Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

ஆண்டிபட்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக்கிற்கு தடை

Print PDF

தினமலர்            23.11.2010

ஆண்டிபட்டி பேரூராட்சியில் பிளாஸ்டிக்கிற்கு தடை

ஆண்டிபட்டி : ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஆண்டிபட்டி பேரூராட்சி பகுதியில் தடை விதித்து பேரூராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பேரூராட்சி கவுன்சில் கூட்டம் தலைவர் ராமசாமி தலைமையில் நடந்தது. துணைத்தலைவர் காசிராஜன், நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களை ஆண்டிபட்டி பகுதியில் உள்ள கடைகளில் பயன்படுத்த கூடாது என்றும் மீறி பயன்படுத்தினால் நடவடிக்கை எடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.மீறினால் உற்பத்தியாளர்களுக்கு 5000 ரூபாய், மொத்த விற்பனையாளர்களுக்கு 2500 ரூபாய், சில்லரை விற்பனையாளர்களுக்கு 750 ரூபாய், உபயோகிப்பவர்களுக்கு 100 ரூபாய் அபராத தொகை விதிக்கப்படும் என்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

பிளாஸ்டிக்கிற்கு வருகிறது தடை..!

Print PDF

தினகரன்            23.11.2010

பிளாஸ்டிக்கிற்கு வருகிறது தடை..!

மதுரை, நவ. 23: மதுரை மாநகராட்சி கூட்டம் மேயர் தேன்மொழி தலைமையில் நடந்தது. இதில் நிறைவேறிய முக்கிய தீர்மானங்கள்:

மதுரை நகரில் பிளாஸ் டிக் பொருட்கள் பயன்படுத்துவதால், மனித வாழ்வுக்கும், பாலூட்டி விலங்கினங்கள், நீர்வாழ் உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

எனவே மாநகராட்சி எல்லைக்குள் 20 மைக்கரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருள் விற்பனைக்கு தடை விதிக்கப்படுகிறது. 2011 ஜனவரி 1ம் தேதி முதல் தடை அமலுக்கு வருகிறது.

மாட்டுத்தாவணி பஸ்நிலையத்தை ரூ.4கோடியே 30லட்சத்திலும், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் வளாகத்தில் ஆம்னி பஸ் நிறுத்தும் நிலையம் ரூ.99லட்சத்து 50ஆயிரத்திலும், அண்ணா பஸ்நிலையம் ரூ.54லட்சத்திலும் அபிவிருத்தி செய்து மேம்படுத்த மொத்தம் ரூ.5கோடியே 28லட்சத்து 50ஆயிரம் அரசு அனுமதித்துள்ளது.

ரிங்ரோட்டில் வாகன சுங்க கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்படுகிறது.

சிறப்புசாலை திட்டத்தின்படி தமிழகஅரசு மதுரை நகருக்கு ரூ.33கோடியே 49லட்சம் வழங்கி உள்ளது. இதற்கான ஒப்பந்தங்களுக்கு அனுமதி அளிக்கிறது. மற்றும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேறின.

மதுரையில் பிளக்ஸ் போர்டு அனுமதி வழங்கியதில் பாரபட்சம் காட்டியதாக கூறி அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். மார்க்சிஸ்ட் கவுன்சிலர்கள் "மாநகராட்சியில் நிதி இல்லாத நிலை யில் மேம்பாட்டு திட்டங்களுக்கு அரசு நிதி ஒதுக்கப்படவில்லை. மாநகராட்சி நடவடிக்கைகள் பாரபட்சமாக உள்ளன" என புகார் கூறி வெளிநடப்பு செய்தனர்.

ஆணையாளர் செபாஸ்டின் கூறும்போது பிளக்ஸ் போர்டுகளுக்கு மாநகராட்சி அனுமதி வழங்குவதில் பாரபட்சம் கிடையாதுஎன்றார்.

காங்கிரஸ் கவுன்சிலர் சிலுவை பேசும்போது "முதல்வர், மத்திய அமைச்சர்கள் வருகையின் போது சாலையின் குறுக்கே வரவேற்பு வளைவோ, பிளக்ஸ் போர்டுகளோ அமைக்காமல், போக்குவரத்துக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் பெரிய அளவில் விழா நடந்தது. இது ஒரு எடுத்துக்காட்டான விழா. . இந்த மன்றத்தின் மூலம் காங்கிரஸ் சார்பில் மத்திய அமைச்சர் மு..அழகிரியை பாராட்டுகிறேன்" என்றார்.

 

ஆம்பூர் நகரில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகளுக்கு தடை

Print PDF

தினமணி              20.11.2010

ஆம்பூர் நகரில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகளுக்கு தடை

ஆம்பூர், நவ. 19: ஆம்பூரில் பிளாஸ்டிக் பைகள், டீ கப்புகள் விற்பனை செய்யவும், பயன்படுத்தவும் தடை விதித்து நகர்மன்றம் வெள்ளிக்கிழமை தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.

ஆம்பூர் நகர்மன்றத்தின் அவசர கூட்டம் அதன் தலைவர் வாவூர் நஜீர் அஹமத் தலைமையில் நடைபெற்றது. இதில், "நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் டீ கப்புகள், ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பாட்டில்கள் கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பை ஏற்படுத்தி விடுகிறது.

இதனால் சாலைகளில் கழிவுநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் பாலாறு, காணாறு படுக்கைகளில் மாசு ஏற்படுத்துகிறது. எனவே, நகராட்சி எல்லைக்குள் பிளாஸ்டிக் பைகள், பாலிதின் பைகள், பிளாஸ்டிக் டீ கப்புகள் மற்றும் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பாட்டில்கள் விற்பனை செய்வதையும், அவற்றை பயன்படுத்துவதையும் தடை செய்வது.

ஆம்பூரில் ரூ.4.08 கோடியில் சிறப்பு சாலைகள் திட்டம் 2010-2011 கீழ் மேற்கொள்ளப்பட உள்ள சாலை பணிகளுக்கு வரப்பெற்ற ஒப்பந்த புள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் நகர்மன்ற துணைத் தலைவர் தமிழரசி, பொறியாளர் இளங்குமரன், சுகாதார அலுவலர் கணேசன் உள்பட உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 


Page 60 of 135