Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அதிரடி திட்டம்

Print PDF

தினமலர்      01.08.2012

பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தினால் அதிரடி திட்டம்

திருப்பூர் : "தடை  ய்யப்பட்ட பிளாஸ்டிக்  பொருட்களை,  கடைகளில்   பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு , மாநகராட்சிக்கு  தகவல்  தெரிவிக்க வேண்டும்.  இல்லையெனில்,  அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து  தவறு செய்தால்  நீதிமன்றத்தில் வழக்கு  தொடரப்படும்,' என, ஒவ்வொரு கடைக்கும்  நோட்டீஸ் வினியோகிக்க  மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி  பகுதியில்  நாளொன்றுக்கு  550 மெட்ரிக்  டன் குப்பை உருவாகிறது. அவற்றில், 500 டன் அளவுக்கு சேகரிக்கப்படுகிறது. இதில், பெரும்பாலானவை பிளாஸ்டிக் கழிவுகளாகவே உள்ளன. அதனால், ஒருமுறைக்கு மேல் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு தொடர்கிறது.

அதிகாரிகள் தரப்பில் நடவடிக்கை   இல்லாததால் எல்லை மீறியும் செல்கிறது. "டாஸ்மாக்' மதுக்கடை   பார்களில்   பிளாஸ்டிக்     டம்ளர்கள்  பயன்படுத்தப்படுகின்றன. டீக்கடைகளில் பார்சல் டீ,  பிளாஸ்டிக்கவரில்  வழங்கும்   புதிய  நடைமுறை  பின்பற்றப்படுகிறது. ஓட்டல்களில்  சாம்பார், சட்னி  வகைகள்  பிளாஸ்டிக் கவரில்  வழங்கப்படுகிறது.  சிறிய உணவகங்கள், மெஸ்களில் உணவு பொட்டலங்கள்பார்சல் செய்ய, இலைகள் பயன்படுத்தாமல், பிளாஸ்டிக் ஷீட் பயன்படுத்தப்படுகிறது. 

இத்தகைய கழிவுகளை குப்பையில் வீசுவதோடு, சாக்கடை கால்வாயிலும் கொட்டுகின்றனர். அவை அடைத்துக் கொள்வதால், கழிவு நீர் செல்ல வழியில்லாமல் தேங்குகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, ஒரு முறைக்கு மேல் பயன்படுத்த முடியாத பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு மற்றும் விற்பனையை மீண்டும் தடை செய்து உத்தரவிட, மாநகராட்சி முடிவு செய்துள்ளது. இம்முறை கடுமையான நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, மாநகராட்சி பொது சுகாதாரப் பிரிவு தயாரித்துள்ள நோட்டீஸ்:

உணவுப்பொருள் விற்பனை செய்யும் உங்களுக்கு சொந்தமான கடையில்,
மாநகராட்சியால் தடை செய்யப்பட்ட ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பை, பிளாஸ்டிக் கப்களில் சூடான உணவுப் பொருட்களை அடைத்து, பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், மக்களுக்கும், பொது சுகாதாரத்துக்கும்குந்தகம் ஏற்படும்; சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாகி, தொற்று மற்றும் தொற்றா நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
இந்த நோட்டீஸ் கிடைத்த மூன்று நாட்களுக்குள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு மாற்று ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்வதில்லை எனமாநகராட்சிக்கு எழுத்து மூலம் தெரிவிக்க வேண்டும். தவறும்பட்சத்தில், அப்பொருட்களை பறிமுதல் செய்வதுடன், பிளாஸ்டிக் கழிவு (மேலாண்மை மற்றும் கையாள்தல்) விதி 2011ன்படி, அபராதத் தொகை வசூலிக்கப்படும். தமிழ்நாடு பொது சுகாதார சட்டத்தின்படியும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும், என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

பாலிதீன் பைகளை ஒழிக்க சின்னாளபட்டி பேரூராட்சி நடவடிக்கை

Print PDF

தினமணி                30.07.2012

பாலிதீன் பைகளை ஒழிக்க சின்னாளபட்டி பேரூராட்சி நடவடிக்கை

திண்டுக்கல், ஜூலை 29:  சின்னாளபட்டி பேரூராட்சியில் பாலிதீன் பைகளை ஒழிக்க பேரூராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை எடுத்து ஞாயிற்றுக்கிழமை 50 கிலோ பாலிதீன் பைகளை பறிமுதல் செய்தது.

