Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பொருட்கள் எழுமலையில் அழிப்பு

Print PDF

தினமலர்          13.12.2010

பிளாஸ்டிக் பொருட்கள் எழுமலையில் அழிப்பு

எழுமலை: எழுமலை பகுதியில் தடைக்கு பின்னும், கடைகளில் பயன்படுத்திய பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.பேரூராட்சி தலைவர் பொன்னுத்தாய், துணை தலைவர் பக்ருதீன், நிர்வாக அலுவலர் ராஜேந்திரன், கவுன்சிலர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பிரசாரம், போலீஸ் ஸ்டேஷனில் இருந்து தொடங்கியது. இன்ஸ்பெக்டர் தினகரன் தொடங்கி வைத்தார். உள்ளாட்சி பிரதிநிதிகள், கடைகளில் சோதனையிட்டு, கேரி பேக்குகள், தண்ணீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து அழித்தனர். இச்சோதனைக்கு பின், அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைகளில், கேன்கள்மூலம் குடிநீர் விற்பனை செய்யப்படுகிறது.

வீட்டுவரி, சொத்துவரி, குடிநீர்வரிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் செலுத்த வேண்டும் என பேரூராட்சி சார்பில் மைக் மூலம் அறிவிக்கப்படுகிறது.

 

மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! சுற்றுலா மேம்பாட்டிற்கு பேரூராட்சி முடிவு

Print PDF

தினமலர்              13.12.2010

மாமல்லபுரத்தில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை! சுற்றுலா மேம்பாட்டிற்கு பேரூராட்சி முடிவு

மாமல்லபுரம் : சர்வதேச சுற்றுலா தலமான மாமல்லபுரத்தை மேம்படுத்தும் நோக்கில், அங்கு பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்க பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. மாமல்லபுரம் சர்வதேச சுற்றுலா தலமாக உள்ளது. இங்குள்ள பல்லவர் கால கலைச்சின்னங்களை கண்டு ரசிக்க உள்நாட்டிலிருந்தும், வெளநாடுகளிலிருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். புராதன சின்னங்களை இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை பராமரித்து பாதுகாத்து வருகிறது.

பிற இடங்களில் பேரூராட்சி துப்புரவுப் பணியாளர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன துப்புரவுப் பணியாளர்கள் மூலம் துப்புரவு பணி மேற்கொள்ளப்படுகிறது. சுற்றுலாப் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் நீண்டகாலமாக பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால், பிளாஸ்டிக் குப்பைகள் அதிகளவில் குவிகின்றன.

சுற்றுலா பயணிகள் வெளியிடங்களிலிருந்து வரும்போது உணவுப் பொருட்கள் உட்பட பல்வேறு பொருட்களை பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பைகளில் கொண்டு வருகின்றனர். நகரிலும் பல்வேறு கடைகளில் விற்கப்படும் பொருட்கள், பிளாஸ்டிக் பைகளில் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. இதனால், நாளுக்கு நாள் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகரித்து வருகின்றன.

பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து பலமுறை பேரூராட்சி நிர்வாகம் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் தீர்வு ஏற்படவில்லை. தற்போது ஹேண்டு இன் ஹேண்டு தனியார் தொண்டு நிறுவனம் மூலம், பிளாஸ்டிக் ஒழிப்பு பிரசாரத்தை பேரூராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தி வருகிறது.

மேலும், பொதுமக்கள் பிப்ரவரி 10ம் தேதி வரை இருப்பில் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்திக் கொள்ளலாம். பிளாஸ்டிக் பொருட்களை கொள்முதல் செய்வோர் இனி பிளாஸ்டிக் பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் ஒழிப்பு தொடர்பாக நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், வியாபாரிகள், மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பிப்ரவரி 10ம் தேதிக்கு மேல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை விதிக்க கலெக்டரிடமிருந்து உத்தரவு பெற்று நடைமுறைப்படுத்துவது என முடிவு செய்யப்பட்டது.

 

பிளாஸ்டிக் கவர்களுக்குத் தடை: வியாபாரிகளுக்கு முன்னறிவிப்புக் கூட்டம்

Print PDF

தினமணி              13.12.2010

பிளாஸ்டிக் கவர்களுக்குத் தடை: வியாபாரிகளுக்கு முன்னறிவிப்புக் கூட்டம்

திருப்பரங்குன்றம், டிச.12: பேரூராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள், கப்கள் உள்ளிட்ட பொருள்களை வருகிற ஜன. 1-ம் தேதியிலிருந்து தடை விதிப்பது சம்பந்தமாக வியாபாரிகளுக்கு முன்னறிவிப்புக் கூட்டம் நடைபெற்றது. திருநகர் பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இக்பேரூராட்சித் தலைவர் கே.இந்திராகாந்தி தலைமை வகித்தார்.

துணைத் தலைவர் சுப்பிரமணி முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் க.பழனிவேல் பேசுகையில் அரசு அறிவித்தன் பேரில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்கள் உள்ளிட்ட பொருள்கள் விற்பனை மற்றும் நுகர்வோருக்கு பிளாஸ்டிக் பைகளில் வைத்து பொருள்கள் தரக்கூடாது என்றார்.

இதை மீறினால், வியாபாரிகளுக்கு ரூ 200, நுகர்வோருக்கு ரூ 100, மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ 500 அபராதம் விதிக்கப்படும். கடைகளின் முன்பாக உள்ள தாழ்வாரங்களை நீளம் குறைவாக உபயோகிக்க வேண்டும். பொது சாக்கடைகளில் மூடி போடக் கூடாது எனவும் வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

 


Page 55 of 135