Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

அறந்தாங்கியில் பாலிதீன் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி               27.07.2012

அறந்தாங்கியில் பாலிதீன் பொருள்கள் பறிமுதல்

அறந்தாங்கி, ஜூலை 26: அறந்தாங்கி நகராட்சிப் பகுதிகளில் 300 கிலா தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகள் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.றந்தாங்கி நகராட்சி பகுதிகளில் 40 மைக்ரான் அளவிற்குள்பட்ட பாலிதீன் பொருள்களைப் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கடைகளில் தடையை மீறி, இந்தப் பொருள்களைப் பயன்படுத்தி வருவதாக நகராட்சி அலுவலர்களுக்கு வந்த தகவலின் பேரில் வியாழக்கிழமை திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.அப்போது, 300 கிலோ எடையுள்ள பாலிதீன் பைகள், 7 ஆயிரம் கப்புகள் ஆகியவற்றை உணவகங்கள் மற்றும் டாஸ்மாக் பார்கள் உள்ளிட்ட கடைகளில் நகராட்சி அலுவலர்கள் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு ரூ. 25 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் பெரிய கடைகளுக்கு ரூ. 500, சிறிய கடைகளுக்கு ரூ. 100 என மொத்தம் ரூ. 3200 அபராதம் வசூலிக்கப்பட்டது.நகராட்சி ஆணையர் ப. அசோக்குமார், துப்புரவு அலுவலர் எஸ். சங்கரசபாபதி, துப்புரவு ஆய்வாளர்கள் சேகர், லெனின், மேற்பார்வையாளர் சுப்பிரமணியன் உள்ளிட்ட நகராட்சி அலுவலர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

Print PDF

தினமணி               27.07.2012

 பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

துறையூர், ஜூலை 26: உப்பிலியபுரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பிளாஸ்டிக் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம் அண்மையில் நடைபெற்றது.இந்தக் கூட்டத்துக்கு பேரூராட்சி செயல் அலுவலர் மு. மல்லிகாஅர்ச்சுனன் தலைமை வகித்தார். பேரூராட்சி தலைவர் அ. மைவிழி முன்னிலை வகித்தார்.

உப்பிலியபுரத்தைச் சேர்ந்த சிறு வியாபாரிகள், தேநீர் கடை, பூக்கடை, திருமண மண்டப உரிமையாளர்கள் பங்கேற்றனர்.கூட்டத்தில் 40 மைக்ரான் தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகள், சீர்கேடுகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.இதற்கு மாற்றாக, காகிதம், துணிகளால் ஆன பைகளை பயன்படுத்துமாறு வியாபாரிகளிடம் அறிவுறுத்தப்பட்டது.

 

பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் தடை :விழிப்புணர்வு கூட்டம்

Print PDF

 தினமலர்                 27.07.2012

பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் தடை :விழிப்புணர்வு கூட்டம்

பள்ளிப்பட்டு : பேரூராட்சிகளில் பிளாஸ்டிக் தடை அமலுக்கு வருவதைத் தொடர்ந்து வியாபாரிகள், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
பொதட்டூர்பேட்டை பேரூராட்சி, 18 வார்டுகளில், 2,500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்கு, 150க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும், நான்கு திருமண மண்டபங்கள் உள்ளன.

பேரூராட்சியில், அதிகளவில் பிளாஸ்டிக் பைகள், டம்ளர்கள் மற்றும் பொருட்கள் பயன்படுத்துவதால், சுற்றுச்சுழல் பாதிக்கப்படுகிறது. இதை பாதுகாக்கும் வகையில், பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வரும் செப்டம்பர் மாதம், ஒன்றாம் தேதி முதல், பிளாஸ்டிக் பை மற்றும் டம்ளர்கள் கடைகளில் விற்பதற்கும், பயன்படுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

இதை தொடர்ந்து பொதுமக்கள், காய்கறி கடை, ஓட்டல், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும், சிறு வியாபாரிகளுக்கு பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, விழிப்புணர்வு கூட்டம் பேரூராட்சிதலைவர் தண்டபாணி தலைமையில் நடந்தது. துணை தலைவர் ரவி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் பாஸ்கர் வரவேற்றார். இதில், 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.ஊத்துக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு அதன் தலைவர் பத்மாவதி தலைமை வகித்தார். செயல்அலுவலர் கதாதரன் வரவேற்றார். 40 மைக்ரானுக்கு குறைவாக உள்ள, பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. மட்காத பிளாஸ்டிக் பொருட்களால் நிலத்தடி நீர் மாசுபடும்.

பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து, விளம்பர பலகைகள் வைக்க வேண்டும். துண்டு பிரசுரங்கள் வினியோகித்து பிளாஸ்டிக்கினால் ஏற்படும் அபாயம் குறித்து விளக்கவேண்டும். ஆகஸ்ட் ஒன்று முதல், இந்த பிரசாரத்தை மேற்கொண்டு, செப்.15 முதல், ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள்
பயன்படுத்துவதை தடை செய்வது என, கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

 


Page 49 of 135