Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

குடந்தையில் பாலீத்தீன் பைகள் பறிமுதல்

Print PDF

தினமணி                   03.08.2012

குடந்தையில் பாலீத்தீன் பைகள் பறிமுதல்

தஞ்சாவூர், ஆக. 2: தஞ்சாவூர் மாவட்டம்,  கும்பகோணம் நகரில் நகராட்சி  அலுவலர்கள் வியாழக்கிழமை பாலீத்தீன் பைகள், தேநீர் கப்புகளை பறிமுதல் செய்தனர். கும்பகோணம் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பாலீத்தீன் பைகளுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

இங்கு  தூக்கியெறியப்படும் பிளாஸ்டிக்  பொருள்கள் சாக்கடையில் சிக்கி, சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக  நகர்மன்றக் கூட்டத்தில் உறுப்பினர்கள்  புகார்  தெரிவித்தனர்.  இதையடுத்து நகர்மன்றத்  தலைவர்   ரத்னாசேகர் உத்தரவுப்படி  கும்பகோணம்    நகரில்   நாகேசுவரன் திருமஞ்சனவீதி,  பொற்றாமறைக்குளம்,  பெரியதெரு, பெரிய  கடைவீதி,   நாகேசுவரன் வடக்குவீதி  உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் நகராட்சி பொறியாளர் பாண்டுரெங்கன் தலைமையில் சோதனை நடத்தினர். இதில், ரூ. 5,000 மதிப்புள்ள பாலீத்தீன் பைகள், தேநீர் கப்புகளை பறிமுதல் செய்து அழித்தனர்.

 

அதிரடி சோதனை: பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

Print PDF

தினமலர்   02.08.2012

அதிரடி சோதனை: பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருவள்ளூர் : நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், உணவகங்கள் உள்ளிட்ட இடங்களில், சுகாதார அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தி, தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர்.திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அமல்படுத்தப் பட்டு உள்ளது. 

40 மைக்ரானுக்கு கீழே உள்ள பிளாஸ்டிக் கவர்கள், கப்புகள் உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்த, தடை விதிக்கப்பட்டு உள்ளது.தடையை மீறி சில கடைகளில் இவற்றை பயன்படுத்தி வருவதும், விற்பனை செய்து வருவதும் குறித்து, நகராட்சி நிர்வாகத்துக்கு புகார்கள் வந்தன.நகராட்சி ஆணையர் சரவணக்குமாரின் உத்தரவுப்படி, சுகாதார அலுவலர் பாலசுப்பிரமணியம், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய மாவட்டப் பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் நகராட்சி துப்புரவு ஆய்வாளர்கள் நேற்று பஜார் வீதி, கொண்டமாபுரம், சினிமா லேன், சி.வி.நாயுடு சாலை, திரு.வி.க., பஸ் நிலையம் ஆகிய இடங்களுக்குச் சென்று, அங்குள்ள உணவகங்கள், தேநீர் விடுதிகள், மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் உள்ளிட்ட பல்வேறு கடைகளில் சோதனை நடத்தினர்.அப்போது, 40 மைக்ரானுக்கு கீழே உள்ள பிளாஸ்டிக் பைகள், கப்புகள், கேரி பேக்குகள் ஆகியவை பயன்படுத்தப்பட்டு வருவதைக் கண்டுபிடித்து, பறிமுதல்செய்தனர்.மேற்கொண்டு இப்பொருட்களை பயன்படுத்தினால் அபராதம் விதிப்பதோடு, கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என, அலுவலர்கள் எச்சரித்தனர்.

 

1,500 மரக்கன்றுகள் நட போளூர் பேரூராட்சி முடிவு

Print PDF

தினமணி                 01.08.2012

1,500 மரக்கன்றுகள் நட போளூர் பேரூராட்சி முடிவு

போளூர்,ஜூலை 31: போளூர் பேரூராட்சியில் 1,500 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன.பேரூராட்சி அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை பேரூராட்சித் தலைவர் பாபு தலைமையில் நடைபெற்ற மன்றக் கூட்டத்தில், இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அரசு மகளிர், ஆண்கள் பள்ளி வளாகங்கள், செல்லியம்மன் கோயில் தெரு, அல்லி நகர் குளம், ரயில்வே ஸ்டேஷன் பின்புறம், வசந்தம் நகர், கல்லறை, பெருமாள் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் இம்மரக்கன்றுகள் நடப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

செயல் அலுவலர் நிஷாத், துணைத் தலைவர் செல்வன், மன்ற உறுப்பினர்கள்  பார்த்திபன், ராம்மோகன், சுந்தர், கோபி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 


Page 45 of 135