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் ஒன்றியம் சின்னாளபட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பாலிதீன் பைகளின் பயன்பாடு அதிக அளவில் இருந்து வருவதைத் தொடர்ந்து பேரூராட்சி செயல்அலுவலர் கோட்டைச்சாமி சின்னாளபட்டி முழுவதும் சோதனை  மேற்கொண்டார். கறிக்கடைகள், பலசரக்கு கடைகள் மற்றும் அண்ணா தினசரி மார்க்கெட் பகுதிகளில் மேற்கொண்ட சோதனையில் சுமார் 50 கிலோ பிளாஸ்டிக்  பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.  இதுகுறித்து செயல் அலுவலர் கோட்டைச்சாமி கூறுகையில், பிளாஸ்டிக் பயன்பாடுகளை அறவே ஒழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளில் 10 சதவீதம் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன. அவற்றை தரம் பிரித்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளாக மாற்ற கடும் சிரமப்படவேண்டியுள்ளது. பொதுமக்கள் துணி மற்றும் பேப்பர் பைகளை பயன்படுத்தினால் சுகாதாரத்திற்கு வழிவகுக்கும்.

பொதுமக்கள் ஒத்துழைப்பு தந்தால் பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நகரமாக சின்னாளபட்டி மாறிவிடும்.  இனி விடுமுறை நாள்களில் பிளாஸ்டிக் ஒழிப்புக்கான அதிரடி சோதனை நடத்தப்படும் என்றார்.

பிளாஸ்டிக் பைகளில் ஆட்டு இறைச்சிகளை  விற்பனை செய்து வந்த கறிக்கடை உரிமையாளர்கள் ஞாயிற்றுக்கிழமை வாழை இலையில் ஆட்டு இறைச்சிகளை கொடுத்தது பொதுமக்களை வியப்பில் ஆழ்த்தியது.

 

சென்னையில் தடை செய்யப்பட்ட 18 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

மாலை மலர்      28.07.2012

சென்னையில் தடை செய்யப்பட்ட 18 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் தடை செய்யப்பட்ட
18 டன் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, ஜூலை 28-சென்னையில் 40 மைக் ரான் அளவுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை விற்க கூடாது என்று மாநகராட்சி தடை செய்துள்ளது. இது தொடர்பாக மேயர் சைதை துரைசாமி தலைமையில் அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் 40 மைக்ரானுக்கு கீழுள்ள பிளாஸ்டிக் கேரி பேக்குகளை வாங்குவது, விற்பது, பயன்படுத்துவது இல்லை என்று முடிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் கொத்தவால்சாவடியில் உள்ள ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் ஏராளமாக பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக மாநகராட்சிக்கு தகவல் வந்தது.

இதையடுத்து 5-வது மண்டல சுகாதார அலுவலர் மணி, துப்புரவு ஆய்வாளர் வாசுதேவன் ஆகியோர் கொத்தவால்சாவடி, டேவிட்சன் தெருவில் உள்ள தனியார் டிரான்ஸ் போர்ட் குடோனில் சோதனை போட்டனர். அங்கு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் 355 மூட்டைகளில் இருந்ததை கண்டு பிடித்தனர். 18 டன் எடையுள்ள பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.21.3 லட்சம் ஆகும்.

சுற்றுச் சூழலுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் 40 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகளை வியாபாரிகள் வாங்குவது, விற்பது, உபயோகப்படுத்துவது சட்டப்படி குற்றம். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகராட்சி எச்சரித்துள்ளது.

 


Page 47 of 135