Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

'பிளாஸ்டிக் ஒழிப்பில் மாணவர்கள் பங்களிப்பு சிறப்பு'

Print PDF

தினமணி 18.08.2010

'பிளாஸ்டிக் ஒழிப்பில் மாணவர்கள் பங்களிப்பு சிறப்பு'

தக்கலை,​​ ஆக.​ 17: ​ ​ பிளாஸ்டிக் கழிவு இல்லாத மாவட்டத்தை உருவாக்குவதில் சக்திமானாக விளங்கி பெரிதும் உதவியவர்கள் மாணவர்கள் என ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ பெருமிதம் தெரிவித்தார்.

​ ​ தக்கலையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பூஜ்யக் கழிவுத் திட்ட கருத்தரங்கில் அவர் மேலும் பேசியதாவது:

​ ​ கன்னியாகுமரி மாவட்டத்தை குப்பை இல்லாத மாவட்டமாக்கும் நோக்கத்தில் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் மூலம் பூஜ்யக் கழிவுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

​ ​ நமது முன்னோர் குப்பைகளைச் சேமித்து உரமாக மாற்றி தோட்டங்களுக்குப் பயன்படுத்தி வந்தனர்.​ ஆனால்,​​ தற்போது சாலை ஓரங்களிலும்,​​ தெருக்களிலும் குப்பைகளை குவிக்கின்றனர்.​​ ​

இந்நிலை மாற வேண்டும்.​ எனவே அனைவரும் குப்பைகளை வெளியே கொட்டும் பழக்கத்தை நிறுத்த வேண்டும் என்றார் அவர்.

​ ​ மாவட்ட உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் கிருபானந்த ராஜன்,​​ பயிற்றுநர் கிரிஜாமணி ஆகியோர் குறித்து பேசினர்.​ கருத்தரங்கில்,​​ பூஜ்யக் கழிவுத் திட்டம் தொடர்பான குறுந்தகடு பள்ளி மாணவ,​​ மாணவிகளுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது.

​ ​ பத்மநாபபுரம் நகர்மன்ற ஆணையர் செல்லமுத்து,​​ கல்குளம் வட்டாட்சியர் பால் சுந்தர்ஜான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.​ நகர்மன்றத் தலைவர் ரேவன்கில் வரவேற்றார்.​ சுகாதார அலுவலர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

 

கடலூர் நகரில் 2 இடங்களில் தகன மேடை தயார்: சுற்றுச்சூழலை பாதுகாக்க நகராட்சி திட்டம்

Print PDF

தினமலர் 18.08.2010

கடலூர் நகரில் 2 இடங்களில் தகன மேடை தயார்: சுற்றுச்சூழலை பாதுகாக்க நகராட்சி திட்டம்

கடலூர் : கடலூர் நகரத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நவீன எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணி முடிந்து மக்கள் பயன்பாட்டிற்கு தயார் நிலையில் உள்ளது. கடலூர் நகரத்தில் பெண்ணையாறு, கெடிலம் ஆற்றில் பிரேதங்களை எரித்து வருகின்றனர். இதனால் புகை மற்றும் துர் நாற்றம் சுற்றுச் சூழலை மாசுபடுத்தி வருகிறது. இதனைத்தடுக்க மாநகராட்சிகளில் மின் தகன மேடை அமைக்கப் பட்டு வருகிறது. இதற்கு அதிக செலவுத் தொகை பிடிக்கும் என்பதால் குறைந்த செலவில் எரிவாயு தகன மேடையை மக்கள் பயன் படுத்தி வருகின்றனர். வட இந்தியாவில் பல நகராட்சிகளில் எரிவாயு தகன மேடை அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதேப்போல் கடலூர் நகராட்சியில் எரிவாயு தகன மேடை அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அதிக மக்கள் தொகை இருப்பதால் கடலூரில் திருப்பாதிரிப்புலியூர் கம்மியம்பேட்டை கெடிலம் ஆற்றங்கரையிலும், மஞ்சக்குப்பம் பெண்ணையாற்றங்கரையிலும் எரிவாயு தகனமேடை அமைக்க முடிவு செய்யப்பட்டு ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் எரிவாயு தகன மேடை கட்டுமானப் பணி நிறைவடைந் துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக் காத வண்ணம் உள்ளூரில் மலிவாக கிடைக்கக் கூடிய கருவேல முள் செடியின் குச்சிகளைக் கொண்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாய்லரில் போட்டு சூடேற்றும் போது உண் டாகும் "பயோ காஸ்' குழாய் மூலம் எடுத்துச் செல்லப்பட்டு தகன மேடையில் அமைக்கப் பட்டுள்ள 6 பர்னஸ் மூலம் அதிக வேகத்தில் எரியும் படி அமைக்கப்பட்டுள்ளது. இந்த "பயோ காஸ்' அதிக எரிதிறன் கொண்ட வாயு என்பதால் எளிதில் பிரேதத்தை புகை, துர்நாற்றமின்றி ஒரு மணிநேரத்தில் எரித்து சாம்பலாக்கி விடும். இதனை பராமரிப்பதற்காக ஆகும் செலவை அறக்கட்டளை மூலம் நிர்வகிக்க நகராட்சி முடிவு செய்துள்ளது. அதற்காக நகராட்சி நிதி திரட்டி வருகிறது.

