Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள் மாநகராட்சி அதிகாரி கோரிக்கை

Print PDF

தினகரன்                  01.11.2010

வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள் மாநகராட்சி அதிகாரி கோரிக்கை

பெங்களூர்,நவ.1:ஒவ்வொருவரும் தங்கள் வீட்டுக்கு வெளியேயுள்ள ஒரு மரத்தையாவது வளர்க்க வேண்டும். இதனால் நகரில் சுற்றுச்சூழல் மேம்பட்டு பசுமை அதிகரிக்கும் என்று மாநகராட்சி வன பாதுகாப்பு அதிகாரி சாந்தகுமார் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மக்களையும் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளோம். அந்த முறையில் அவரவர் பகுதி யிலுள்ள உள்ள மரங் களை பொறுப் பேற்று, பாதுகாக்க முடியும். இதனால் அநாவ சிய மாக கிளை களை, மரங் களை வெட் டுவது போன்ற வை தடுக்கப்படுவதுடன், பசுமையை பாதுகாப்பதில் மக்களின் ஆர்வமும் மேலோங்கும்.

உலகளாவிய பசுமை மயமாக்குதலுக்கு ஒவ்வோரு வரும் மரங்களை நட்டு, அவற்றை வளர்ப்பதை விட, எளிதான மாற்றுவழி வேறு இல்லை. இது தொடர்பாக குடியிருப்பு நல சங்கங்களின் ஒத்துழைப்புடன் இத்திட்டத்தை நிறைவேற்ற முயற்சிகள் நடந்து வருகிறது.

ஒவ்வோரு வரும் தங்கள் வீட்டுக்கு வெளி யேயுள்ள ஒரு மரத்தையாவது பொறுப்பேற்று வளர்த்தால், பசுமை மயமாக்கும் பணி மிக சிறப்பாக நடக்கும் தற்போது கிராமப்பகுதி களிலும் உள்ள விளை நிலத்திற்கு உரிமையாளரே பொறுப்பேற்று வளர்க்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Last Updated on Monday, 01 November 2010 05:37
 

பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: நகராட்சி ஆணையர் நடவடிக்கை

Print PDF

தினமணி                         28.10.2010

பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்: நகராட்சி ஆணையர் நடவடிக்கை

பெரியகுளம், அக். 27:பெரியகுளம் நகரில் கடைகளில் விற்பனைச் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்களை நகராட்சி ஆணையர் ஜி.அசோக்குமார் பறிமுதல் செய்தார்.

பெரியகுளம் நகராட்சி ஆணையர் தலைமையில் வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் கலந்து கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்துவதற்கும், விற்பனைச் செய்வதற்கும் தடைவிதிப்பது என்றும், மீறி பயன்படுத்துவோர் மீது நடவடிக்கை மேற்கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி நகராட்சி ஆணையர் ஜி.அசோக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் எஸ்.அகமது கபீர், டி.ஜெயசீலன், வருவாய் ஆய்வாளர் பாஸ்கரன் மற்றும் பணியாளர்கள், கடைகள் உள்ளிட்ட வர்த்தக நிறுவனங்களில் புதன்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் கடைகளில் இருந்த 50 கிலோ கேரி பேக்குகள் மற்றும் பிளாஸ்டிக் டம்ளர்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பிளாஸ்டிக் பொருள்களை விற்பனைச் செய்யக்கூடாது என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

 

இயற்கை இடர்பாடுகளின் பாதிப்பை குறைக்க நடவடிக்கை: சென்னை மேயர்

Print PDF

தினமணி              28.10.2010

இயற்கை இடர்பாடுகளின் பாதிப்பை குறைக்க நடவடிக்கை: சென்னை மேயர்

சென்னை, அக்.28: சென்னை மாநகராட்சியி்ன் கட்டுப்பாட்டில் உள்ள 10 மண்டலங்களில் இயற்கை இடர்ப்பாடுகளை எதிர்கொள்ள விழிப்புணர்வு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மேயர் மா.சுப்ரமணியன் தென்கொரிய மாநாட்டில் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தென்கொரியாவில் இன்சியான் நகரில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்களை குறித்த பல்வேறு மாநகர்களின் மேயர்கள் கலந்துகொண்ட மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

மாநாட்டில் இயற்கை இடர்பாடுகள் எதிர்கொள்ள எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து மேயர் பேசியதாவது:

சென்னை மாநகரம் வளர்ந்து வரும் மிகப்பெரிய நகரமாகும். ஏராளமான தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் சென்னை மாநகருக்கு பெருமை சேர்த்து வருகின்றன. சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 10 மண்டலங்களில் 155 வார்டுகள் உள்ளடக்கியுள்ளன. ஒவ்வொரு வார்டிலும் ஒரு மன்ற உறுப்பினர் பொதுமக்களால் தேர்வு செய்யப்படுகின்றனர். சென்னை மாநகராட்சிக்கு கிடைக்கப் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில் மண்டல அளவில் குழுக்கள் ஏற்படுத்தி, அதில் பொதுமக்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டு இயற்கை இடர்பாடுகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.

கிராமப்புற மக்களுக்கு இயற்கை இடர்பாடுகள் குறித்து பயனளிக்கக் கூடிய தகவல்கள் வழங்கப்படுகிறது. நீர்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு, தகுந்த மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளது.

மும்பையைப் போன்றே சென்னை மாநகரும் குடிசைப் பகுதிகளால் பிரச்னைகளை எதிர்நோக்கி வருகிறது. ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புர புனரமைப்பு திட்டத்தின் கீழ் குடிசை மக்களின் வாழ்க்தைத் தரத்தை மேம்படுத்திட குடியிருப்புகள், அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படுகிறது. சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையினை போக்க கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. சென்ற ஆகஸ்ட் திங்கள் 19ம் தேதி அன்று பாதுகாப்பான சென்னைவிழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சென்னை மாநகராட்சி, சென்னை பல்கலைக்கழகத்துடனும், கியோட்டோ பல்கலைக்கழகத்துடனும் இணைந்து இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்களை குறைப்பது தொடர்பான பல்வேறு நடவடிக்கைகளை கோட்ட அளவில் மேற்கொண்டு வருகிறது என மேயர் தெரிவித்ததாக மாநகராட்சி செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 


Page 65 of 135