Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக்கிற்கு தடையால், பேப்பர் கவர்களுக்கு மவுசு!

Print PDF

தினமலர் 04.08.2010

பிளாஸ்டிக்கிற்கு தடையால், பேப்பர் கவர்களுக்கு மவுசு!

போடி : போடியில் பிளாஸ்டிக் கேரி பேக்குகள், தட்டுகள், டம்ளர்களை பயன்படுத்த தடை செய்யப்பட்டதால் பேப்பர் கவர்களுக்கு "மவுசு' ஏற்பட்டுள்ளது. பிளாஸ்டிக் கேரி பேக்குகள், பிளாஸ்டிக் தட்டுகள், டம்ளர்கள், உறைகளை பயன்படுத்த கூடாது, மீறுவோறுக்கு ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என போடி நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. மீறி விற்பனை செய்த பிளாஸ்டிக் கேரி பேக்குகளை பறிமுதல் செய்து அபராதமும் விதித்தனர். ஜவுளிக் கடைகளிலும் பிளாஸ்டிக் பைகளை 10ம் தேதிக்கு பிறகு பயன்படுத்த கூடாது என நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக ஜவுளிக்கடை உரிமையாளர்கள் துணிப்பைகளை கொள்முதல் செய்ய துவங்கி விட்டனர்.தற்போது ஓட்டல்கள், வர்த்தக நிறுவனங்களில் பொதுமக்கள் வாங்கும் பொருட்களுக்கு கேரி பேக்கிற்கு பதிலாக பழைய பேப்பர்களை கவர்களாக மாற்றி போட்டு தருகின்றனர். ஓட்டல்களில் சாப்பாடு, டிபன் பார்சல் வாங்குபவர்கள் பாத்திரங்களையும், பைகளையும் எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது.

 

பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

Print PDF

தினமணி 02.08.2010

பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

தென்காசி, ஆக. 1: குற்றாலத்தில் பிளாஸ்டிக் தவிர்ப்பு விழிப்புணர்வு பேரணி சனிகிழமை நடைபெற்றது. குற்றாலம் பேருந்துநிலையத்தில் துவங்கிய இப்பேரணியை தமிழக வருவாய்த் துறை அரசு செயலர் கி. தனவேல் கொடியசைத்து துவக்கிவைத்தார்.

பேரணியில் பசுமைப் படையை சேர்ந்த மாணவர்கள், இலஞ்சி ராமசாமிபிள்ளை மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், குற்றாலம் டி.கே.டி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் கலந்துகொண்டனர்.

பேரணி குற்றாலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, பின்னர் பேருந்து நிலையத்தில் முடிவடைந்தது.

அதைத் தொடர்ந்து குற்றாலம்- ஐந்தருவி சாலையில் வெண்ணைமடை குளம் பகுதியில் குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சி சார்பில் மேற்குத் தொடர்ச்சி மலை சுற்றுலா அபிவிருத்தி திட்டப்பணிகள் திட்டத்தில் ரூ. 3 லட்சம் செலவில் கட்டப்பட்டுளள மலையேறும் பயிற்சியாளர்களுக்கான ஓய்வுக்கூடத்தை கி. தனவேல் திறந்துவைத்தார். விழாவில் குற்றாலம் பேரூராட்சி துணைத் தலைவர் பா. ராமையா, செயல் அலுவலர் கொ. ராஜையா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

குற்றாலம் பகுதியில் சேகரிக்கப்பட்ட ரூ. 86 ஆயிரம் மதிப்பிலான 500 கிலோ பிளாஸ்டிக் பொருள்கள் திருநெல்வேலி சிமென்ட் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது என செயலர் அலுவலர் கொ. ராஜையா தெரிவித்தார்.

 

பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதித்தும் தொடரும் விற்பனை

Print PDF

தினமலர் 02.08.2010

பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதித்தும் தொடரும் விற்பனை

பண்ருட்டி:பண்ருட்டி நகராட்சி அதிகாரிகள் அலட்சியப் போக்கினால் பிளாஸ்டிக் பாலித்தீன் பொருட்களுக்கு தடை விதித் தும் படுஜோராக விற்பனை நடந்து வருகிறது.பண்ருட்டி நகராட்சி பகுதியில் சாக் கடை மற்றும் குப்பைகளில் பிளாஸ்டிக் பாலித்தீன் பைகள், டீ கப்புகள், தெர்மாகூல் பிளேட்டுகள் அதிகரித்துள்ளன. இதனால் சாக்கடை கழிவுநீர் சீராக செல்வதில் பிரச்சனை ஏற்பட்டது.இதனையடுத்து நகராட்சி சார்பில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கும், விற்பனை செய்வதற்கும் கடந்த டிசம்பர் 31ம் தேதி நடந்த நகர மன்ற கூட்டத்தில் தடை செய்து தீர்மானம் (தீர்மானம் எண்.299) நிறைவேற்றப் பட்டது.அதன்படி கடந்த ஏப்ரல் 15ம் தேதி நகராட்சி அலுவலகத்தில் வியாபாரிகள் சங்க ஆலோசனைக் கூட்டத்தில் மறுசுழற் சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பைகள், தட்டுகள், கப்புகள், டம்ளர், மேஜை விரிப்பு, தெர்மா கூல் பிளேட்டுகள் ஆகியவை விற்பதற்கும், உபயோகப்படுத்துவதை ஜூன் 15ம் தேதிக்குள் நிறுத்திகொள்ள வேண்டும் என நகராட்சி கமிஷனர் எச்சரித்தார். மேலும் கால அவகாசத் திற்குப் பின் விற்பனை செய்யும் பிளாஸ் டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்படும், மீறி விற்பவர்களுக்கு 500 ரூபாய் முதல் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிப்பது என நகராட்சி அறிவித்தது.ஆனால் அறிவிப்பிற்குப் பின் பெயரளவிற்கு பள்ளி மாணவ, மாணவர்களை அழைத்து விழிப்புணர்வு ஊர்வலம் மட்டும் நடத்தினர். பின்னர் பிளாஸ்டிக் விற்பனை நடைபெறுகிறதா? தொடர்ந்து உபயோகப்படுத்தப்படுகிறதா என்பதை கண்டு கொள்ளவில்லை.இதனால் பண்ருட்டி நகரில் டாஸ்மாக் கடைகள், டீ கடை, ஓட்டல்கள், இரவு நேர தள்ளுவண்டி கடைகள், திருமண மண்டபங்களில் பிளாஸ்டிக் தண்ணீர்,டீ கப், தெர்மாகூல் பிளேட்டுகள், பிளாஸ் டிக் கவர் உபயோகம் மீண்டும் அதிகரித்துள்ளது.பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்வதாக கூறி கண்துடைப்பு நாடகங்களை அரங்கேற்றி விளம்பரம் உள்ளிட்ட செலவுகளை செய்து பொதுமக்களின் வரிப் பணத்தை தான் நகராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும் வீணடித்து வருகின்றனர். நிரந்தரமாக தீர்வு காண நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை.

 


Page 81 of 135