள் தடை செய்யப் படும். தற்போது விற்கப் படும் குடிநீர் பாக்கெட்களில் உள்ள தண்ணீர், சுத்திகரிக்கப்படாத நிலையில், 'கோலிபாம் பாக்டீரியா' மலக் கழிவுகள் கலந்திருப்பதும் கண்டுபிடிக்கப் பட்டது. இதனால், பெரிய அளவில் சுகாதார சீர்கேடு ஏற்படும் என்பதால், குடிநீர் பாக்கெட்கள் விற்பது தடை செய்யப்பட உள்ளது.மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தயாரித்து, பாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் ரொட்டி, கேக், பிஸ்கட் போன்ற உணவு பண்டங்களில் பெரிய அளவில் தமிழில், தயாரிக்கப்பட்ட நாள், உபயோகிக்க கடைசி நாள் மற்றும் தயாரிப்பாளர் முகவரி, உணவில் உள்ள மூலக்கூறுகளை விவரமாக அச்சிட வேண்டும். இவ்விவரங்கள் இல்லாத உணவுப்பொருட்கள் தடை செய்யப்படும்.மாம்பலம் - நந்தனம் நீர்ப்பிடிப்பு பகுதியில், ஜவகர்லால் நேரு நகர்ப் புற புனரமைப்பு திட்டத்தின் கீழ், 100 கோடியே 60 லட்ச ரூபாய் மதிப் பீட்டில் மழைநீர் வடிகால் அமைக்கவும், மத்திய பக்கிங்காம் கால்வாய் நீர்பிடிப்பு பகுதியில், 38 கோடியே 15 லட்ச ரூபாய் மதிப் பீட்டில் மழைநீர் வடிகால் கால்வாய் அமைக்கவும், தெற்கு பக்கிங்காம் கால்வாயின் நீர்பிடிப்பு பகுதியில், 34 கோடியே 43 லட்ச ரூபாய் மதிப் பீட்டில் மழைநீர் வடிகால் கால்வாய் கட்ட ஒப்பந் தங்கள் கொடுக்க அனுமதி கொடுக் கப்பட்டுள்ளது.

சென்னை நகரில், நான்கு மண்டலங்களில் துப்புரவு பணி செய்யும், 'நீல் மெட்டல் பனால்கா' நிறுவனம், சரிவர பணியை செய்யவில்லை என்று புகார்கள் வருகின்றன.பலமுறை எச்சரித்தும், சட்டபூர்வமாக எச்சரிக்கை, 'நோட்டீஸ்' கொடுத்தும் பலனில்லை. இதனால், அந்த நிறுவனத்திடமிருந்து ஒரு மண்டலத்தின் துப்புரவு பணியை திரும்ப பெறுவது என மாநகராட்சி முடிவெடுத்துள்ளது. அதற்குள், துப்புரவு பணி செய்ய தேவையான ஊழியர்கள் மற்றும் வாகன தளவாடங்களை தயார் செய்து கொண்டு, ஒரு மண்டலத்தின் துப்புரவு பணி திரும்ப பெறப்படும் என்றார்.

Last Updated on Friday, 30 April 2010 05:51