Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

வேண்டாமே பிளாஸ்டிக் பொருட்கள் : இருந்தால் நடவடிக்கை இருக்கும்

Print PDF

தினமலர் 22.07.2010

வேண்டாமே பிளாஸ்டிக் பொருட்கள் : இருந்தால் நடவடிக்கை இருக்கும்

ஊட்டி : "தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை வைத்திருப்போர் அப்புறப்படுத்த வேண்டும்; தவறினால் நடவடிக்கை எடுக்கப்படும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மாவட்டத்தில் உள்ள அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில், 20 மைக்ரான்களுக்கு குறைவான தடிமன் உள்ள பிளாஸ்டிக் கவர்களில், உணவுப் பொருட்களை அடைத்து விற்பனை செய்யவும், பிளாஸ்டிக் கேரிபேக், டம்ளர், தட்டு போன்ற பொருட்களை பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி பொருட்களை விற்பனை செய்வோர், பயன்படுத்துவோருக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

நீலகிரியில் தற்போது, இப்பொருட்களின் பயன்பாடு அதிகளவு உள்ளது. பொதுமக்கள், பிளாஸ்டிக் கேரிபேக், டம்ளர், தட்டு போன்ற பொருட்களை பயன்படுத்த வேண்டாம்; பயன்படுத்துவோர் குறித்த தகவலை, மாவட்ட கலெக்டர், தாசில்தார், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு தெரிவிக்க வேண்டும். அறிவிப்பை மீறி பிளாஸ்டிக் பொருட்களை தயாரித்து விற்பனை செய்தால், ஒவ்வொரு முறையும் 1,500, மொத்த விற்பனையாளருக்கு 500, சில்லரை வியாபாரிகள் விற்பனை செய்தால் 200, நகரில் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் பயன்படுத்தினால் 50 ரூபாய் வசூலிக்கப்படும்.

அறிவிப்பு வெளியிட்ட 15 நாட்களுக்குள், வியாபாரிகள் தங்களிடம் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை அறவே அப்புறப்படுத்த வேண்டும். இதைக் கண்டறிய, மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது; குழுவினர், 15 நாட்களுக்கு பின் ஆய்வை தொடங்கும் முன், பிளாஸ்டிக் பொருட்களை அப்புறப்படுத்த வேண்டும். திடீர் ஆய்வின் போது இப்பொருட்கள் கண்டறியப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, மாவட்ட கலெக்டர் அர்ச்சனா பட்நாயக் கூறியுள்ளார்.

 

பிளாஸ்டிக் ஒழிப்பை தொடர்ந்து குமரியை குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்றும் திட்டம்

Print PDF
தினகரன் 30.06.2010

பிளாஸ்டிக் ஒழிப்பை தொடர்ந்து குமரியை குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்றும் திட்டம்

நாகர்கோவில், ஜூன் 30: குமரி மாவட்டத்தை குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்றும் திட்டத்திற்காக கலெக்டர் ராஜேந்திர ரத்னூ நகராட்சி கவுன்சிலர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

குமரி மாவட்டத்தில் பிளா ஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து குப்பை கள் இல்லாத மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைகளை துவக்கியுள்ளது. இது தொடர்பாக நகராட்சி கவுன்சிலர்களுடனான ஆலோசனை கூட்டம் நாகர்கோவிலில் கலெக் டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது.

கலெக்டர் ராஜேந்திர ரத்னூ தலைமை வகித்தார். நாகர்கோவில் நகராட்சி சேர்மன் அசோகன் சாலமன், துணை சேர்மன் சைமன்ராஜ், ஆணையர் ஜானகி, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் கிருபானந்தராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் மதுசூதனன், மாவட்ட வழங்கல் அலுவலர் ஸ்ரீராமன் உட்பட பல்வேறு துறை அதிகாரிகள், கவுன்சிலர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டனர். பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை நகர பகுதிகளில் வெற்றிகரமாக செயல்படுத்தியதற்காக நகராட்சி சேர்மன், கவுன்சிலர்களுக்கு பாராட்டு தெரிவித்த கலெக்டர் மரக்கன்றுகளை பரிசாக வழங்கினார்.

