Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

டீ கடைகளில் பிளாஸ்டிக் கப் பயன்படுத்த கூடாது நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க மக்களுக்கு வேண்டுகோள்

Print PDF

தினகரன் 03.06.2010

டீ கடைகளில் பிளாஸ்டிக் கப் பயன்படுத்த கூடாது நகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க மக்களுக்கு வேண்டுகோள்

கரூர், ஜூன் 3: கரூரில், டீ கடைகளில் பிளாஸ்டிக் கப் பயன்படுத்த கூடாது. நகராட்சிக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று மக்களுக்கு நகராட்சி தலைவி வேண்டுகோள் விடுத்தார்.

இதுகுறித்து கரூர் நகரா ட்சி தலைவி சிவகாமசுந்தரி கூறுகையில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்துவதால் பல்வேறு தீமைகள் ஏற்படுகின்றன. 50வகையான பிளா ஸ்டிக் பொருட்களை தின மும் நாம் பயன்படுத்துகி றோம். 20மைக்ரான்களுக்கு மேல் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை மட்டுமே மீண்டும் பிளாஸ்டிக் பொரு ட்களாக உருக்கி பயன்படுத்த முடியும். எனவே, 20 மைக்ரான்களுக்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்கள், கேரி பேக்குகள், டீ கப்புகள் போன்றவற்றை பொதுமக்கள் பயன்படுத்த கூடாது.

தூக்கி வீசப்படும் பிளா ஸ்டிக் பொருட்களினால் பல்வேறு சுகாதார கேடுகள் ஏற்படுகின்றன. மழைநீர் சேகரிக்க முடிவதில்லை. நிலத்தடிநீர் அடைபடுகிறது. சாக்கடைகள் அடைப்பு ஏற்படுத்துகின்றன. இதனால், கரூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் கப்கள் பயன்படுத்த தடை விதித்து கடந்த மாதம் நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பிளாஸ்டிக் கப்களை அகற்ற கால அவகாசம் அளிக்கப்பட்டது. அதன்பிறகும் நகராட்சி உத்தரவை மீறி சில இடங்களில் டீக்கடைகள், விற்பனை நிலையங்களில் பிளாஸ்டிக் கப், கேரி பேக்குகள் பயன்படுத்துவதை கண்டறிந்து இவற்றை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்து அழித்து வருகின்றனர். டீக்கடைகளில் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்தாமல் கண்ணாடி டம்ளர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிளாஸ்டிக் கேரி பேக்குகளை கடைக்காரார்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண் டும். மீறி பயன்படுத்தினால் தொடர்ந்து பறிமுதல் செய்யப்படும் என்றார்.

எனவே, பொதுமக்கள் மற்றும் கடை வியாபாரிகள், பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாமல் நகராட்சிக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறோம்.

 

தடையை மீறி விற்பனை: பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

Print PDF

தினமணி 03.06.2010

தடையை மீறி விற்பனை: பிளாஸ்டிக் பைகள் பறிமுதல்

களியக்காவிளை, ஜூன் 2: களியக்காவிளையில் தடையை மீறி விற்பனை செய்த பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் 20 மைக்ரானுக்கு குறைவாக உள்ள பிளாஸ்டிக் பைகள் விற்பனை செய்ய ஏப்ரல் 1-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது பிளாஸ்டிக் பைகள் மற்றும் பிளாஸ்டிக் கப்புகளின் பயன்பாடுகள் பெருமளவு குறைந்துள்ளன.

இந்நிலையில், களியக்காவிளை பகுதியில் உள்ள கடைகளில், களியக்காவிளை பேரூராட்சி அலுவலக உதவியாளர் முருகன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் செல்லத்துரை உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் பல்வேறு சில்லறை விற்பனைக் கடைகளில் இருந்து 20 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் கண்டுபிடிக்கப்பட்டு அவை பறிமுதல் செய்யப்பட்டதாக பேரூராட்சி பணியாளர்கள் தெரிவித்தனர்.

களியக்காவிளை பேருந்து நிலையம் அருகேயுள்ள பிளாஸ்டிக் பொருள்கள் மொத்த விற்பனை செய்யும் கடையில் ஆய்வு செய்ய அதிகாரிகளை அனுமதிக்காததையடுத்து, அக் கடைகாரர்களுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

 

கரூர் நகராட்சியில் அமலுக்கு வந்தது: "பிளாஸ்டிக் கப்' களுக்கான தடை

Print PDF

தினமணி 02.06.2010

கரூர் நகராட்சியில் அமலுக்கு வந்தது: "பிளாஸ்டிக் கப்' களுக்கான தடை

கரூர், ஜூன் 1: கரூர் நகராட்சியில் பிளாஸ்டிக் கப்புகளை பயன்படுத்துவதற்கான தடை செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்தது.

பிளாஸ்டிக் கழிவுகளினால் ஏற்படும் ஆபத்திலிருந்து பொதுமக்களைக் காப்பாற்றவும், தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பைகளால் சாக்கடை மற்றும் நீரோட்டங்களில் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க கரூர் நகராட்சி ஆணையர் ஆர். உமாபதி முடிவு செய்தார். இதையடுத்து, கரூர் நகராட்சிப் பகுதியில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள் உள்ளிட்ட பொருள்களுக்கு தடை விதித்து நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தை விளக்கியும், பிளாஸ்டிக் இல்லாத கரூர் நகரை உருவாக்க ஒத்துழைப்பு வழங்கக் கோரியும் நகராட்சியின் 36 வார்டுகளிலுமுள்ள டீக்கடை, மளிகைக் கடை, பெட்டிக்கடைகளிலும், பொதுமக்களிடமும் துண்டுப் பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது. மேலும், கடைகளுக்கு நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டு கடைக்காரர்களிடம் கையெழுத்தும் பெறப்பட்டது. இத்தடை ஜூன் 1-லிருந்து அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கரூர் நகராட்சியின் 7 மண்டலங்களுக்குள்பட்ட கடைகளில் பிளாஸ்டிக் கப்புகள் விற்பனை செய்யப்படுகிறதா என்று ஆய்வு நடத்த நகராட்சி ஆணையர் உத்தரவிட்டார்.

நகர் நல அலுவலர் கே. சந்தோஷ்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள், மேற்பார்வையாளர்கள், பணியாளர்கள் நகராட்சிப் பகுதிகளிலுள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ஏராளமான பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

சில இடங்களில் கடைக்காரர்கள் நகராட்சி ஊழியர்களிடம் தகராறில் ஈடுபட்டனர். எனினும், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டன.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் ஆர். உமாபதி கூறியது:

நகராட்சிப் பகுதியில் பிளாஸ்டிக் கப்புகள் விற்பனை செய்யக் கூடாது என்ற தடையாணை ஜூன் 1 முதல் அமலுக்கு வருகிறது.

மீறி விற்பனை செய்யப்படும் கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் ஆய்வு நடத்தி விற்பனை செய்யப்படும் பொருள்களைப் பறிமுதல் செய்வர். கரூர் நகராட்சியில் பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை முழுமையாக ஓழிக்கப்படும் வரை இந்த ஆய்வு தொடரும் என்றார் அவர்.

 


Page 91 of 135