Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

எழுமலையில் பிளாஸ்டிக் தடை

Print PDF

தினமலர்                10.11.2010

எழுமலையில் பிளாஸ்டிக் தடை

மதுரை : ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பைகள், கவர்கள், டீ கப்புகள், பிளாஸ்டிக் பொருட்களுக்கு இன்று முதல், எழுமலை பேரூராட்சியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.இப்பேரூராட்சி பகுதி தொழில் மற்றும் வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் கூட்டத்தில், இன்று முதல் அமல்படுத்த ஆதரவளிக்கப்பட்டது. துண்டு பிரசுரங்கள், அறிவிப்பு பலகைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுபோல், மதுரை மாவட்டத்தில் பிற பேரூராட்சிகளிலும் நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என கலெக்டர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

 

பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்து அழிக்கும் திட்டம் கிராமப்புறங்களிலும் செயல்படுத்த முடிவு: ஆட்சியர்

Print PDF

தினமணி             09.11.2010

பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்து அழிக்கும் திட்டம் கிராமப்புறங்களிலும் செயல்படுத்த முடிவு: ஆட்சியர்
மதுரை, நவ.8: பிளாஸ்டிக் கழிவுகளைப் பிரித்து அதைப் பாதுகாப்பாக அழிக்கும் திட்டத்தை கிராமப்புறங்களுக்கும் விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக, மதுரை மாவட்ட ஆட்சியர்

சி. காமராஜ் தெரிவித்தார்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே சக்கரப்பநாயக்கனூரில் கனரா வங்கி சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளின் தீமைகள் பற்றிய விழிப்புணர்வு முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில், மாவட்ட ஆட்சியர் சி.காமராஜ் கலந்துகொண்டு பேசியதாவது:

பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து நகரங்களில் மட்டுமல்லாது, கிராமங்களிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

பிளாஸ்டிக் கழிவுகளைத் தனியாகப் பிரித்து அதை அழிக்கும் முயற்சியாக ராம்கோ சிமென்ட் ஆலை மூலம், மாவட்ட நிர்வாகம் சார்பில் ஓர் உடன்படிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக மாநகராட்சிப் பகுதிகளிலும் இதுபோன்ற முயற்சியை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

இத்திட்டத்தை கிராமப்புறங்களிலும் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள், பள்ளி மாணவ, மாணவியரும் பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முன்வர வேண்டும்.

இப்பணியில் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், செஞ்சிலுவைச் சங்கம், கனரா வங்கி, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்றவை ஆர்வம் காட்டிவருவது வரவேற்கத்தக்கது என்றார்.

நிகழ்ச்சியில் கனரா வங்கி மூலம் பொது கடன் அட்டை 8 நபர்களுக்கும், கல்விக் கடன் 15 நபர்களுக்கும், குப்பைகளைச் சேகரிப்பதற்கு சக்கரப்பநாயக்கனூர் கிராம ஊராட்சிக்கு மூன்று சக்கர சைக்கிள்கள் உள்ளிட்ட ரூ.20 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளையும் ஆட்சியர் சி.காமராஜ் வழங்கினார்.

இதில், சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினர் எல்.சந்தானம், கனரா வங்கி துணைப் பொதுமேலாளர் பி.ஆர். பாலசந்தர், நபார்டு வங்கி உதவிப் பொதுமேலாளர் ஆர்.சங்கரநாராயணன், செல்லம்பட்டி ஒன்றியத் துணைத் தலைவர் ஜெ.பாண்டி, சக்கரப்பநாயக்கனூர் ஊராட்சிமன்றத் தலைவர் பி.ஜெயக்கொடி, முன்னோடி வங்கி மேலாளர் சுப்பிரமணியன், கனரா வங்கி மேலாளர் சேதுராமன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் ரா.அண்ணா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

 

கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதுகாக்க பிளாஸ்டிக் கழிவை அழிப்பதற்கு சிமென்ட் ஆலையுடன் ஒப்பந்தம்

Print PDF

தினகரன்                  09.11.2010

கிராமங்களில் சுற்றுச்சூழல் பாதுகாக்க பிளாஸ்டிக் கழிவை அழிப்பதற்கு சிமென்ட் ஆலையுடன் ஒப்பந்தம்

மதுரை, நவ.9: கிராமங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் கழிவுகளை பிரித்து அழிக்க தனியார் சிமென்ட் ஆலையுடன் ஒப்பந்தம் போடப்படும் என கலெக்டர் காமராஜ் தெரிவித்தார்.

உசிலம்பட்டி அருகே உத்தப்பநாயக்கனூரில் கன ரா வங்கி சார்பில் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் தீமை குறித்த விழிப்புணர்வு முகாம் நடந்தது.

இதில் கலெக்டர் காம ராஜ் பேசியதாவது: குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் கழிவுகளை தனியாக பிரித்து அழிக்கும் முயற்சியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. இதற்காக ராம்கோ சிமென்ட் ஆலையுடன் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இங்கு கொட்டப்படும் குப்பைகளிலிருந்து டீ கப், குடிநீர் பாட்டில்கள், பைகள் உள்ளிட்ட பிளாஸ்டிக் கழிவு களை மட்டும் பிரிக்கும் பணியை அந்தந்த உள்ளா ட்சி பணியாளர்கள் மேற்கொள்வர். இந்த பிளாஸ்டிக் கழிவுகளை சிமென்ட் நிறுவனம் தனது ஆலைக்கு எடுத்து சென்று தீ வைத்து அழிக்கும். இந்த தீயால் கிடைக்கும் வெப்பம் சிமென்ட் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது.

சாதாரணமாக பிளாஸ் டிக் கழிவுகளை எரித்தால் அதிலிருந்து வெளியாகும் புகை காற்றை மாசுபடுத்தும். ஆனால் சிமென்ட் ஆலையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அதிகபட்ச வெப்பநிலையில் பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும். இதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.

தற்போது கிராமங்களில் சுற்றுச்சூழலை பாதுகாக்க இத்திட்டம் விரிவுபடுத்தப்பட உள்ளது. முதற்கட்டமாக கருப்பாயூரணி, மேல மடை, சமயநல்லூர் உள் ளிட்ட சில பகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. கிராமப்பகுதியில் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் தான் திட்டம் வெற்றி பெறும். மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பணி யை மாணவ, மாணவியர் செய்ய வேண்டும். இவ்வாறு பேசினார்.

ரூ.20லட்சம் மதிப்பி லான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கன ரா வங்கி துணை பொது மே லாளர் பாலசந்தர், நபார்டு உதவி பொதுமேலாளர் சங்கரநாராயணன், முன்னோடி வங்கி மேலாளர் சுப்பிரமணியன், செல்லம்பட்டி ஒன் றிய துணைத்தலைவர் பா ண்டி, பஞ்சாயத்து தலைவர் ஜெயக்கொடி பங்கேற்ற னர்.

 


Page 63 of 135