Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் ஒழிப்பில் நெல்லை பின்தங்கியது குமரியில் முடிந்தது.... இங்கு முடியவில்லை தீவிரப்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

Print PDF

தினகரன்             13.12.2010

பிளாஸ்டிக் ஒழிப்பில் நெல்லை பின்தங்கியது குமரியில் முடிந்தது.... இங்கு முடியவில்லை தீவிரப்படுத்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை

அய்.கோபால்சாமி

நெல்லை, டிச. 13: பிளாஸ்டிக் ஒழிப்பு போரை அனைத்து தென் மாவட்டங்களுக்கும் முன்னால் தொடங்கி பின்னால் நிற்கிறது நெல்லை. குமரியில் ஆறு மாதங்களில் முடிந்த பணி இங்கு இரு ஆண்டுகளாகியும் நடக்காத தற்கு நிர்வாகத்தின் மெத் தனப்போக்கே காரணம் என்று சுற்றுச்சூழல் ஆர் வலர்கள் கருதுகின்றனர். மிகவும் சீர்கேட்டை உரு வாக்கும் பிளாஸ்டிக்கை ஒழிக்க முனைப்புடன் செயல்படவேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை கலெக்டராக பதவியேற்றதும் ஜெயராமன் துடிப்புடன் அறிவித்த திட்டம் பிளாஸ்டிக் ஒழிப்பு. ஆனால் தொடங்கிய வேகத் திலேயே துவண்டு போனார். அவர் அறிவிப்பு விடுத்ததும் பிளாஸ்டிக் பைகள், கப்புகள் கடைகள், ஓட்டல்களில் பதுங்கின. ‘புலி வருதுகதையாக கடும் நடவடிக்கையை எதிர் பார்த்து கடைக்காரர்கள் ஏமாந்ததால், பிளாஸ்டிக் வேதாளம் மீண்டும் கடை யேறியது.

சில நாட்களிலேயே திட்டத்தை கலெக்டரும் அதிகாரிகளும் மறந்து போயினர். சிலர் நினை வூட்டிய போது பிளாஸ் டிக்கை முற்றிலும் ஒழிக்கும் உள்ளாட்சி அமைப்புக்கு பரிசு வழங்குவதாகவும், பிளாஸ்டிக் பைக்கு மாற்றாக காகித பை உற்பத்திக்கு உதவப்போவதாகவும் கூறி னார். ஆனால் ஒன்றும் செயல்படுத்தப் பட வில்லை.

ஆனால், நெல்லையை அடுத்து இத்திட்டத்தை அறிவித்த கன்னியாகுமரி கலெக்டர் ராஜேந்திர ரத்னூ ஆறே மாதங்களுக்குள் கச்சிதமாக நிறைவேற்றி னார். பிளாஸ்டிக் ஒழிப்பில் உள்ளாட்சி அமைப்புகளை முழுமூச்சாக பயன்படுத்தி னார். அதிகாரிகள் கூட தங்கள் கைப்பையில் துணிப்பை வைக்கவேண் டும் என உத்தரவிட்டார். வணிகர் சங்கங்களின் போராட்ட அறிவிப்பை உதாசீனப்படுத்தினார். எந்த விழாவுக்கு சென்றாலும் அந்த விழாவுடன் பிளாஸ் டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினார். திடீர் ஆய்வு கள், அதிரடி சோதனைகள் மூலம் கடைக்காரர்கள், அலுவலர்களை எப்போதும் ஆயத்த நிலையிலேயே வைத்திருந்தார்.

இத்தகைய எந்த முயற்சி யையும் மேற்கொள் ளாத தாலேயே நெல்லையில் பிளாஸ்டிக் ஒழிப்பு நடவ டிக்கையில் பின்னடைவு

கண்துடைப்புக்காக சோதனை

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே பிளாஸ்டிக் கப்புகள், பைகள் தாராளமாக நடமாடுகின்றன. முக்கிய பிரமுகர் நடத்தும் ஓட்டலில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை அறிவிக்கப்பட்ட காலத்தில் கூட நிறுத்தப்படாமல் இன்னமும் தொடர்கிறது. கண்துடைப்புக்காக ஓட்டல்கள், கடைகளில் சோதனை நடத்தும் அதிகாரிகள் பிளாஸ்டிக் ஒழிப்புக்காக முழுமனதுடன் சோதனைகள், ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை.

ஏற்பட்டது. ஆரம்ப நிலையில் விழிப்புணர்வு பிரசாரத்தை கலெக்டர் தொடங்கி வைத் தாரே தவிர அதை தொட ராமல் விட்டுவிட்டார். பிளாஸ்டிக் ஒழிப்பு நிகழ்ச் சிக்கு அழைத்தால் தான் உடனடியாக கலந்து கொள்வதாக அறிவித்தார். ஆனால் அத்தகைய நிகழ்ச்சிகளை நடத்தும் பொறுப்பு நிர்வாகத்துக்கு உண்டு என்பதை உணர தவறிவிட்டார். 20 மைக் ரானுக்கு குறைந்த பிளாஸ் டிக்கை பயன்படுத்தக் கூடாது என்ற அளவிலேயே உத்தரவு இருந்தது. அனைத்து பிளாஸ்டிக் பைகளையும் தவிர்க்கும் உறுதிப்பாடு இல்லை.