பின்னர் நகராட்சியில் வார்டு பகுதிகளை மேலும் மேம்படுத்த வேண்டி கவுன்சிலர்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது துணை சேர்மன் சைமன்ராஜ், ‘சைமன்நகர் பகுதியில் உள்ள பூங்காவை மேம்படுத்த வேண்டும். வார்டுக்கு உட் பட்ட ஆசாரிபள்ளம் ரோடு என்ற முகவரியின் கீழ் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் வருகின்றன. இவற்றை அந்தந்த பகுதி தெருக்களின் பெயர்களில் தனித்தனியாக பிரிக்க வேண்டும்என்றார்.

குறைகளை கேட்டறிந்த கலெக்டர் இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாகவும், சில இடங்களை நேரில் சென்று ஆய்வு செய்ய இருப்பதாகவும் உறுதியளித்தார்.

பின்னர் கலெக்டர் கூறுகையில், ‘குமரி மாவட்டத்தில் மக்களிடம் ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாகவும், உள்ளாட்சி பிரதிநிதிகளின் ஒத்துழைப்பு காரணமாகவும் பிளாஸ்டிக் முற்றிலும் ஒழிக்கப்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக வயல்வெளிகள், குளங்கள், நீர்நிலைகளில் குப்பைகள் கொட்டுவதை தடுத்து குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்றும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. அதற்காக குறிப்பிட்ட காலம் நிர்ணயம் செய்யப்பட்டு மீறுவோருக்கு ரூ.100, ரூ.1000 என்று ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து குற்ற நடவடிக்கையும் எடுக்கப்படும்.

பிற மாநிலங்கள், மாவட்டங்களில் திடக்கழிவு மேலாண்மை சிறப்பாக செயல்படுத்தப்படும் இடங்களில் கவுன்சிலர்களை அழைத்து சென்று காண்பிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

கடைகளில் இருந்து குப்பைகளை கால்வாய்களில் கொட்டுகின்றனர். இதனால் சாக்கடை தேங்கி நோய்கள் பரவுகிறது. பிளாஸ்டிக் ஒழிப்பு போன்று குமரி மாவட்டத்தை குப்பைகள் இல்லாத மாவட்டமாக மாற்ற கவுன்சிலர், பொதுமக்களுக்கு பயிற்சி முகாம்களும் நடத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

‘10க்கு எட்டரை லிட்டர்தான் இருக்கிறது’

கவுன்சிலர் சேகர், ‘கிருஷ்ணன்கோவில் பகுதியில் உள்ள ரேஷன்கடையில் 10 லிட்டர் மண்ணெண்ணெய் வாங்கினால் எட்டரை லிட்டர்தான் இருக்கிறது. 20 கிலோ அரிசிக்கு 18 கிலோதான் தருகின்றனர். கேட்டால் மூடை சேதமடைந்து வருவதாக கூறுகின்றனர்என்றார். கவுன்சிலர் சைலஜா, ‘9 வது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள வடசேரி அரசு உயர்நிலை பள்ளியில் (மலையாளம்) உள்ள பயன்படாத கட்டடங்களில் இரவு நேரங்களில் சமூக விரோத செயல்கள் நடக்கிறது. அரசு இந்த கட்டடங்களை தையல் பயிற்சி பள்ளி உள்ளிட்ட வேறு பயனுள்ள திட்டங்களுக்கு பயன்படுத்த வேண்டும். நகராட்சி மருத்துவமனையில் பிரசவ வார்டு வசதியை ஏற்படுத்த வேண்டும்என்றார். இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.

