Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பெங்களூர் நகரில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை மாநகராட்சி கமிஷனர் தகவல்

Print PDF

தினகரன்                   09.11.2010

பெங்களூர் நகரில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை மாநகராட்சி கமிஷனர் தகவல்

பெங¢களூர், நவ. 9:பெங்களூரில் பாலித்தீன் பைகளின் புழக்கத்திற்கு தடைவிதிக்க ஆலோசனை நடந்துருவதாக மாநகராட்சி கமிஷனர் சித்தய்யா தெரிவித்தார்.

திடக்கழிவு மேலாண்மை குறித்து பெங்களூர் மாநகராட்சியுடன் அமெரிக்காவின் சான்பிரான்ஸ்சிஸ்கோ மாநகராட்சி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்திருந்தது. 2009ம் ஆண்டு இந்த ஒப்பந்தத்தை முதல்வர் எடியூரப்பா ஏற்படுத்தியிருந்தார். இதைத் தொடர்ந்து அவ்வப்போது பெங்களூருக்கு சான்பிரான்ஸ்சிஸ்கோ மாநகராட்சியின் அதிகாரிகள் வந்து திடக்கழிவு மேலாண்மை குறித்து கருத்துப் பரிமாற்றம் செய்துவருகின்றனர். இதேபோல நேற்றும் பெங்களூர் மாநகராட்சி அலுவலகத்திற்கு சான்பிரான்ஸ்சிஸ்கோ மாநகராட்சியின் மறுசுழற்சி முறை மேலாளர் ராபர்ட் ஹாலி மற்றும் சுற்றுச்சூழல் கல்வி இயக்குநர் டாமர் சுர்டிவிஜ் ஆகியோர் வந்திருந்தனர்.

இதன்பிறகு பேசிய மேயர் நடராஜ் "திடக்கழிவு மேலாண்மையில் நமது மாநிலம் மிகவும் பின்தங்கியுள்ளது. ஆனால் சான்பிரான்சிஸ்கோவில் சிறப்பாக செய ல்படுகிறது. அந்நாட்டில் வீடுகளில் இருந்து கழிவுக ளை கொட்டும்போதே திட க்கழிவுகள் தனியாக பிரித்தெடுக்கப்படுகின்றன. இதுபோன்ற திட்டத்தைக் செய ல்படு¢த்தினால் சுற்றுச்சூழல் சீர்கெடுவது தடுக்கப்படும். பெங்களூரிலும் திடக்கழிவு மேலாண்மை திட்டத் தை செயல்படுத்துவது குறித்து கருத்து பரிமாற்றம் செய்துகொண்டோம்" என்றார்.

மாநகராட்சி கமிஷனர் சித்தய்யா கூறும்போது "திடக்கழிவுகளால் சுற்றுச்சூழல் சீர்கெடுவதை தடுப்பதற்காக பெங்களூரிலுள்ள ஷாப்பிங் மால்கள், வணிக நிறுவனங்கள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு கேரி பேக் எனப்படும் பால த்தீன் பைகளில் பொருட்களை அடைத்துக் கொடுப்பதை தடை செய்ய முடிவு செய்துள்ளோம். பெங்களூர் முழுவதிலும் அனைத் 1397776754 பகுதிகளிலும் இந்த வகை பாலத்தீன் பைகளை தடை செய்ய ஆலோசனை நடந்துவருகிறது. முதல்கட்டமாக மால்களில் இதற்கான உத்தரவை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதன்பிறகு படிப்படியாக பெங்களூர் நகரம் முழுவதிலும் பாலத்தீன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்படும்" என்றார்.

 

பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

Print PDF

தினமணி                      08.11.2010

பாலிதீன் பயன்பாட்டை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

திருவாரூர், நவ. 6: திருவாரூர் நகரில் பாலிதீன் பொருள்கள் பயன்பாட்டை ஒழிக்க நகராட்சி நிர்வாகம் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

திருவாரூர் மாவட்ட தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தின் மாதாந்திர கூட்டம் திருவாரூரில் அண்மையில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத் தலைவர் பிறை. அறிவழகன் தலைமை வகித்தார். பொருளர் நாகராஜ், துணைத் தலைவர் பி. கேசவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