உள்ளாட்சி அதிகாரிகள், அமைப்புகள், மகளிர் குழுக்கள், தொண்டு நிறு வனங்கள் மூலம் செயல் பாட்டை தீவிரப்படுத்த எத்தனையோ வாய்ப்புகள் இருந்தும் அவற்றை பரீட்சித்தும் பார்க்க வில்லை. பிளாஸ்டிக் ஒழிக்க வேண்டிய நச்சுப்பொருள் என்ற உறுதிப்பாடு அதி காரிகளிடமே இல்லை.

போதை பொருட்களை போல ஒழிக்கவேண்டிய பொருட்களில் பிளாஸ்டிக் ஒன்று என்பதை மாவட்ட நிர்வாகம் மறந்தாலும் மக்கள் மறக்க கூடாது. மனிதர்களை உள்ளுக்குள் ஊடுருவிக்கொல்லும் புற்றுநோய்க்கு பிளாஸ்டிக் தான் முக்கிய முகவர். மக் காத மாசு. பூவுலகில் விரைந்து பரவி மங்கி மறையாமல் ஆண்டாண்டு காலம் அழியாமல் நிலைக் கும் தேவையற்ற கழிவு.

பல வளர்ந்த நாடுகளில் ஒட்டுமொத்தமாக அது ஒழிக்கப்பட்டு விட்டது. விழிப்புணர்வுள்ள மக்கள் நிறைந்த நெல்லையிலும் அது நிச்சயம் நிறைவேறும். ஆனால், மாவட்ட நிர்வா கம் இதற்கு மனது வைக்க வேண்டும்.

Last Updated on Monday, 13 December 2010 08:14
 

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை எப்போது?

Print PDF

தினகரன்                13.12.2010

சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை எப்போது?

புதுச்சேரி, டிச. 13: நாகரிகம் என்ற பெயரில் புதிது, புதிதாக ஏற்படுத்தி வரும் மாற்றங்கள்அழிவுப் பாதையை நோக்கி அழைத்துச் செல்கின்றன. முன்பெல்லாம் மளிகை கடைகளில் ஏதாவது ஒரு பொருள் வாங்கினால் காகிதப் பொட்டலத்தில் மடித்துக் கொடுப்பார்கள். ஓட்டல்களில் உணவு வாங்கினால் வாழை இலையில் பார்சல் கட்டித் தருவார்கள். வெளியில் செல்பவர்கள் கையில் ஒரு மஞ்சள் துணிப்பையை எடுத்துச் செல்வர்.

ஆனால் நவீன உலகில் அவை எல்லாம் மறைந்து விட்டன. ஒரு முழம் பூ வாங்கினால் கூட அதை ஒரு கேரிபேக்கில் போட்டுக் கொடுக்கிறார்கள். எங்கும் பாலிதீன், பிளாஸ்டிக் பைகள் வாழ்வின் முக்கிய அம்சமாக கலந்து குப்பைகளாக குவியத் தொடங்கியுள்ளன. ஒருவர் ஒரு ஆண்டில் தோராயமாக 100க்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துகின்றனர்.

கொஞ்சம், கொஞ்சமாக மண்ணில் புதையும் பாலிதீன் பைகள் மண்ணின் வளத்தை கெடுத்து நிலத்தை வளம் இழக்கச் செய்கின்றன. மழைநீரை கூட பூமி உறிஞ்ச முடியாத அளவுக்கு தடை போடுகின்றன.

முன்பெல்லாம் மழை பெய்தால் ஓரிரு நாளில் தண்ணீரை நிலம் உறிஞ்சி விடும். ஆனால் இப்போது வாரக்கணக்கில், மாதக்கணக்கில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. கொசுக்களும் பல மடங்கு உற்பத்தியாகி மனிதர்களை சிக்குன்குன்யா என்ற பெயரில் முடக்குகின்றன.

வாய்க்கால்கள் மற்றும் சாக்கடைகளில் கழிவுநீர் செல்வதற்கு தடை ஏற்படுத்துவதும் இந்த பாலிதீன் குப்பைகள் தான். சமீபத்தில் பெய்த அடைமழையால் புதுவை ராஜீவ்காந்தி அரசு மகளிர் மருத்துவமனை எதிரில் உள்ள வாய்க்கால்களில் பிளாஸ்டிக் கேரிபேக், தெர்மாகோல் மற்றும் டீ கப்கள் தான் நிரம்பி வழிந்தன. இதனால் மழைநீர் வெளியே செல்லாமல் கழிவுநீருடன் ரோட்டின் நடுவில் செல்லும் நிலை ஏற்பட்டது. பூமியான்பேட்டை பெரிய வாய்க்காலிலும் இதே பிளாஸ்டிக் கழிவுகள் தான் நிரம்பியிருந்தன. மேலும், பயன்படுத்தி தூக்கி எறியும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களை கால்நடை கள், விலங்குகள், கடல்வாழ் உயிரினங்கள் உண்பதால் அவை பல்வேறு நோய் களால் பாதிக்கப்படுகின்றன.

