Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

வேட்டவலம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்

Print PDF

தினமணி                               26.07.2012

வேட்டவலம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் ஒழிப்பு ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை, ஜூலை 25: வேட்டவலம் பேரூராட்சியில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடை செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

பேரூராட்சி அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற இக் கூட்டத்துக்கு, பேரூராட்சித் தலைவர் ஜெனார்த்தனம் தலைமை வகித்தார். வர்த்தக சங்கச் செயலர் சுந்தரமூர்த்தி பேசுகையில், பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று பேரூராட்சி சார்பில் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டதால் இப்போது, பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாட்டை பெருமளவு குறைத்து விட்டதாகத் தெரிவித்தார்.

செயல் அலுவலர் கணேசன் பேசுகையில், ஆகஸ்ட் 15-க்குப் பிறகு பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யும் மற்றும் பயன்படுத்தும் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது தொடர் நடவடிக்கைகளையும், அபராதமும் விதிக்கப்படும். தேவைப்படின் சட்ட ரீதியான நடவடிக்கையும் எடுக்கப்படும் என்றார்.

இக் கூட்டத்தில், பேரூராட்சி துணைத் தலைவர் தட்சணாமூர்த்தி மற்றும் வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களின் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

கரூரில் ஆக. 1 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை தீவிரம்

Print PDF

தினமணி                               26.07.2012

கரூரில் ஆக. 1 முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை தீவிரம்

கரூர், ஜூலை 25: கரூர் நகரில் ஆகஸ்ட் 1 முதல் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்பாடு தொடர்பான தடை தீவிரமாக அமல்படுத்தப்படும் என்றார் நகர்மன்ற ஆணையர் ந. ரவிச்சந்திரன்.

கரூர் நகர்மன்ற அலுவலக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற, பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிப்பது குறித்த ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:

கரூர் நகர்மன்றத்திற்கு உள்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதிப்பது குறித்து ஏற்கெனவே ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், வியாபாரிகள் கால அவகாசம் கோரியதன் அடிப்படையில் வாய்ப்பு வழங்கப்பட்டது. தற்போது அந்த அவகாசம் ஜூலை 31 ஆம் தேதியுடன் முடிவடைவதால், ஆகஸ்ட் 1 முதல் பிளாஸ்டிக் தடை தீவிரமாக அமல்படுத்தப்படும்.

கரூர் நகர்மன்றத்தின் இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வியாபாரிகள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்குப் பிறகும் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்தால், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வப்போது, இதற்கான சோதனைகள் நடத்தப்படும் என்றார் ஆணையர்.

கரூர் நகர்மன்றத் தலைவர் எம். செல்வராஜ் பேசியது:

பிளாஸ்டிக் பொருள்களை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பொதுமக்கள், வியாபாரிகள், மாணவ, மாணவிகள் இணைந்து பங்கேற்கும் விழிப்புணர்வுப் பேரணி மாத இறுதியில் கரூர் நகர்மன்றத்தின் சார்பில் நடத்தப்படும். வீடு, வீடாகச் சென்று விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்படும். மேலும், ஊடகங்களின் மூலமாகவும் விளம்பரம் செய்யப்படும் என்றார்.

தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளர் பி.எஸ். சம்பத்குமார் பேசும் போது, பிளாஸ்டிக்கில் உள்ள வேதிப் பொருள்கள் உணவுடன் கலந்து நம் வயிற்றுக்குள் சென்று, நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தும். புற்றுநோய், பெண்களுக்கு கர்ப்பப்பை பாதிப்பு போன்ற நோய்கள் வரலாம். எனவே, பிளாஸ்டிக்கை தவிர்க்க வேண்டும் என்றார்.

கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழகத் தலைவர் கே. ராஜு பேசும் போது, நகர்மன்ற நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் அனைத்திற்கும் ஒத்துழைப்பு அளிக்கிறோம். அதேநேரத்தில் எங்கள் மீது கெடுபிடி காட்டக்கூடாது என்றார்.              

 

பெருங்குளம் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை வெளியீடு

Print PDF
தினமலர்       26.07.2012   

பெருங்குளம் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை வெளியீடு

தூத்துக்குடி : பெருங்குளம் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை அறிவிப்பு வெளியிடப்பட்டன. இனிமே ல் இதனை பயன்படுத்துவோருக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று நட ந்த ஆலோசனை கூட்டத்தில் அறிவிப்பு செய்யப்பட்டன.

தமிழகத்தில் மெல்லிய பிளாஸ்டிக் பைகளினால் மக்களுக்கு கடும் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகி இருப்பதால் அதனை ஒழிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் மெல்லிய பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தவிர்ப்பதற்காக மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறார். இது சம்பந்தமாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெருங்குளம் டவு ன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகத்தை தடை செய்யும் அறிவிப்பு நேற்றைய ஆலோசனை கூட்டத்தில் வெளியிடப்பட்டது. செ ன்னை டவுன் பஞ்சாயத்துக்களின் இயக்குனர் சந்திரசேகரன் சுற்றறிக்கைப்படியும், தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் ஆஷீஷ்குமார் ஆய்வுக் கூட்ட அறிக்øயின் படி பெருங்கு ளம் டவுன் பஞ்சாயத்தில் பிளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை முழுவதுமாக தவி ர்க்கும் வகையில் விழிப்புணர் வு கூட்டம் நேற்று டவன் பஞ்சாயத்து தலைவர் சுந்தர்ராஜன் தலைமையில் நடந்தது.

சிறு வியாபாரிகள், பூக்க டை, காய்கறி கடைக்காரர்கள், திருமண மண்டபங்களை சேர் ந்தவர்கள் உள்ளிட்ட அனை த்து தரப்பினரும் கூட்டத்தில் பங்கேற்றனர். பிளாஸ்டிக் பொருட்களினால் ஏற்படும் தீங்குகள் குறித்து பெருங்குளம் டவுன் பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி வெங்கடேசன் விளக்கினார். இதன் பயன்பாட்டை முழுமையாக நிறு த்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பெருங்கு ளம் டவுன் பஞ்சாயத்தில் பி ளாஸ்டிக் பொருட்களின் உபயோகத்தை தடை செய்யும் அறிவிப்பினை நிர்வாக அதிகாரி வெளியிட்டார். இதன் பிறகும் பிளாஸ்டிக் பைகள் உபயோகப்படுத்தினால் 500 முதல் 1000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்று நிர்வாக அதிகாரி வெங்கடேசன் தெரிவித்தார். நிர்வாக அதிகாரி பேசி முடித்த பிறகு பெருங்குளம் டவுன் பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் உபயோகம் முழுமையாக தடுப்பதற்கு நாங்கள் உறுதியளிப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர். அலுவலக உதவியாளர் அழகர் நன்றி கூறினார்.

 


Page 50 of 135