Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில் உள்ளாட்சிகள் ஈடுபடவேண்டும்: கலெக்டர் அழைப்பு

Print PDF

தினமலர் 07.10.2010

பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பில் உள்ளாட்சிகள் ஈடுபடவேண்டும்: கலெக்டர் அழைப்பு

மதுரை: ""சுற்றுப்புறச் சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொட்களை பயன்படுத்துவதை தவிர்க்கும் வகையில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவற்றை ஒழிக்கும் முயற்சியில் உள்ளாட்சிகள் ஈடுபடவேண்டும்,'' என கலெக்டர் காமராஜ் அறிவுறுத்தினார் உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:பிளாஸ்ட்டிக் பொருட்களின் பயன்பாடு நாளுக்கு நாள் மக்களிடையே அதிகரித்து வருகிறது. ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களான பைகள், கப்புகள், விரிப்புகள் ஆகியவை கண்ட இடங்களில் வீசப்படுகின்றன. மட்கும் தன்மை இல்லாததால் அவை, சுற்றுச்சுழல் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான விழிப்புணர்வை உள்ளாட்சி அமைப்புகள் மூலம் அனைத்து பகுதிகளிலும் ஏற்படுத்த வேண்டும். அதற்கு சில மாதம் காலஅவகாசம் அளித்து, தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும். மட்கும் தன்மை இல்லாத பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்தெடுக்கவும், அவற்றை விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராம்கோ சிமென்ட் தொழிற்சாலையில் அழிப்பதற்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. உள்ளாட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால், அதை பறிமுதல் செய்யும் அதிகாரம் உள்ளாட்சிகளுக்கு உண்டு, என்றார்.மாசுக்கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளர் கிருஷ்ணராம், மூர்த்தி எம்.எல்.., யூனியன் தலைவர்கள் கண்ணன், லலிதா, புஷ்பலதா, பேரூராட்சி தலைவர்கள் அழகு உமாதேவி, இந்திராகாந்தி, கலாவதி மற்றும் பலர் பங்கேற்றனர்.

Last Updated on Thursday, 07 October 2010 07:47
 

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் "பை' களுக்கு திடீர் தடை

Print PDF

தினமலர் 07.10.2010

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் "பை' களுக்கு திடீர் தடை

தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகராட்சி கூட்டம் இன்று காலை நடக்கிறது. கூட்டத்தில் மாநகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைகள் உபயோகிக்க தடை விதிக்கும் தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்படுகிறது.

தூத்துக்குடி மாநகராட்சி அவசர கூட்டம் இன்று காலை 10 மணிக்கு புதிய மாநகராட்சி கூட்ட அரங்கில் மேயர் கஸ்தூரிதங்கம் தலைமையில் நடக்கிறது. கமிஷனர் குபேந்திரன், இன்ஜினியர் ராஜகோபாலன், சுகாதார அதிகாரி (பொ) திருமால்சாமி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். கூட்டத்தில் தூத்துக்குடியில் 20 கோடியில் போடப்பட உள்ள ரோடுகளை சீரமைக்க டெண்டர் முடிவு செய்யப்படுகிறது. தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் 20 மைக்ரான் தடிமனுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பைகளை விற்பனை செய்தல் மற்றும் உற்பத்தி செய்ய தடை விதிக்கும் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்படுகிறது.

Last Updated on Thursday, 07 October 2010 07:48
 

பெரியகுளத்தில் பிளாஸ்டிக் பொருள்களை வரும் 15 முதல் பயன்படுத்தத் தடை

Print PDF

தினமணி 06.10.2010

பெரியகுளத்தில் பிளாஸ்டிக் பொருள்களை வரும் 15 முதல் பயன்படுத்தத் தடை

பெரியகுளம்,​​ அக்.​ 5:​ பெரியகுளத்தில் வரும் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பைகள்,​​ கேரி பேக்குகள் உள்ளிட்ட பல்வேறு வகையான பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தத் தடைவிதிப்பது என,​​ நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.​ ​

​ ​ ​ ​ இந்த ஆலோசனைக் கூட்டத்துக்கு,​​ நகராட்சி ஆணையர் ​(பொறுப்பு)​ என்.​ மோனி தலைமை வகித்தார்.​ சுகாதார ஆய்வாளர்கள் எஸ்.​ அகமது கபீர்,​​ டி.​ ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.​ ​ ​ ​ ​ ​ இதில்,​​ உணவகங்கள்,​​ மளிகைக் கடை,​​ டீ கடை உள்ளிட்ட வர்த்தக நிறுவன உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.​ ​ ​ ​ ​ ​ ​ அப்போது,​​ நகராட்சிப் பகுதியில் உள்ள அனைத்து விதமான வர்த்தக நிறுவனங்களிலும் வரும் 15-ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்தக் கூடாது.​ மேலும்,​​ விற்பனை செய்யவும் கூடாது என்றும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.​ ​

​ ​ ​ ​ எனவே,​​ இதனை மீறி பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்யப்பட்டால்,​​ அவற்றை பறிமுதல் செய்வதோடு,​​ அபராதமும் விதித்து சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று,​​ ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 


Page 68 of 135