Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

கீழ்குந்தா பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

Print PDF

தினமலர்                    08.08.2012

கீழ்குந்தா பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு

மஞ்சூர் : கீழ்குந்தா பேரூராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், கீழ்குந்தா பேரூராட்சி சார்பில், பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது. மஞ்சூர் மேல்பஜாரில் துவங்கிய பேரணி, கீழ்பஜார், கீழ்குந்தா சாலை வழியாக சென்று மணிக்கல் மட்டத்தில் நிறைவடைந்தது. பேரணியில்,பிளாஸ்டிக் பயன்படுத்துவதால் ஏற்படும் தீங்கு குறித்து, பள்ளி மாணவர்கள் தட்டிகள் ஏந்தி, துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.இதில், கீழ்குந்தா பேரூராட்சி தலைவர் ஜெயா தலைமை வகித்தார். செயல் அலுவலர் மணிகண்டன், மஞ்சூர் நகர வியாபாரிகள் சங்க தலைவர் சிவபிரகாசம், அனைத்து கடைக்காரர்கள் சங்க தலைவர் ஆறுமுகம், அரசு மகளிர் உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் அசோகன், உதவி தலைமையாசிரியர் ஜெபராணி, பேரூராட்சி துணைத்தலைவர் போஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

அரியப்பம்பாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

Print PDF

தினமலர்                    08.08.2012
அரியப்பம்பாளையத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு பேரணி

சத்தியமங்கலம்: அரியப்பம்பாளையம் டவுன் பஞ்சாயத்து சார்பாக பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.இப்பஞ்சாயத்து பகுதியில், 40 மைக்கரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடந்தது.பேரணியை, அரியப்பம்பாளையம் டவுன் பஞ்சாயத்து தலைவர் துரைசாமி துவக்கி வைத்தார்.செயல் அலுவலர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் துவங்கிய பேரணி, ஈரோடு ரோடு வழியாக, புளியம்பட்டி பிரிவில் முடிந்தது.பேரணியில் பொதுமக்கள், டவுன் பஞ்சாயத்து அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Last Updated on Wednesday, 08 August 2012 06:18
 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமலர்                    08.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

ரூர்: கம்பைநல்லூர் டவுன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் தடை செய்யப்பட்பிடுள்ளது.பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகளை விளக்கியும்,பிளாஸ்டிக் ஒழிப்பது குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது.கம்பைநல்லூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் பங்கேற்ற பேரணியை டவுன் பஞ்சாயத்து சேர்மன் தனசேகரன் துவக்கி வைத்தார்.பேரணி முக்கிய வீதிகள் வழியாக டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தை அடைந்தது.துணைத்தலைவர்     கிருஷ்ணன்,   செயல்   அலுவலர்    சாந்தி,     இளநிலை    உதவியாளர் வெங்கடாசலம், தலைமையாசிரியர்  திருமுருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பிளாஸ்டிக்  ஒழிப்பு  குறித்து  சென்னை  ஜெயபால்  குழுவினரின்  நாடகம்   நடந்தது.

Last Updated on Wednesday, 08 August 2012 06:18
 


Page 40 of 135