Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்த தடை

Print PDF

தினமலர் 02.09.2010

பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்த தடை

தஞ்சாவூர்: "தஞ்சை மாவட்டத்தில் கடைகள் உட்பட எந்த இடங்களிலும் பிளாஸ்டிக் கேரி பேக் பயன்படுத்த தடை விதிக்கப்படுவதால், மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் விதிப்படி மறு சுழற்சி செய்யப்பட்ட மற்றும் வண்ண நிறத்தில் உள்ள கேரி பேக்களில் உணவுப்பொருட்கள் சேமித்து வைத்தல், பயன்படுத்துதல், விற்பனை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல இடங்களில் பல வண்ணங்களில் கேரி பேக்களில் உணவுப்பொருட்கள் சேமித்து வைப்பதும், விற்பனை செய்வது, பயன்படுத்துவதும் நடைமுறையில் இருக்கிறது. குறிப்பாக, மாமிச உணவு வகைகள் விற்பனை செய்யும் இடங்களில் இத்தகைய கேரி பேக்கள், குறிப்பாக கறுப்பு வண்ண பை அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இனி வரும் காலங்களில் வண்ண நிற கேரி பேக்களில் உணவுப்பொருட்கள் சேமித்து வைப்பது, பயன்படுத்துவது, விற்பனை செய்வது அறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், உணவுப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படும், என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு

Print PDF

தினமணி 30.08.2010

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் மாநகராட்சி அலுவலர்கள் ஆய்வு

வேலூர், ஆக. 28: வேலூரில் பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்துவது குறித்து உணவகங்கள் மற்றும் டீக்கடைகளில் மாநகராட்சி அலுவலர்கள் சனிக்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

நகர் நல அலுவலர் கோவிந்தன், உணவு ஆய்வாளர் கவுரிசுந்தர், துப்புரவு ஆய்வாளர்கள் சிவக்குமார், முருகன், லூர்துசாமி உள்ளிட்டோர் பழைய பஸ் நிலையம், மக்கான் சந்திப்பு, பழைய பைபாஸ் சாலை, புதிய பஸ் நிலையம் ஆகிய பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, டீக்கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கப்புகள், டம்ளர்கள், பைகள் போன்றவை பயன்படுத்தியது தெரியவந்தது. இதையடுத்து சுமார் 500 கிலோ எடை கொண்ட பிளாஸ்டிக் பொருள்களை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

மேலும் ஒரு உணவகத்தில் கெட்டுப்போன நிலையில் கோழி இறைச்சி, சமையல் எண்ணெய் போன்றவை இருப்பதை கண்டறிந்து அப்புறப்படுத்தினர்.

 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்

Print PDF

தினமலர் 27.08.2010

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் துவக்கம்

திருச்சி: திருச்சியில் தனியார் அமைப்பு சார்பில், பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேயர் துவக்கி வைத்தார். "இன்டர்நேஷனல் லயன்ஸ் கிளப்' சார்பில், பிளாஸ்டிக் ஒழி ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் மாநகராட்சி முன் நேற்று நடந்தது. மாநகராட்சி மேயர் சுஜாதா தலைமை வகித்து பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். கமிஷனர் பால்சாமி, லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், மாணவ, மாணவியர் பங் கேற்றனர். விழிப்புணர்வு துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்ட து; விழிப்புணர்வு வாசகம் அட ங்கிய தட்டி ஏந்திச் சென்றனர்.

 


Page 74 of 135