Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

Print PDF

தினமணி         08.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

செஞ்சி, ஆக. 7: செஞ்சியில் பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும் மனித சங்கிலி திங்கள்கிழமை நடைபெற்றது.

÷இதில் சுற்றுப்புற சுகாதாரச் சீர்கேடுகளை விளைவிக்க மூல காரணமாக விளங்கும் பிளாஸ்டிக் குப்பைகளை அறவே அகற்ற வேண்டும். பிளாஸ்டிக் பைகள் உள்ளிட்ட ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எரியும் பொருள்களை பொதுமக்கள் பயன்படுத்தக் கூடாது என வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் செஞ்சி காந்தி பஜாரில் நடைபெற்றது.

÷மனித  சங்கிலியில்  எம்எல்ஏ  அ.கணேஷ்குமார் , பேரூராட்சித்  தலைவர்  செஞ்சி  மஸ்தான், பேரூராட்சி செயல்  அலுவலர்  நா. அன்பழகன்,   செஞ்சிக்கோட்டை  ரோட்டரி  சங்கத்  தலைவர் கே.ஜி.ரமேஷ்பாபு, முன்னாள் தலைவர் குறிஞ்சிவளவன், காந்தி சேவா சங்கத் தலைவர் ரமேஷ் பாபு, ஜெ.சி.ஐ. தலைவர் சௌகத் அலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

அவிநாசியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்   08.08.2012

அவிநாசியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அவிநாசி, : அவிநாசி பேரூராட்சி மற்றும் சேவா பாரதி தென்தமிழ்நாடு அமைப்பின் சார்பாக அவிநாசியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  அவிநாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் துவங்கிய பேரணியை பள்ளி தலைமையாசிரியர் சரவணபவன் துவக்கி வைத்தார்.  அவிநாசி பேரூராட்சி தலைவி ஜெகதாம்பாள் தலைமை வகித்தார். துணைத் தலைவர் மூர்த்தி முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ மகாலிங்கம், சேவா பாரதி வட்டார பொ றுப்பாளர் ஹரிஹரன், அவிநாசி பேரூராட்சி கவுன்சிலர்கள், நல்லது நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் ரவிக்குமார், அரசு மேல்நிலைப்பள்ளி மற்று ம் உயர் நிலைப்பள்ளி மாணவ மாணவிகள், ராயர் கல்வி நிலைய மாணவ மாணவிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினர் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.  கோவை மெயின் ரோடு, கிழக்கு ரத வீதி, கச்சேரி வீதி, சேயூர் ரோடு, வள்ளுவர் வீதி வழியாக பேரணி நடைபெற்றது.  பேரணியில் பிளா ஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
 

பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர்                    08.08.2012

பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

அம்பாசமுத்திரம் : கல்லிடைக்குறிச்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி, மனித சங்கிலி நடந்தது.

கல்லிடைக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாக பேரணி நடந்தது. கல்லிடைக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து தலைவர் இசக்கிபாண்டியன் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ராஜமாணிக்கம், துணை தலைவர் முத்துகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

புது அம்மன் கோயிலில் இருந்து புறப்பட்ட பேரணி 6ம் நம்பர் ரோடு, மாதாங்கோயில் தெரு, மெயின் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, லட்சுமிபுரம் வழியாக அரசு மேல்நிலைப் பள்ளியை வந்தடைந்தது. அங்கு மனித சங்கலியும் நடந்தது.

கல்லிடைக்குறிச்சி டவுன் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆறுமுகம், பாலசுப்பிரமணியன், ராமசந்திரன், சாந்தா மாரியப்பன், முன்னாள் தலைவர் சுப்பிரமணியன், நகர காங்கிரஸ் தலைவர் லஷ்மன்யாதவ், அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர் ஹரிஹரசுப்பிரமணியன், அரசு மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.கல்லிடைக்     குறிச்சி டவுன் பஞ்சாயத்து சுகாதார ஆய்வாளர் கந்தசாமி நன்றி கூறினார்.

 


Page 39 of 135