இது குறித்து நகராட்சி கமிஷனர் குமார் விடுத் துள்ள செய்திக்குறிப்பு: கடலூர் நகராட்சியில் மஞ்சக்குப்பம், கம்மியம்பேட்டை பகுதிகளில் இரு நவீன தகன மேடைகள் விரைவில் பொதுமக் கள் பயன்பாட்டிற்கு கெ õண்டுவரப்படவுள்ளது. இந்த எரிவாயு தகன மேடையை நவீன எரிவாயு தகன மேடை பராமரிப்பு அறக்கட்டளை பராமரிக்க உள்ளனர். இருப்பினும் பராமரிப்பு செலவுக்காக நிதி அதிக அளவில் தேவைப்படும். எனவே நகராட்சி நிர்வாக இயக்குனரின் அறிவுரைப்படி பொதுமக்களிடமிருந்து நிதி திரட்ட வேண்டி வங்கிக் கணக்கு தனியாக துவக்கப்பட்டுள்ளது. இந்த நிதிக் கணக்கு நகராட்சியால் நிரந்தர வைப்பு நிதிக் கணக்காக ஆணையர், கடலூர் நகராட்சி நவீன எரிவாயு தகனமேடை பராமரிப்புக் கான பொது மக்களின் பங்குத் தொகை என்ற தலைப்பில் பரோடா வங்கி (எண் 12220100013082), கடலூர் கிளையில் பராமரிக் கப்படுகிறது. இவ்வைப்புத் தொகை நிரந்தரமாக இருக்க, அதன் மீதான வட்டித் தொகையின் மூலம் கிடைக்கும் வருமானம் மட்டும் எரிவாயு தகன ÷டை பராமரிப்பு பணிக்காக செலவிடப்படும். நல்ல உள்ளம் கொண்ட பொது மக்களின் பங்குத் தொகையினை மேற்படி வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

ராமேஸ்வரம் தீவில் பாலிதீன் சோதனை

Print PDF

தினமலர் 16.08.2010

ராமேஸ்வரம் தீவில் பாலிதீன் சோதனை

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம், பாம்பன் மற்றும் தங்கச்சிமடம் பகுதி ஓட்டல், மளிகை கடை ,கோழி, இறைச்சி ,காய்கறி, பழக்கடைகளில் ராமேஸ்வரம் தாசில்தார் தலைமையில் பாலிதீன் சோதனை செய்யப் பட்டது. வருவாய் துறை, நுகர்வோர் இயக்கம், விபத்து மீட்டு சங்கத்தினர் உடன் சென்றனர். 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பாலிதீன், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன. 14 ஆயிரத்து 300 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. சோதனையின்போது அனுமதி இல்லாமல் தயாரிக்கப்பட்ட பாக்கெட் குளிர்பானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப் பட்டது. கலெக்டர் ஹரிகரன் கூறியதாவது: இந்த ஆண்டு இறுதிக்குள் நூறு சதவீதம் பாலிதீன் பயன்பாடற்ற பகுதியாக ராமேஸ்வரம் தீவு விளங்கும். யாத்ரீகர்கள் பாலிதீன் கொண்டு வருவதை தடுக்க விரைவில் மண்டபம் மற்றும் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷனில் சோதனை மையம் அமைக்கப்படும். தீவின் சுற்றுச்சூழல் நலன்கருதி பாலிதீன், பிளாஸ்டிக் தீவிர ஒழிப்பு நடவடிக்கையில் பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். பயன்படுத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்,என்றார்.

Last Updated on Monday, 16 August 2010 06:07
 


Page 77 of 135