Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

மங்களூரில் பிளாஸ்டிக் உபயோகம் குறைக்க திட்டம்

Print PDF

தினகரன் 13.10.2010

மங்களூரில் பிளாஸ்டிக் உபயோகம் குறைக்க திட்டம்

மங்களூர், அக்.13: மங்களூர் மாநகராட்சியில் பிளாஸ்டிக் கட்டுப்பாட்டை குறைப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

மங்களூர் மாநகராட்சி கமிஷனர் விஜயபிரகாஷ் இதுகுறித்து கூறுகையில், பிளாஸ்டிக் உபயோகம் எல்லா துறைகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. எனவே, அதற்கு தடை விதிக்கப்படுவதை படிப்படியாக அமலாக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் உபயோகத்தை குறைப்பதற்காக மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட பைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு பையின் விலை ரூ.3ஆகும். இப்பைகளை உபயோகிக்குமாறு மாநகராட்சி மக்களிடம் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது என்றார்.

 

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

Print PDF

தினமணி 08.10.2010

தூத்துக்குடியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

தூத்துக்குடி,​​ அக்.​ 7:​ தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.​ இது தொடர்பாக வியாழக்கிழமை நடைபெற்ற மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ​ ​ ​ ஆஷ் நினைவு பூங்கா பெயரை மாற்றக் கோரி பாஜக உறுப்பினர் வெளிநடப்பு செய்தார்.

​ தூத்துக்குடி மாநகராட்சியின் மாமன்ற அவசரக் கூட்டம்,​​ மேயர் இரா.​ கஸ்தூரி தங்கம் தலைமையில் நடைபெற்றது.​ துணை மேயர் ஜே.​ தொம்மை ஜேசுவடியான்,​​ ஆணையர் பெ.​ குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​​ ​ இந்த கூட்டத்தில் 17 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

​ ​ மாநகராட்சி எல்லைக்குள்பட்ட பகுதிகளில் 20 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பிளாஸ்டிக் பைகள் விற்பனை மற்றும் உபயோகத்திற்கு தடை விதிக்கவும்,​​ மீறுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகள்-​ 2000-ன் படி மொத்த விற்பனையாளர்களுக்கு ரூ.​ 1000,​ சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் உபயோகிப்பவர்களுக்கு ரூ.​ 100 அபராதம் விதிக்கவும்,​​ பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்து அழிக்கவும் மாமன்ற கூட்டத்தில் அனுமதி அளிக்கப்பட்டது.​ ​ இந்த தடை விரைவில் அமலுக்கு வரும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.​​ தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 50 சாலைகளை சிறப்பு சாலை 2010-2011 திட்டத்தின் கீழ் ரூ.​ 20.33 கோடி மதிப்பீட்டில் அரசு மானியத்தில் சீரமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.​ ​

​ மானியமாக இந்த நிதியை வழங்கிய முதல்வர்,​​ துணைமுதல்வர்,​​ சமூக நலத்துறை அமைச்சர் ஆகியோருக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை மேயர் கஸ்தூரி தங்கம் கொண்டு வந்தார்.​ ​ ​ இந்த தீர்மானமும் எதிர்ப்பின்றி நிறைவேற்றப்பட்டன.

​ தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட கடற்கரை சாலை,​​ ஜி.சி.​ சாலை சந்திப்பில் உள்ள ஆஷ் நினைவு பூங்காவை அழகுபடுத்தி பராமரிக்க வ.உ.சி.​ கல்வி கழகத்திடம் ஒப்படைக்க அனுமதி கோரும் தீர்மானமும் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

பாஜக உறுப்பினர் வெளிநடப்பு:​​​ இந்த தீர்மானத்துக்கு பாஜக உறுப்பினர் வி.எஸ்.ஆர்.​ பிரபு எதிர்ப்பு தெரிவித்தார்.​ ஆஷ் என்பவர் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் விடுதலை போராட்ட வீரர்களை அடக்குவதற்காக இரக்கமின்றி நடந்து கொண்டவர்.​ ​

​ எனவே ஆஷ் நினைவு பூங்கா என்பதை மாற்றி ​ ​ வஉசி பெயரைச் சூட்டி பூங்காவை பராமரிக்க வேண்டும் என வலியுறுத்தி மேயரிடம் அவர் மனு கொடுத்தார்.

​ பெயரை மாற்ற வேண்டுமானால்,​​ அது தொடர்பாக தனியாக கூட்டம் நடத்தி விவாதித்து தான் முடிவு செய்ய முடியும் என மேயர் தெரிவித்தார்.​ ​ ​ இந்த பதிலில் திருப்தியடையாத பிரபு கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்வதாக கூறி வெளியே சென்றார்.

 

தூத்துக்குடியில் பாலிதீன் பைகளுக்கு தடை

Print PDF

தினமலர் 08.10.2010

தூத்துக்குடியில் பாலிதீன் பைகளுக்கு தடை

தூத்துக்குடி: தூத்துக்குடியில் பாலிதீன் பைகள் விற்பனை, உபயோகத்திற்கு தடை விதித்து, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம், நேற்று மேயர் கஸ்தூரி தங்கம் தலைமையில் நடந்தது. கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜகோபாலன், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு, மாநகராட்சி எல்லைக்குள் 20 மைக்ரான் தடிமனுக்கு குறைவான பாலிதீன் பைகள் விற்பனை செய்ய, உபயோகிக்க தடைவிதிப்பது, மீறுவோருக்கு அபராதம் விதிப்பது, பராமரிப்பின்றி உள்ள வாஞ்சிநாதன் சுட்டுக் கொன்ற, ஆங்கிலேய கலெக்டர் ஆஷ்துரையின் நினைவுப்பூங்கா பராமரிப்பு பணியை தனியாரிடம் விடுவது உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 


Page 67 of 135