 

சுகாதார பணிகளில் அலட்சியம் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு மாநகராட்சியில் கவுன்சிலர்கள் புகார்

Print PDF

தினகரன் 30.06.2010

சுகாதார பணிகளில் அலட்சியம் தடையை மீறி பிளாஸ்டிக் பயன்பாடு மாநகராட்சியில் கவுன்சிலர்கள் புகார்

திருப்பூர், ஜூன் 30: தடையை மீறி பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்தி வருவ தாக திருப்பூர் மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் புகார் கூறினர்.

திருப்பூர் மாநகராட்சி கூட்டம் நேற்று மாலை நடந் தது. மாநகராட்சி மேயர் செல்வராஜ் தலைமை தாங் கினார். மாநகராட்சி ஆணை யாளர் ஜெயலட்சுமி, துணை மேயர் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநகராட்சி அதிகாரிகள், கவுன்சிலர்கள் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுகாதாரத்துறையில் மாநகராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டிவருவதாக கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர். இதன் மீது நடந்த விவாதம் வருமாறு.

சிவபாலன் (.தி.மு..) :

திருப்பூர் மாநகராட்சியில் சுகாதார சீர்கேடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடைவிதிக்கப்பட்ட போதும், தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. சாக்கடைகள் முழு வதும் பிளாஸ் டிக் பொருட் கள் நிரம்பிக் கிடக்கின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கவில்லை. பிளாஸ்டிக் பொருட்கள் அடைத்து சாக்கடைகளில் ஏற்பட்டுள்ள அடைப்புகளும் சரி செய்யப்படுவதில்லை. முழுமையான அளவில் பிளாஸ்டிக் பொருட்களை தடை செய்ய வேண்டும். பெயரளவுக்கு மட்டுமே சோதனை நடத்த கூடாது. இதை கண்டித்து ம.தி.மு.. வெளிநடப்பு செய்கிறது.

அருணாச்சலம் (இந்திய கம்யூ) :

‘ஒன் யூஸ் டம்ளர்’ எனும் ஒருமுறை பயன்பாட்டுக்கான பிளாஸ்டிக் டம்ளர் பயன்படுத்த கூடாது என தடை விதித்துள்ளோம். ஆனால், அதை மீறி மாநகர் முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதேபோல், பனியன் கழிவுகளை சாலையோரத்தில் கொட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கொட்டப்பட்டு வரு கிறது. இதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை.

ஷாஜகான் (.தி.மு..) :

குப்பை அகற்றும் வாகனங்களில் பல வாகனங்கள் முறையாக செயல்படுவதில்லை. பல லாரிகளில் பேட்டரிகள் இல்லை. எனது வார்டில் மட்டும் 6 லாரிகளில் பேட்டரிகள் இல்லாமல் தள்ளி செல்லும் நிலையில் உள்ளது.

முருகசாமி (.தி.மு..) :

மாநகரில் சுகாதார பணி களில் மெத்தனப்போக்கு நிலவி வருகிறது. டீக்கடை, உணவகங்களில் கழிவுகளை கொட்ட குப்பை தொட்டி கள் வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை வைக்கப்படவில்லை. சுகாதார அதிகாரி பதவி, வெறும் அலங்கார பதவியாகவே உள்ளது. ஆய்வாளர்களும் முறையாக சோதனை நடத்துவதில்லை. ஆய்வு நடத்தவும், சுகாதார பணிகளை மேற்கொள்ளவும் அவர் சிரத்தை எடுத்துக்கொள்ள தயங்குகின்ற னர். எது கேட்டாலும் பதில் மட்டுமே சொல்கின்றனர். செயல்பாட்டில் ஒன்றும் இல்லை. தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. கோழி கழிவுகள் ரோட்டோரத்தில் கொட்டப்பட்டு வருகின்றன. இவற்றுக்கெல்லாம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை.

இதேபோன்று சுகாதாரத்தில் மாநகராட்சி நிர் வாகம் மெத்தனம் காட்டி வருவதாக பலர் புகார் தெரிவித்தனர்.

 


Page 85 of 135