Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர்      14.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ஊத்துக்கோட்டை : பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவியரின் விழிப்புணர்வு பேரணி நடந்தது.ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், பிளாஸ்டிக் பயன்படுத்துவதை தடை விதிக்க வேண்டும் என, கடந்த ஜூலை 16ம் தேதி நடந்த பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, செப்., 15 முதல் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

இதுகுறித்து, ஆங்காங்கே விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலகைகள் வைக்கப் பட்டு உள்ளன. மேலும், அரசுப் பள்ளி மாணவியரின் விழிப்புணர்வு பேரணியும் நேற்று நடந்தது. பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் துவக்கி வைத்தார்.பெண்கள் பள்ளியில் துவங்கிய பேரணி, பஜார் வீதி வழியாக சென்று பேரூராட்சி அலுவலகத்தில் முடிந்தது. பேரணியில் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், மண் வளம் காப்போம் போன்ற பதாகைகளை ஏந்திக் கொண்டு மாணவியர் சென்றனர். இதில், துணைத் தலைவர் ஷேக்தாவூத் மற்றும் கவுன்சிலர்கள், பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்

Print PDF

தினமலர்           12.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு வீதி நாடகம்

அவிநாசி : அவிநாசி புதிய பஸ் ஸ்டாண்டில்,   பிளாஸ்டிக்   ஒழிப்பு   விழிப்புணர்வு   வீதி நாடகம் நடந்தது.அவிநாசி பேரூராட்சி மற்றும் "   ஹேண்ட் இன் ஹேண்ட்' சார்பில்   பிளாஸ்டிக் ஒழிப்பு வீதி நாடகம் நடந்தது. பேரூராட்சி தலைவி ஜெகதாம்பாள்  தலைமை வகித்தார்.துணை தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். திருச்சி பாரதி கலைக்குழுவினர்,பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நாடகம், நாட்டியத்தை நடத்தினர்." ஹேண்ட்   இன்  ஹேண்ட்'    நிறுவன    பொறுப்பாளர்  முத்து பேசுகையில்,    "  வெப்பமயமாதல்      காரணமாக,    ஓசோன்    படலத்தில்     ஓட்டை    விழுந்து வருகிறது.""பூமியில் எரிக்கப்படும் பிளாஸ்டிக் பொருட்களால் நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்கள் வெளியாகி, மனிதனுக்கு புற்றுநோயையும், ஓசோனில் ஓட்டையையும் ஏற்படுத்துகின்றன

."பிளாஸ்டிக் ஒழிப்புஎன்பது ஒவ்வொரு வீட்டில் இருந்தும் துவங்க வேண்டும். அதுவே உண்மையான விழிப்புணர்வு,'' என்றார்.

Last Updated on Monday, 13 August 2012 06:32
 

முசிறி, மண்ணச்சநல்லூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்     11.08.2012

முசிறி, மண்ணச்சநல்லூரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

தா.பேட்டை, : முசிறியில் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி மற்றும் பேரணி நடந்தது. பேரூராட்சி தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். செயல் அலுவலர் முத்துகுமார், பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். மகளிர் சுயஉதவி குழுக்கள், பிளாஸ்டிக் தீமைகள் குறித்த கோஷங்களுடன் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்றனர். பின்னர் பிளாஸ்டிக் ஒழிப்பு மனித சங்கிலி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. பேரூராட்சி தலைவர் உள்பட பேரூராட்சி உறுப்பினர்கள் மற்றும் முசிறி அமலா பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் துறையூர் ரோட்டில் கைகோர்த்து நீண்ட வரிசையாக  நின்று விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மண்ணச்சநல்லூர்: மண்ணச்சநல்லூரில் நடந்த பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதசங்கிலி ஊர்வலத்தை பேரூராட்சி தலைவர் கீதாஸ்ரீதரன் தொடங்கி வைத்தார். நிர்வாக அதிகாரி சீனிவாசன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி துணைதலைவர் சேகா, வார்டு உறுப்பினர்கள், பள்ளி மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினகரன்     11.08.2012
 


Page 36 of 135