Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பெரியகுளத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை

Print PDF

தினமலர் 05.10.2010

பெரியகுளத்தில் பிளாஸ்டிக்கிற்கு தடை

பெரியகுளம்:பெரியகுளம் நகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை தவிர்ப்பது குறித்த ஆலோசனை கூட்டம் நகராட்சியில், கமிஷனர் (பொறுப்பு) மோனி தலைமையில் நடந்தது. சுகாதார ஆய்வாளர்கள் அகமதுகபீர், ஜெயசீலன் முன்னிலை வகித்தனர். ஓட்டல்கள், டீக்கடை உரிமையாளர்கள், வர்த்தக சங்கத்தினர், வியாபாரிகள் சங்கத்தினர் உட்பட வணிக நிறுவனத்தினர் கலந்து கொண்டனர். அக்., 15ம் தேதிக்கு பிறகு பிளாஸ்டிக் பொருட்களை யாரும் பயன்படுத்தக்கூடாது. பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தல் பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படும் என கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

 

அக்.15 முதல் பெரியகுளம் நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

Print PDF

தினகரன் 05.10.2010

அக்.15 முதல் பெரியகுளம் நகரில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை

பெரியகுளம், அக். 5: பெரியகுளம் நகரில் வரும் 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்படும் என்று ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

தேனி மாவட்டம், பெரியகுளம் நகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு தடை விதிப்பதற்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) மோனி தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர், ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக்கடைகள், மளிகை கடைகள் உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், நகராட்சி பகுதியில் உள்ள வர்த்தக நிறுவனங்கள், ஓட்டல்கள், டீக் கடைகள், மளிகை கடைகளில் வரும் 15ம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தக் கூடாது. மளிகை கடைகளில் விற்பனைக்கு வைக்க கூடாது. இதனை மீறி பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்தால் பொருட்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், அபராதம் விதிக்கப்படும். மேலும் சட்டப்படியான நடவடிக்கை தொடரப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

கம்பம் நகராட்சி பகுதியில் பாலிதீன் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது

Print PDF

தினகரன் 05.10.2010

கம்பம் நகராட்சி பகுதியில் பாலிதீன் பைகளுக்கு தடை நாளை முதல் அமலுக்கு வருகிறது

கம்பம், அக். 5: கம்பம் நகராட்சி பகுதியில் பாலித்தீன் பைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் நகராட்சி பகுதியில் பிளாஸ்டிக் பைககள், கேரி பேக்குகள், டீ கப்புகள் ஆகியவை அதிகளவில் பயன்படுத் தப்படுகின்றன. இதனால் சுற்றுச்சூழல் மாசுபட்டு வருகிறது. மேலும் பாலிதீன் பைகள் ஆங்காங்கே சாக்கடைகளை அடைத்துவிடுகிறது. இதனால் தண்ணீர் தேங்கி கொசுக்கள் உற்பத்தியும் அதிகரித்துள்ளது. எனவே, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதிக்க வேண்டுமென கம்பம் நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இத்திட்டம் செயல்படுத்துவது குறித்து இதுவரை பொதுமக்களிடம் இருந்து எந்தவித எதிர்ப்பும் வரவில்லை.

இதையடுத்து கம்பம் பகுதியில் வர்த்தக நிறுவனங்கள், கடைகள், உரிமையாளர்களை அழைத்து நாளை (6ம் தேதி) நகர்மன்றத் தலைவர் தலைமையில் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பிளாஸ்டிக் பைகளுக்கு தடைவிதிக்கப்படுவதாக சுகாதார அலுவலர்கள் அறிவிக்கவுள்ளனர். இந்த தடை உடனடியாக அமலுக்கு வருகிறது.

தொடர்ந்து பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்தி னால் மொத்த வியா பாரிகளுக்கு ரூ.500, சில் லறை வியாபாரிகளுக்கு ரூ.200, உபயோகப்படுத்துவோருக்கு ரூ.100 என அபராதம் விதிக்கப்படும் என சுகாதார ஆய்வாளர் ஜெயராமன் தெரிவித்துள்ளார்.

 


Page 69 of 135