திருவாரூர் நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு என நகர் முழுவதும் விளம்பரப்படுத்தினாலும் போதிய அளவு கண்காணிப்பு இல்லாததால், உணவு விடுதிகள், வியாபார நிறுவனங்களில் பாலிதீன் பைகள் பயன்பாடு குறைந்தபாடில்லை. அதைக் கட்டுப்படுத்தும் அலுவலர்களும் செயல்படவில்லை. அதேபோல, நகரில் நகர்மன்றம் சார்பில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டபோது, அனைத்துத் தரப்பினரும் பாராட்டினர். ஆனால், அதன்பிறகு நடவடிக்கைகள் இல்லாததால், மீண்டும் ஆக்கிரமிப்புகள் உருவாகி வருகின்றன. திருவாரூர் புதிய ரயில் நிலையப் பகுதியிலிருந்து பழைய ரயில் நிலையப் பகுதிக்கு இணைப்புச் சாலைக்கு டெண்டர் விடப்பட்டும், இதுவரை சாலை அமைக்கப்படவில்லை. திருவாரூர் - மயிலாடுதுறை அகல ரயில்பாதைப் பணிகள் கடந்த ஜூலை மாதத்தில் முடிக்கப்படும் என ரயில்வே நிர்வாகம் உறுதியளித்தும், இதுவரை முடிக்கப்படவில்லை. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

நகரில் புதை சாக்கடைத் திட்டத்தால், அனைத்துச் சாலைகளும் பழுதடைந்துள்ளன. இவற்றை விரைந்து சீர்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்டத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில், பொதுச் செயலர் ஆர். ரமேஷ், இணைச் செயலர் பாலகுருசாமி, அமைப்புச் செயலர் வீ. தர்மதாஸ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

 

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சேகரித்து விற்க நுகர்வோருக்கு "அட்வைஸ்'

Print PDF

தினமலர்            08.11.2010

ஒரு முறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் சேகரித்து விற்க நுகர்வோருக்கு "அட்வைஸ்'

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் யூஸ் அன்ட் த்ரோ போன்ற பிளாஸ்டிக் பொருட்களை விலைக்கு வாங்க உள்ளாட்சி அமைப்புகள் தயாராக உள்ளதாக மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலகம் அறிவித்துள்ளது. அந்த அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக "யூஸ் அன்ட் த்ரோ' போன்ற பிளாஸ்டிக் பொருள் பயன்பாட்டுக்கு ஏற்கனவே தடைவிதிக்கப்பட்டிருந்தது. இதன்மூலம் மாவட்டத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு ஓரளவு குறைந்திருந்தது. தடை நீடித்துவரும் நிலையில் தற்போது இவற்றின் பயன்பாடு அதிகரித்துள்ளது. புதுக்கோட்டை நகரில் திரும்பும் பக்கமெல்லாம் இவற்றை காண முடிகிறது. குறிப்பாக வடிகால்கள் மற்றும் நீர்நிலைகள் "யூஸ் அன்ட் த்ரோ' போன்ற பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துவருகிறது.

இவற்றால் நீர்நிலைகள் மாசுபடுவதோடு, சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கும் நிலை உள்ளது. "யூஸ் அன்ட் த்ரோ' போன்ற மறு சுழற்சி செய்ய முடியாத பிளாஸ்டிக் பொருட்களை சிமென்ட் தொழிற்சாலைகள் எரிபொருளாக உபயோகித்து வருகிறது. இவற்றை விலைக்கு வாங்கவும் சிமென்ட் ஆலைகள் முன்வந்துள்ளது. எனவே, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் "யூஸ் அன்ட் த்ரோ' போன்ற பிளாஸ்டிக் பொருட்களை வெளியே வீசாமல் அவற்றை சேகரித்து அருகில் உள்ள நகராட்சி, டவுன் பஞ்சாயத்து மற்றும் கிராமப் பஞ்சாயத்து அலுவலகங்களில் விற்பனை செய்யலாம். இதற்கு கிலோ ஒன்றுக்கு ஒரு ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மாவட்டத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக தேவையற்ற பிளாஸ்டிக் பொருட்களை கண்ட, கண்ட இடங்களில் வீசாமல் அவற்றை சேகரித்து உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க அனைவரும் முன்வரவேண்டும்.

Last Updated on Tuesday, 09 November 2010 07:33
 


Page 64 of 135