Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

Print PDF

தினகரன்            04.08.2012

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கலைநிகழ்ச்சி

பவானிசாகர், : பவானிசாகர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் கவர், கப் மற்றும் விரிப்புகள் விற்பனை மற்றும் உயோகிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு குறித்த கலை நிகழ்ச்சி நேற்று முன் தினம் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. பவானிசாகர் அரசு தொடக்கபள்ளி, அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேச்சு, கட்டுரை ,மற்றும் ஓவிய போட்டிகள் நடைபெற்றன. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பேரூராட்சி தலைவர் வெங்கடாசலம், துணை  தலைவர் செல்வம் ,செயல் அலுவலர் வில்லியம் யேசுதாஸ் மற்றும் கவுன்சிலர்கள் பரிசுகளை வழங்கினர்.

 

காகிதபுரம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க முடிவு

Print PDF

தினமணி                    04.08.2012

காகிதபுரம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க முடிவு

கரூர், ஆக. 3: கரூர் மாவட்டம், காகிதபுரம் பேரூராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்க்க   விழிப்புணர்வு  நடவடிக்கைகளை  மேற்கொள்வதென முடிவு  செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் நடைபெற்ற இந்தப் பேரூராட்சியின் சாதாரணக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

காகிதபுரம்  பேரூராட்சிப்  பகுதிகளில்  பிளாஸ்டிக்  பயன்பாட்டைத்  தவிர்க்க   விழிப்புணர்வு வாசகங்கள், விளம்பரங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை வீடுகள் மற்றும் கடைகளில் வைப்பது எனவும், மேலும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.கூட்டத்துக்கு காகிதபுரம் பேரூராட்சித் தலைவர் கமலக்கண்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்பிரமணியம், செயல் அலுவலர் சௌந்திரநாயகி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் உறுப்பினர்கள் நீலாவதி, முருகையன், பொன்னுசாமி, சரசுவதி, செந்தில்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

பிளாஸ்டிக் விழிப்புணர்வு போட்டி பரிசளிப்பு விழா

Print PDF

தினமலர்                 03.08.2012

பிளாஸ்டிக் விழிப்புணர்வு போட்டி பரிசளிப்பு விழா

சத்தியமங்கலம்: பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து சார்பில் நடந்த, பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்த போட்டிகளில் வெற்றிபெற்ற பள்ளி மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கப்பட்டது.

பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து பகுதியில், 40 மைக்ரானுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, பவானிசாகர் டவுன் பஞ்சாயத்துக்குட்பட்ட அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவியருக்கு கட்டுரை, ஓவியம் மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டது. வில்லுப்பாட்டு, நாடகம், கிராமிய பாட்டு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தன.வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு பரிசு வழங்கும் விழா பவானிசாகர் டவுன் பஞ்சாயத்து அலுவலகத்தில் நடந்தது. டவுன் பஞ்சாயத்து தலைவர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். துணைத் தலைவர் செல்வம் முன்னிலை வகித்தார்.செயல்அலுவலர் வில்லியம் ஜேசுதாஸ் பரிசு வழங்கினார். கவுன்சிலர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

 


Page 44 of 135