மக்களிடையே விழிப்புணர்வு பிரசாரம் செய்து மாற்றத்தை கொண்டு வருவது மட்டும் போதாது. கடுமையான சட்டம் மற்றும் விதிமுறைகளால் மட்டுமே இந்த பாலிதீன் பைகள் பயன்பாட்டினை முற்றிலும் ஒழிக்க முடியும். முதலில், மறுசுழற்சியில் திரும்பவும் பயன்படுத்த முடியாத குறைந்த தடிமனுள்ள பாலிதீன் கேரி பேக்குகள் உற்பத்தியை கட்டுப்படுத்த மாசு கட்டுப்பாட்டு வாரியம் கடும் நடவடிக்கை எடுக்க வேண் டும்.

வாய்க்கால்களில் அடைப்பு தடை சட்டத்தை செயல்படுத்த கோரிக்கை

புதுச்சேரி அரசு கடந்த 9&12&2009ம் தேதியிட்ட அரசாணைப்படி 50 மைக்ரான் மற்றும் அதற்கு குறைவான தடிமனுள்ள பிளாஸ்டிக் தூக்குப் பைகள், குவளைகள் மற்றும் தட்டுகள் போன்றவற்றை விற்பது, வாங்குவது மற்றும் பயன்படுத்துவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. இதை மீறுபவர்கள் மீது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதமோ அல்லது 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையோ விதிக்கப்படும் என அரசு அறிவித்தது. ஆனால் அந்த தடை சட்டம் இதுவரை நடைமுறைக்கு கொண்டுவரவில்லை. இதற்கு என்ன காரணம்? வருங்கால சந்ததியினருக்கு நாம் நல்லது செய்ய வேண்டும் என நினைத்தால் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை முடிந்த அளவு தவிர்க்க வேண்டும் என புதுவை, பாரத ரத்னா எம்ஜிஆர் பொதுநல சமூகப் பேரவை செயலாளர் சிவா தெரிவித்துள்ளார்.

 

மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் பொருள்கள் தயாரித்தால் அபராதம்: நகராட்சி எச்சரிக்கை

Print PDF

தினமணி             09.12.2010

மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் பொருள்கள் தயாரித்தால் அபராதம்: நகராட்சி எச்சரிக்கை

தருமபுரி, டிச.8: மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்தால் அபராதம் விதிக்கப்படும் என்று தருமபுரி நகராட்சி எச்சரித்துள்ளது.

÷தருமபுரி நகராட்சியின் நகர்மன்றக் கூட்டம் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்து நகர்மன்றத் தலைவர் டி.சி.பி. ஆனந்தகுமார் ராஜா பேசியது:

÷மழையால் பாதிக்கப்பட்ட சாலைகளை சீரமைக்கவும், புதை சாக்கடை திட்டப் பணிகள் முடிவடைந்த சாலைகளைப் புதுப்பிக்கவும் சிறப்புச் சாலைகள் திட்டத்தின் கீழ் ரூ. 5 கோடி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது.

இதில், கடந்த மாதம் நடந்த நகர்மன்றக் கூட்டத்தில் ரூ. 2 கோடிக்கு பணிகள் எடுத்து செயல்படுத்த மன்றம் ஒப்புதல் வழங்கியது. தற்போது, கூடுதலாக ரூ. 3 கோடிக்கு மன்றம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

÷20 மைக்ரான் அளவுக்கும் குறைவான அளவுள்ள பிளாஸ்டிக் பைகள் மற்றும் இதரப் பொருள்கள் தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது என அரசு அறிவுறுத்தியுள்ளது.

எனவே, தருமபுரி நகராட்சியில் இத்தகைய நடைமுறையைப் பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். நகராட்சிக்குள்பட்ட பகுதியில் 6 நிறுவனங்கள் உள்ளன.

இந்த நிறுவனங்களில் மறுசுழற்சிக்குப் பயன்படாத பிளாஸ்டிக் பொருள்களை உற்பத்தி செய்தல் கூடாது. கடைகளிலும் இத்தகைய பொருள்களை விற்பனை செய்தல் கூடாது. இந்த உத்தரவை மீறினால் நிறுவனங்களுக்கு ரூ. 5 ஆயிரம், கடைகளுக்கு ரூ. 500 வரை அபராதம் விதிக்கப்படும்.

÷நகர கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் ஆறுமுகஆசாரி தெரு, சின்னசாமி நாயுடு தெரு, முகமது அலி கிளப் சாலை ஆகியவை 2 அடி உயரத்துக்கு மேம்படுத்தப்பட்டுள்ளன. சாலைகளின் ஓரம் மழைநீர் வழிந்தோட ரூ. 75 லட்சத்தில் சாக்கடை கால்வாய் அமைக்கப்படும் என்றார் அவர். இக் கூட்டத்தில், ஆணையர் அண்ணாதுரை மற்றும் நகராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 


Page 56 of 135