Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மதுக்கரையில் தடை

Print PDF

தினகரன்    06.08.2012

40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களுக்கு மதுக்கரையில் தடை

கோவை,:மதுக்கரை பேரூராட்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ்ராம், கண்காணிப்பு அலுவலர் திருவாசகம் தலைமையில் வணிக, வர்த்தக நிறுவனங்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.

இந்த கூட்டத்தில் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், 40 மைக்ரான் தடிமன் அளவிற்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டது. மதுக்கரை வட்டாரத்தில் இறைச்சி கடை, மளிகை கடை, பெட்டி கடைகளில் 40 மைக்ரான் தடிமன் அளவிற்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கேரி பேக், டம்ளர் போன்றவற்றை விற்பனை செய்ய கூடாது. மீறி விற்பனை செய்தால் பறிமுதல் செய்யப்படும் என பேரூராட்சி நிர்வாகத்தினர் எச்சரித்தனர். மேலும் வணிக கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொடர்பாக ரெய்டு நடத்தவும் உத்தரவிடப்பட்டது.

 

பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம்

Print PDF

தினமலர்                      06.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரம்

சாயல்குடி:சாயல்குடியில் பிளாஸ்டிக் கழிவுகள் நாளுக்கு நாள் அதிகரித்து குவியல் குவியலாக சேர்ந்து வருகிறது. அதில் தேங்கும் நீரில் கொடிய நோய்களை பரப்பக்கூடிய கொசுக்கள் உற்பத்தி ஏராளம்.இவ்வாறு பல வகையிலும் தீங்கை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும், என பேரூராட்சி தலைவர் ராஜலட்சுமி, செயல் அலுவலர் மத்தியாஸ் ஆகியோர் பொது மக்களிடம் பிரசாரம் செய்தனர். இளநிலை உதவியாளர் பாஸ்கரபூபதி உடனிருந்தார்.

 

தாராபுரத்தில் பாலித்தீன் பைகளுக்கு தடை

Print PDF

தினகரன்            04.08.2012

தாராபுரத்தில் பாலித்தீன் பைகளுக்கு தடை

தாராபுரம்: தாராபுரம் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பிளாஸ்டிக் கப்புகள் மற்றும் 40 மைக்ரான்குறைவான பாலி த்தீன் பைகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி நகரின் பல இடங்களில் பாலித்தீன் பைகள், கப்புகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதைத் தடுக்கும் வகையில் தாராபுரம் நகர்மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில் 30 வார்டுகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆய்வு நடத்த வேண்டும். அப்போது பிளாஸ்டிக் பைகள் விற்பது கண்டறியப்பட்டால், முதல் முறை அவற்றை பறிமுதல் செய்து ரூ.100 அபராதமாக விதிக்கவும், இரண்டாம் முறை ரூ.200, மூன்றாம்முறை ரூ. 500 அபராதம் விதிக்கப்படுவதோடு நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இதற்கு மன்றம் அனுமதி வழங்கி உள்ளது. இதனடிப்படையில் இனி பாலித்தீன் பைகள் மற்றும் கப்புகள் விற்பனை செய்பவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


Page 43 of 135