Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பொருட்களை விற்க சிதம்பரம் நகராட்சி தடை விதிப்பு

Print PDF

தினமலர் 17.05.2010

பிளாஸ்டிக் பொருட்களை விற்க சிதம்பரம் நகராட்சி தடை விதிப்பு

சிதம்பரம் : சிதம்பரம் நகர பகுதியில் 20 மைக்ரான் அளவிற்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்க நகராட்சி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

இது குறித்து சிதம்பரம் நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) மாரியப்பன் விடுத்துள்ள செய்தி குறிப்பு: சிதம்பரம் நகர மன்ற தீர்மானத்தின்படி மறு சுழற்சிக்கு பயன்படாத பிளாஸ்டிக் பை, தட்டு, கப், டம்ளர், மேஜை விரிப்பு மற்றும் உணவு விடுதியில் பயன்படுத்தப் படும் பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்தக்கூடாது. அத்துடன் 20 மைக் ரான் அளவிற்கு கீழ் உள்ள பிளாஸ்டிக் பொருட்களை விற்கவும், பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட் டுள்ளது. எனவே காகிதம் உள்ளிட்ட மாற்று பொருட் களை மட்டும் பயன்படுத்த வேண்டும். விதிமுறைகளை மீறி பயன்படுத்தினால் அவை நகராட்சி நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு செய்தி குறிப் பில் கூறப்பட்டுள்ளது.

 

பரமக்குடி வைகை ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகளால் தொற்றுநோய் அபாயம்: தூக்கத்தில் நகராட்சி நிர்வாகம்

Print PDF

தினமலர்     12.05.2010

பரமக்குடி வைகை ஆற்றில் பிளாஸ்டிக் குப்பைகளால் தொற்றுநோய் அபாயம்: தூக்கத்தில் நகராட்சி நிர்வாகம்

பரமக்குடி: பரமக்குடி வைகை ஆறு முழுவதும் பிளாஸ்டிக் குப்பைகள் மற்றும் கழிவுகள் அதிகமாக காணப்படுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. பரமக்குடியில் ஆண்டுதோறும் நடைபெறும் சித்ரா பவுர்ணமி திருவிழாவில் லட்சக்கணக்கான மக்கள் வைகையாற்றில் கூடுவது வழக்கம். அப்போது நகராட்சி பின்புறம் உள்ள பகுதி, பெருமாள் கோயில் படித்துறை, காக்காத்தோப்பு படித் துறை போன்ற ஆற்றுப் பகுதிகளில் மக்கள் அதிகம் கூடுவர். ஆண்டுதோறும் விழா முடிந்தவுடன் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் ஆற்றில் உள்ள குப்பைகள் அள்ளப்பட்டு வந்தது.

இந்த ஆண்டு இதுவரை குப்பைகள் அள்ளப்படாமல் உள்ளதால் பிளாஸ்டிக் குப்பைகள் முதல் அனைத்து வகையான கழிவுகளும் ஆங்காங்கே சிதறி காற்றில் பறக்கின்றன. திருவிழா நடைபெற்ற நாட்களில் தினந்தோறும் நகராட்சி பணியாளர்களால் குப்பைகள் கூட்டி குவித்து வைத்து விட்டு சென்று விட்டனர். ஆனால் இன்று வரை அவைகள் அள்ளப்படாமல் சுகாதாரகேடாக உள்ளது. வைகையாற்றில் குவிந்துள்ள குப்பைகளால் நீர் நிலைகளுக்கு பாதிப் பும்,மக்களுக்கு தொற்று நோய் அபாயமும் உள்ளது. மேலும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினம் மாலை நேரங்களில் வைகையாற்றில் விளையாடுவதும், கூடுவதும் வழக்கம். அள்ளப்படாமல் உள்ள குப்பைகளால் துர் நாற்றம் வீசுகிறது. வைகையாற்றில் உள்ள குப்பைகளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உடனடி கவனம் செலுத்த வேண்டும்.

 

பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் அழிப்பு : கடைகாரர்களுக்கு எச்சரிக்கை

Print PDF

தினமலர் 04.05.2010

பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் அழிப்பு : கடைகாரர்களுக்கு எச்சரிக்கை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் கடைகளில் பயன்படுத்திய பாலிதீன், பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்யப் பட்டு அழிக்கப் பட்டதோடு , கடைகாரர்களுக் கும் எச்சரிக்கை விடப் பட்டுள்ளது.ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாலிதீன், பிளாஸ் டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு விதிக் கப்பட்டுள்ள தடையை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தினரின் தொடர் நடவடிக்கையினால் நகரின் பெரும்பாலான இடங் களில் பாலிதீன் பொருட்களின் பயன்பாடு குறைந் துள்ள நிலையில் ,பொதுமக்கம் மஞ்சள் பைகளை கைகளில் எடுத்து வந்து பொருட் களை வாங்க த்துவங்கி உள்ளனர்.

இந்நிலையில் ஒரு சில இடங்களில் கடைகாரர் களே பாலிதீன் பைகளை பொதுமக்களிடம் கட்டாயமாக கொடுத்து வருவதாக தகவல் கிடைத்தது. தாசில் தார் ராஜேந்திரன் தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள், நுகர்வோர் இயக்க உறுப்பினர்கள் நேற்று ராமேஸ்வரத்தில் மார்க்கெட், ரயில்வே பீடர் ரோடு, துறை ஒமுக ரோடு,பஸ் ஸ்டாண்ட் பகுதி கடைகளில் சோதனை மேற் கொண்டனர்.

இதில் டாஸ் மாக் பார் உள்ளிட்ட கடைகளில் இருந்து பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட் டன. ''தடைசெய்யப் பட்டுள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என ,தாசில்தார் ராஜேந்திரன் தெரிவித்தார்.

Last Updated on Tuesday, 04 May 2010 06:30
 


Page 94 of 135