Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை

Print PDF
தினமலர்        20.12.2011

சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் தடை

 
சிட்லப்பாக்கம் : ஜனவரி 1ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சி தடை விதித்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை கையாளுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டு வருவதால், பேரூராட்சி இயக்குனரகம் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் இணைந்து பேரூராட்சி பகுதிகளுக்குட்பட்ட இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கோ, பயன்பாட்டிற்கோ தடை விதிக்க உத்தரவிட்டிருந்தது. இதன்படி, சென்னையை அடுத்த சிட்லப்பாக்கம் பேரூராட்சியில் வரும் ஜனவரி 1ம் தேதி முதல் 40 மைக்ரான் அளவிற்கு கூடுதலான பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. சிட்லப்பாக்கம் பேரூராட்சி பகுதிக்குட்பட்ட கடைகளிலோ, ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களிலோ பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்றும், மீறி விற்பனை செய்தால் அதிகபட்ச அபராதம் விதிக்கப்படும் என்றும் பேரூராட்சி நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
 

சென்னை நகர மரங்களின் எண்ணிக்கை : ஜூலையில் கணக்கெடுப்பு துவங்குகிறது

Print PDF

தினமலர் 28.06.2011

சென்னை நகர மரங்களின் எண்ணிக்கை : ஜூலையில் கணக்கெடுப்பு துவங்குகிறது

நாட்டில் உள்ள பெருநகரங்களில், முதல் முறையாக சென்னையில் மரங்கள் குறித்த ஒரு கணக்கெடுப்பை நடத்த வனத்துறை திட்டமிட்டுள்ளது. ஜூலை மாதம் துவக்கப்படவுள்ள இந்த கணக்கெடுப்பிற்காக, கல்லூரிகள், பள்ளிகளுக்கு வனத்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை மாநகர மரங்கள் கணக்கெடுப்பு திட்ட ஆலோசகர், நரசிம்மன் கூறியதாவது: சென்னையில் குறைந்த வகையான மரங்கள் மட்டுமே உள்ளன என்ற தோராயமான பட்டியல் மட்டுமே உள்ளது. புதிய கணக்கெடுப்பில் எத்தனை வகையான மரங்கள் உள்ளன; அவற்றின் எண்ணிக்கை; மரத்தின் சுற்றளவு மற்றும் உயரம்; மரத்திற்கு உள்ள பிரச்னை; பயனில்லாத மரங்கள்; பட்டுபோய்விட்ட மரங்கள்; பழமை வாய்ந்த மரங்கள்; மரக்கன்றுகளை நடவேண்டிய இடங்கள்; கண்ட இடத்தில் உள்ள மரங்கள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும். புள்ளி விவரங்கள் வனத்துறைக்கு மட்டுமின்றி வருங்கால சந்ததியினருக்கும் வசதியாக இருக்கும். கணக்கெடுப்பை கொண்டு, மரங்கள் இல்லாத இடத்தில், பயனளிக்கக்கூடிய மரக்கன்றுகளை நட்டு, சென்னையில் மரங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தலாம். தேவையில்லாத இடங்களில் மரக்கன்றுகள் நடப்படுவதை தவிர்க்க முடியும்.

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் ராஜ்பவனில் மட்டும் 121 வகையான நான்காயிரத்து 371 மரங்கள் இருப்பது தெரியவந்தது. வரும் ஜூலை மாதம் முதல் வாரத்தில், இந்த கணக்கெடுப்பு துவக்கப்பட்டு, ஆறு மாதத்திற்குள் முடிக்கப்படும். இவ்வாறு நரசிம்மன் கூறினார். கணக்கெடுப்பில் பங்குபெறவுள்ள, "தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பின் திருநாரணன் கூறும்போது, "மரங்கள் கணக்கெடுப்பு புள்ளி விவரங்கள் வரும் கால நிர்வாகத்திற்கு வசதியாக இருக்கும். விலங்குகள் கணக்கெடுப்பு போல, மரங்கள் கணக்கெடுப்பு தொடர் பணியாக இருக்க வேண்டும். இதன் மூலம் மரங்கள் வெட்டப்பட்டாலோ, இயற்கை சீற்றத்தால் மரங்கள் பட்டுப்போய்விட்டாலோ மீண்டும் மரக்கன்றுகளை நட முடியும். மரங்களின் முக்கியத்துவம் குறித்து, இந்த கணக்கெடுப்பு மூலம் விழிப்புணர்வு ஏற்படும்' என்றார்.

