Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி              11.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

தேவகோட்டை, ஆக. 10: தேவகோட்டையில் நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.தேவகோட்டை ஆர்ச் அருகில் துவங்கிய இப்பேரணிக்கு காரைக்குடி எம்.எல்.ஏ சோழன். சித. பழனிச்சாமி துவக்கி வைத்து தலைமையேற்று சென்றார்.பேரணி ஆர்ச் துவங்கி நகரின் முக்கிய தெருக்கள் வழியாக வந்து நகராட்சியை அடைந்தது.பேரணியில் சென்றவர்கள் பிளாஸ்டிக்கை ஒழிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பதாகைகளை ஏந்தி முழக்கமிட்டு சென்றனர்.

பேரணியில் நகர்மன்றத் தலைவி சுமித்ராரவிக்குமார், துணைத் தலைவர் சுந்தரலிங்கம், ஆணையர் பொறுப்பு செல்வராஜ், நகர்மன்ற உறுப்பினர்கள் போஸ், கேசவன், கமலக்கண்ணன், பூக்கடை சரவணன், முத்தழகு, ரமேஷ், பாலா, பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 11 August 2012 08:53
 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர்     10.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

சென்னிமலை: சென்னிமலை டவுன் பஞ்சாயத்து பகுதியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து பிரச்சாரங்கள் பல்வேறு வகையில் நடத்தப்படுகிறது.

இதன் ஒருபகுதியக, பள்ளி மாணவ, மாணவியர் கலந்து கொண்ட விழிப்புணர்வு பேரணி நடந்தது. டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் துவங்கிய பேரணி, நகரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து குமரன் சதுக்கத்தில் நிறைவு பெற்றது. பிளாஸ்டிக் தீமை குறித்தும், பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்த கூடாது எனவும் பள்ளி மாணவ, மாணவியர் வலியுறுத்தினர்.பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, பேச்சுப்போட்டி ஆகிய போட்டிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது. சென்னிமலை டவுன் பஞ்சாயத்து செயல் அலுவலர் தெய்வசிகாமணி தலைமை வகித்தார்.

பரிசுகளை டவுன் பஞ்சாயத்து தலைவர் ஜம்பு என்கிற சண்முகசுந்தரம் மற்றும் துணைத் தலைவர் தெய்வசிகாமணி ஆகியோர் வழங்கினர். வார்டு கவுன்சிலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Last Updated on Saturday, 11 August 2012 08:53
 

மகளிர் குழுக்களுக்கு அரசு உத்தரவு

Print PDF

தினமலர்    09.08.2012

மகளிர் குழுக்களுக்கு அரசு உத்தரவு

தேவதானப்பட்டி: அனைத்து பேரூராட்சிகளிலும்,தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பேரூராட்சி கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றி, விழிப்புணர்வு பிரச்சாரம் நடக்கிறது.பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள, மகளிர்குழுக்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். இயற்கையை பாதிக்காத பொருட்களைபயன்படுத்த உறுதி மொழி எடுத்துக் கொள்ளவும் அரசு உத்திவிட்டுள்ளது.இது தொடர்பாக ஒவ்வொரு மகளிர்குழுவும்,  கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். 40   மைக்ரானுக்கு   கீழ்   உள்ள    பிளாஸ்டிக்   பொருட்களை   மகளிர்  குழுக்கள் அமைந்துள்ள பகுதியில் முற்றிலும் ஒழிப்பதற்கு,   பொதுமக்களிடம்   விழிப்புணர்வை   ஏற்படுத்த   வேண்டும். மகளிர்  குழுக்கள்  தீர்மானம்   நிறைவேற்றி,   பிரச்சாரம்    செய்து    அந்தந்த    பேரூராட்சிகளில் அறிக்கை தரவேண்டும், என அரசு உத்தரவிட்டுள்ளது.

Last Updated on Friday, 10 August 2012 05:50
 


Page 37 of 135