Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம்

Print PDF

தினமலர்    09.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு ஊர்வலம்

பண்ணைக்காடு :   பண்ணைக்காடு    பேரூராட்சியில்   பிளாஸ்டிக்   ஒழிப்பு   ஊர்வலம்  தலைவர் சண்முகசுந்தரம்      தலைமையில்   நடந்தது.  நாற்பது   சதவிகிதம்      மைக்ரான்     குறைவான பிளாஸ்டிக்கால் சுற்றுசூழலுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து சுய உதவிக்குழுவினர்,  வியாபாரிகள், வர்த்தகர்கள்,   மாணவர்களுக்கான     விழிப்புணர்வு    ஏற்படுத்தப்பட்டது.      செயல்   அலுவலர் வெங்கட்ரமணன் மற்றும் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

 

பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்

Print PDF

தினமலர்    09.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் நகராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த ஆலோசனை ட்டம் டந்தது.தெற்கு பிச்சாவரத்தில்மாணவர்களுக்கு பயிற்சிசிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக வேளாண் துறை மாணவர்கள் கிராமத்தில் தங்கி பயிற்சி பெறும் திட்டத்தின் கீழ் தெற்கு பிச்சாவரம் கிராமத்தில் பயிற்சி மேற்கொண்டனர்.ஊராட்சித் தலைவர் கேசவன் தலைமை தாங்கினார். வேளாண் துறை நான்காம் ஆண்டு மாணவர் சதீஷ்குமார் வரவேற்றார். பல்கலைக்கழக உதவி பேராசிரியர் ராஜ்பிரவின் பயிற்சி குறித்து விளக்கிப்பேசினார்.தொடர்ந்து பிச்சாவரம் பகுதி விவசாயிகள், பல்கலைக் கழக மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதில் விவசாயத் தொழிலில் ஏற்படும் பிரச்னைகள், நோய் தாக்கல், உரம் இடுதல், தண்ணீர் மேலாண்மை போன்றவை குறித்த சந்தேகங்களுக்கு பயிற்சி மாணவர்கள் பதில் அளித்தனர். தோட்டக்கலை மாணவர்கள் சார்பில் விவசாயிகளுக்கு இடுபொருள்களை விவசாயிகள் சங்கச் செயலர் கண்ணன் வழங்கினார்.கவுன்சிலர் சாமிக்கண்ணு உள்ளிட்ட கிராம முக்கியஸ்தர்கள், தோட்டக்கலை விவசாயிகள், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்றனர்.

 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

Print PDF

தினமணி         08.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி

குளித்தலை, ஆக. 7: கரூர் மாவட்டம், மருதூர் பேரூராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பது விழிப்புணர்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பேரூராட்சிகளின் இயக்குநர் உத்தரவின் பேரில் நடைபெற்ற பேரணியை, பேரூராட்சித் தலைவர் தொடக்கிவைத்தார். செயல் அலுவலர் க. சண்முகம், துணைத் தலைவர் தி. அம்பிகா, வார்டு உறுப்பினர்கள், அலுவலர்கள், பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேட்டுமருதூரில் உள்ள நடேசன் அரசு உதவி பெறும் பள்ளியில் இருந்து புறப்பட்ட பேரணி, முக்கியத் தெருக்கள் வழியாகச் சென்று மீண்டும் பள்ளியிலேயே முடிந்தது.

பேரணியில் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு, அவற்றைத் தவிர்க்கும் முறை உள்ளிட்டவை குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை மாணவர்கள் ஏந்திச் சென்றும், கோஷங்கள் எழுப்பியும், துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு விநியோகித்தும் சென்றனர்.
மேலும் பிளாஸ்டிக் பொருள்களின் தீங்கு குறித்து மேட்டுமருதூர், மருதூர் பகுதிபள்ளிகளில் நடைபெற்ற போட்டிகளில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

 


Page 38 of 135