 

20 மைக்ரான் பிளாஸ்டிக் தயாரிக்க தடை

Print PDF
தினகரன்      05.01.2011

20 மைக்ரான் பிளாஸ்டிக் தயாரிக்க தடை

கோவை, ஜன. 5:

கோவையில் 20 மைக்ரான் அளவிற்கு கீழ் பிளாஸ்டிக் பொருள் தயாரி க்க தடை விதிக்கப்பட்டுள் ளது.

கோவை நகரில் பிளாஸ் டிக் பயன்பாடு அதிகரித்து வருகிறது. வணிக வளாகம், ஓட்டல், வர்த்தக நிறுவனங் கள், திருமண மண்டபம், விழாக்களில் பிளாஸ்டிக் பொருட்களை அதிகளவு பயன்படுத்துகின்றனர். குறிப் பாக ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் டம்ளர், தட்டு, மேஜை விரிப்பு, கேரி பேக் போன்றவை 20 மைக் ரான் அளவிற்குள் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவற்றை தடை செய்வதில் பல்வேறு நடைமுறை சிக்கல் இருக்கிறது. நகரில் உள்ள 120 டாஸ்மாக் கடைகளில் கடந்த ஏப்ரல் மாதம் முழு அளவில் பிளாஸ்டிக் டம்ளர் தடை கொண்டு வரப்பட்டது. இறைச்சி, பூக்கடைகளிலும் கேரி பேக் ஒழிக்கப்பட்டு இலைகட்டு நடைமுறைக்கு வந்தது. இதற்கு மக்களிடை யே வரவேற்பு கிடைத்தது. ஆனால், புதிய திட்டம் 2 மாதத்தில் முடிவுக்கு வந்தது. தற்போது முன்பை விட அதிகளவு பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. மாதந்தோ றும் நடக்கும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு கூட்டத்திலும் இது தொடர்பாக உருப்படி யான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

பிளாஸ்டிக் பொருட்களு டன் ஒப்பிடும் போது துணி, பேப்பர் பேக் விற்பனை 5 சதவீதத்தை கூட எட்டவில் லை. நகரில் ரங்கே கவுடர் வீதி, வைசியாள் வீதி, தியாகி குமரன் வீதி உள்ளிட்ட பகுதி யில் 20 மைக்ரான் அளவிற்கு குறைவான பிளாஸ்டிக் பொ ருட்கள் ஒட்டு மொத்தமாக விற்கப்படுவதாக தகவல் வெளி யாகியுள்ளது. கோவை மாவட்டத்திற்கு மட்டுமின்றி, கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இங்கேயிரு ந்து பிளாஸ்டிக் பொருட்கள் சப்ளையாவதாக தெரியவந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலத்தை சேர் ந்த சிலர் கோவையை பிளாஸ் டிக் கவர் பொருட்களை ஒட்டு மொத்தமாக விற்பனை செய்து வருகின்றனர்.

கோவை மாவட்ட மாசு கட்டுபாட்டு வாரிய பொறியா ளர் காமராஜ் கூறுகையில், “ 40 மைக்ரான் வரையுள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தடுக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் 20 மைக்ரான் அளவிற்கு கீழ் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி யாரும் தயாரிப்பதில்லை. ஆனால் வெளி மாநிலங்களில் இருந்து 20 மைக்ரான் அளவில் பிளாஸ்டிக் வருகிறது. இவற் றை தடுக்க கலெக்டர் தலை மையில் ஆலோசனை நட த்தி வருகிறோம். பிளாஸ்டிக் தயாரிப்பு நிறுவனங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டுள்ளது, ” என்றார்.

கோவை மாநகராட்சி கமிஷனர் அன்சுல் மிஸ்ரா கூறுகையில், “ 20 மைக்ரான் அளவிற்கு கீழ் தடிமன் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்க கூடாது.

மீறி விற்கும் கடை, ஒட்டு மொத்த விற்பனை நிலையங்களில் சோதனை நடத்தி அவற்றை பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது, ” என்றார்.
 


Page 52 of 135