Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடைகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்

Print PDF

தினகரன்             15.12.2010

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க கடைகளுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ்

பள்ளிபாளையம்,டிச.15: சுற்றுசூழலுக்கு கேடுவிளைவிக்கும் பிளாஸ்டிக் பொருள்கள் பைகளை பயன்படுத்த கூடாது என அறிவித்து பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள 300 கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் நோட்டீசு வினியோகித்துள்ளது.

ஒரு முறை பயன்படுத்தி வீசி எறியப்படும் பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், 20 மைக்ரான் அளவுக்கு அதிகமான பைகள் போன்றவற்றை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த பொருள்களை பயன்படுத்துவதால் சுற்றுசூழல் கெடுகிறது. நிலத்தடி நீர் வளம் பாதிக்கப்படுகிறது. வண்ணம் கலந்த பைகள் மறுசுழற்சி முறையில் தயாரிக்கப்படுவதால் இவற்றில் உணவு பொருள்கள் வழங்குவதால் உடல் நலன் பாதிக்கிறது. எனவே பிளாஸ்டிக் பைகள் தட்டுகள் போன்றவற்றை பயன்படுத்த கூடாது என்பதை வலியுத்தி பள்ளிபாளையம் நகராட்சி பகுதியிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் நகராட்சி நிர்வாகம் நோட்டீசு வழங்கி வருகிறது. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தினால் அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். சுற்று சூழலை கெடுப்பதாக கருதி வழக்கு தொடுக்கப்படும் என நோட்டீசில் எச்சரிக்கப்பட்டுள்ளது. நகராட்சி செயல் அலுவலர் துரைசாமி தலைமையில் சுகாதார அதிகாரிகள் 300 க்கும் மேற்பட்ட கடைகளுக்கு இந்த எச்சரிக்கை நோட்டீசு வழங்கி ஒப்புதல் பெற்றுள்ளனர். இன்னும் ஒரு சில நாட்களில் கடைகளில் ஆய்வு நடத்தப்பட்டு பிளாஸ்டிக்பொருள்கள் பறிமுதல் செய்யப்படும் என செயல் அலுவலர் தெரிவித்தார்.

 

தாராசுரத்தில் பிளாஸ்டிக் பைக்கு தடை மீறினால் சட்ட நடவடிக்கை

Print PDF

தினகரன்                 14.12.2010

தாராசுரத்தில் பிளாஸ்டிக் பைக்கு தடை மீறினால் சட்ட நடவடிக்கை

கும்பகோணம், டிச. 14: தாராசுரம் பேரூராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளை உபயோகிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தாராசுரம் பேரூராட்சி செயல் அலுவலர் எச்சரித்துள்ளார்.

இதுபற்றி தாராசுரம் பேரூராட்சி செயல் அலுவலர் மோகன்தாஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தாராசுரம் பேரூராட்சியில் சுத்தம், சுகாதாரம் காக்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள் தாராசுரம் பேரூராட்சி நிர்வாகத்துடன் ஒத்துழைத்து சுத்தம், சுகாதாரம், குப்பையில்லாத பேரூராட்சி என்ற நிலையை உருவாக்கிட முன்வரவேண்டும். நம்சுகாதாரம் நம்கைகளில்தான் உள்ளது என்பதை பொதுமக்கள் அனைவரும் உணர்ந்து செயல்பட்டால் மாநிலத்திலேயே சிறந்த பேரூராட்சியாக திகழும். குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல் பேரூராட்சியின் குப்பை வண்டியிலும், குப்பை தொட்டிகளில் மட்டுமே கொட்டவேண்டும். கழிவு நீரை தேங்கவிடாமல் முறைப்படி அப்புறப்படுத்த வேண்டும்.

பொது இடங்களில் மல, ஜலம் கழிக்காமல் கழிவறைகளை உபயோகிக்கவேண்டும். நீர் சேமிப்பு தொட்டிகள், பாத்திரங்கள் மற்றும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் கொசுக்கள் புகாமல் நன்றாக மூடிவைக்கவேண்டும். கழிவு நீர் வாய்க்கால்களில் குப்பைகளை கொட்டி நீரோட்டத்தை தடை செய்யக்கூடாது. கால்நடைகளை சாலையில் கட்டக்கூடாது. டெங்கு காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஏற்படாமல் இருக்க அனைவரும் கொதிக்க வைத்த தண்ணீரை பயன்படுத்தவேண்டும்.

பொதுமக்கள் ஒரு முறை மட்டுமே பயன்படும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம். பிளாஸ்டிக் பைகளை பேரூராட்சி பகுதியில் உபயோகிப்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

தொற்று நோய் ஏற்படாமல் இருக்க ஈ மொய்த்த மற்றும் ஆறிய உணவு பொருட்களை தவிர்க்கவேண்டும். ஆறு, குளம், வாய்க்கால்களில் உள்ள நீரை குடிக்க பயன்படுத்தாமல் பாதுகாக்கப்பட்ட குடிநீரை பருகவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினகரன்             14.12.2010

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

வடமதுரை, டிச. 14: வடமதுரையில் பேரூராட்சி சார்பாக, பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பேரூராட்சித் தலைவர் முத்துலட்சுமி அழகுமலை தலைமை வகித்தார். துணைத்தலைவர் கார்த்திகேயன், செயல் அலுவலர் கணேசன் முன்னிலை வகித்தனர்.

கலைமகள் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் கலந்து கொண்டனர். பேரணியில் பிளாஸ்டிக்கில் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய கார்சினோஜென் உள்ளன. பிளாஸ்டிக் மண்ணில் மக்காமல் இருப்பதால் மண்வளம் கெட்டு மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பைகள் தயாரிப்பில் பயன்படும் காட்மியம் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியதும், விஷத்தன்மை கொண்டதும் ஆகும் என்பது உள்ளிட்ட கோஷங் களை முழங்கியபடி சென்றனர்.ஆர்எஸ்.ரோட் டில் துவங்கிய பேரணி முக்கிய வீதிகள் வழியே பேரூராட்சியை வந்தடைந்தது.

 


Page 54 of 135