Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

நகரில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை வருகிறது

Print PDF

தினமணி          30.11.2010

நகரில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் தடை வருகிறது

மதுரை, நவ. 29: மதுரை நகரில் ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் மெல்லிய பிளாஸ்டிக் உபயோகம் அதிகரித்து வருவது பற்றி ஆணையரிடம் கேட்டதற்கு, மதுரை மாநகரில் 20 மைக்ரான் அளவுக்கும் குறைந்த டீ கப்,கேரி பேக் போன்றவற்றை விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை செய்வதற்கு மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது. 2011 ஜனவரி 1 முதல் மாநகராட்சி முழுவதிலும் இந்தத் தடை அமலுக்கு வருகிறது.

சுற்றுலா விடுதிகளில் தரமான உணவு

மதுரை, நவ. 29: மதுரையில் சுற்றுலாத்துறை விடுதிகளில் தரமான உணவு வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாநில சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழுத் தலைவர் டி.யசோதா எம்.எல்.. தெரிவித்தார்.

மதுரை மாவட்டத்தில் அக்குழுவின் ஆய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. அதன்பின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் டி. யசோதா கூறியது:

சட்டப்பேரவை பொது நிறுவனங்களின் குழு மாவட்டத்தில் பல்வேறு அரசு துறைகளை ஆய்வு செய்தது. போக்குவரத்து, சுற்றுலாத்துறை, தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றையும் குழு ஆய்வு செய்தது. அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவதற்குத் தேவையான பரிந்துரைகளை அரசுக்கு அளிப்போம். முதல்வர் கருணாநிதியிடமும் ஊழியர்களின் ஊதிய விவரத்தை எடுத்துரைப்போம். அலங்காநல்லூர் சர்க்கரை ஆலையில் அரவை முடிந்த கரும்புச் சக்கைகள் மூலம் மின்சாரம் தயாரிக்கும் திட்டத்துக்கான பணிகள் ஓராண்டில் நிறைவுபெறத் தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு தமிழக முதல்வரிடம் பரிந்துரைப்போம்.

மதுரை போக்குவரத்துப் பணிமனையில் ஓட்டுநர் பயிற்சிக்கு மாதிரி பஸ் வடிவமைப்பு இருந்ததையும் பார்வையிட்டோம். மேலும், சில கேள்விகளை அங்குள்ள அதிகாரிகளிடம் கேட்டுள்ளோம். அவர்களும் கடிதம் மூலம் பதிலளிப்பதாக உறுதி அளித்துள்ளனர்.

சுற்றுலாத்துறையின் விடுதிகளை ஆய்வு செய்தோம். அங்கு உணவு வகைகளை தரமாக அளிக்க அறிவுறுத்தி உள்ளோம். மேலும் விடுதிகளைச் சுத்தமாகப் பராமரிக்கவும் பணியாளர்களிடம் கூறியுள்ளோம். சுற்றுலாத்துறையில் நமது மாநிலம் 3-வது இடம் வகித்தாலும், வெளிநாட்டவர் வருகையில் முதலிடத்தில் உள்ளது.

மாவட்டத்தில் சுற்றுலா மேம்பாடு குறித்து மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் அளித்த விளக்கம் பாராட்டும் வகையில் இருந்தது என்றார்.

பேட்டியின்போது, குழு உறுப்பினர்களான எம்.எல்..க்கள் பி. மூர்த்தி, கே.எஸ்.கே. ராஜேந்திரன், ஓசூர் கோபிநாத், என்.நன்மாறன் மற்றும் மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ், குழு துணைச் செயலர் கு.இந்துமதி, சார்புச் செயலர் சி.சகுந்தலா உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

 

பிளாஸ்டிக் பைகள் விற்க புதிய நிபந்தனை அதிகாரிகள் அதிரடி உத்தரவு

Print PDF

தினகரன்                26.11.2010

பிளாஸ்டிக் பைகள் விற்க புதிய நிபந்தனை அதிகாரிகள் அதிரடி உத்தரவு

குன்னூர், நவ. 26: பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்பவர்கள் அதன் எடையை கம்ப்யூட்டரில் அச்சிட்ட பின்னரே விற்க வேண்டும் என அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

குன்னூர் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்க கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் உத்தரவிட்டதை தொடர்ந்து, குன்னூர் நகரா ட்சி சுகாதாரத் துறை ஆய்வாளர்கள் பூமாலை, செந்தில், குமார், ஞானசேகர் மற்றும் நகர அமைப்பு ஆய்வாளர் சுகுமார் ஆகி யோர் கடந்த 2 நாட்களாக மவுண்ட் ரோடு மற்றும் மார்க்கெட் பகுதிகளில் பிளா ஸ்டிக் பை தடுப்பு சோதனைகளில் ஈடுபட்டனர்.

இச்சோதனை யில் 4 கிலோ எடையுள்ள பிளா ஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 9 கடை உரிமையாளர்களிடமிருந்து ரூ.5500 அபராதமாக வசூலிக்கப்பட்டது.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: சுற் றுலா நகரமான குன்னூரில் பிளா ஸ்டிக் பயன்பாடு தடை செய்யப்பட்டள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 20 மைக்ரான் அளவுள்ள பிளா ஸ்டிக் பைகள்தான் உபயோகிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு உள்ள நிலையில் தொடர்ந்து பலர் தடைசெய்யப்பட்ட பிளா ஸ்டிக் பைகளை விற் பனை செய்து வருவதால் சுற்றுச்சூழல் மாசடைகிறது.

இதேபோல் மார்க்கெட் பகுதிகளில் தரமற்ற பிளா ஸ்டிக் டப்பாக்களில் விற்கப்படும் ஊறுகாய் முற்றி லும் தடைசெய்யப்பட்டுள்ளது.

பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்பவர்கள் அதன் எடையை கம்யூட்டரில் அச்சிடப்பட்ட பிறகே விற்பனை செய்ய வேண்டும். மேலும் நாங்கள் காலாவதியான உணவுப் பண்டங்களை விற்பவர்களையும் கண்காணித்து வருகிறோம்.

மார்க்கெட் பகுதியில் உள்ள ஓடைகளில் அழுகிய மீன் மற்றும் கோழிக் கழிவுகளை கொட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது போன்ற செயல்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதால் கழிவு களை ஆள் நடமாட்டம் இல்லாத இட த்தில் போட உத்தரவிட்டுள்ளதாகக் கூறினர்.

 

பிளாஸ்டிக் பயன்படுத்த ஜன.1 முதல் மதுரையில் பயன்படுத்த தடை

Print PDF

தினமலர்            23.11.2010

பிளாஸ்டிக் பயன்படுத்த ஜன.1 முதல் மதுரையில் பயன்படுத்த தடை

மதுரை : மதுரையில், ஜன.1 முதல் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து, மாநகராட்சி தீர்மானம் நிறைவேற்றியது.தமிழகத்தில் கன்னியாகுமரி உள்பட சில மாவட்டங்களில் பிளாஸ்டிக் முழுமையாக ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தில் எழுமலை, அழகர்கோவில் பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்படுத்த கலெக்டர் காமராஜ் தடை விதித்தார். மாநகராட்சி எல்லைக்குள் பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்கப்படும் என சமீபத்தில், கமிஷனர் செபாஸ்டின் கூறியிருந்தார்.

அதன்படி, ஜன.1 முதல் மதுரையில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்து, நேற்று மேயர் தேன்மொழி தலைமையில் நடந்த மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்தில் மேலும், ""திருமண மண்டபங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள், இனிப்பு கடைகளில் பிளாஸ்டிக் டம்ளர்கள், கேரி பைகள், டைனிங் டேபிள் விரிப்புகள் போன்ற பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது,"" என கூறப்பட்டுள்ளது.

கூட்டத்தில் நடந்த விவாதம்:சாலைமுத்து (எதிர்கட்சி தலைவர்): மாடக்குளத்தில் பெருகிய மழைநீரை கலெக்டர் பார்வையிட்டு திறந்து விடக் கூறியுள்ளார். இங்கிருந்து முத்துப்பட்டி கண்மாய்க்கு தண்ணீர் செல்ல வேண்டும். ஆனால், வாய்க்கால்கள் தூர் வாரப்படவில்லை. பொன்மேனி கால்வாய், வீடுகள் கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. எனவே தண்ணீர் செல்ல வழியில்லை.

முருகேசன் (நரமைப்பு அலுவலர்): வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

மன்னன் (துணை மேயர்): பொதுப்பணித்துறையினருடன் பேச உள்ளோம்.

கணேசன்: மழைநீர் வடிகால் வாய்க்கால் கட்டியும் பல இடங்களில் மழை தண்ணீர் தேங்குகிறது.

கமிஷனர் செபாஸ்டின்: வடிகால் கட்டியதால் தான், மழை பெய்தும் பெரிய பாதிப்பு இல்லை. மழைநீர் வடிகால் பணியில் 30 சதவீதம் தான் முடிந்துள்ளது.

கணேசன்: பலமுறை கேட்டும், மாநகராட்சியின் சொத்து பட்டியல் இதுவரை கிடைக்கவில்லை.

நகரமைப்பு அலுவலர்: ஏற்கனவே வழங்கப்பட்ட பட்டியலில் சில சொத்துக்கள் விடுபட்டுள்ளன. இவை சரி செய்யப்பட்டு, வரும் வெள்ளிக்குள் புதிய பட்டியல் தரப்படும்.
கணேசன்: கவுன்சிலர்கள் கொடுக்கும் கோரிக்கை மனுக்களுக்கு பதில் அளிக்கப்படுவதில்லை.

கமிஷனர்: கோரிக்கை நிறைவேற்றப்படுகிறது. பதில் தர நடவடிக்கை எடுக்கப்படும்.

சிலுவை (காங்.,): தெருக்களில் டெலிபோன் நிறுவனத்தினர் இஷ்டத்திற்கு தோண்டி, கேபிள் பதிக்கின்றனர். மழைக்காலத்தில் சேதமடைந்த சாலைகளில் "பேட்ச் ஒர்க்' செய்யப்படும் என கூறினீர்கள். இந்த ஆண்டாவது செய்வீர்களா?

சக்திவேல் (தலைமை பொறியாளர்): முக்கிய சாலைகளில் ஒரு வாரத்திற்கு முன்பு "பேட்ச் ஒர்க்' முடிந்துள்ளது. உள் தெருக்களில், அடுத்து இப்பணி செய்யப்படும்.

சிலுவை: கீழமாரட் வெங்காய கடைகளை இடம் மாற்ற வேண்டும். மாநகராட்சி எல்லையை விரிவாக்கினால் எத்தனை வார்டுகள், மண்டலங்கள் உருவாகும்?

கமிஷனர்: இதை முடிவு செய்ய, தனி அதிகாரிகயை அரசு நியமிக்கும். அதன் பிறகே, வார்டுகள், மண்டலங்கள் முடிவாகும்.

நாகராஜன் (மேற்கு மண்டல தலைவர்): அரசரடியில் அகலப்படுத்தப்பட்ட பாலம் அருகே சாலையை சரி செய்ய வேண்டும். முடக்குச்சாலை சேதமடைந்துள்ளது.

ராஜபாண்டியன் (.தி.மு..,): பை-பாஸ் சர்வீஸ் சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவாதம் நடந்தது.

 


Page 59 of 135