Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை :யாருமே பொருள்படுத்தவில்லை

Print PDF

தினமணி 03.05.2010

பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடை :யாருமே பொருள்படுத்தவில்லை

களக்காடு, மே 2: ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருள்களுக்கான தடைதிருநெல்வேலி மாவட்டத்தில் படிப்படியாக அமல்படுத்தப்பட்டு வந்தாலும், அதனை யாருமே பொருள்படுத்தாமல் பிளாஸ்டிக் பொருள்களின் விற்பனை மற்றும் அதன் பயன்பாடு வழக்கம்போலவே தொடர்ந்து நடைபெறுகிறது.

ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் கேரி பேக், டீ கப், தண்ணீர் கப் உள்ளிட்ட பிளாஸ்டிக் பொருள்கள் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிப்பவை எனக் கூறி திருநெல்வேலிமாவட்டத்தில் ஜனவரி முதல் இவற்றுக்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர், இத் தடை படிப்படியாக நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளிலும் அமல்படுத்தப்பட்டது.

பிளாஸ்டிக் தடை குறித்து டிஜிட்டல் பேனர்கள் மூலமாகவும், துண்டுப் பிரசுரங்கள் மூலமாகவும் பொதுமக்களுக்கு விளம்பரப்படுத்தப்பட்டன. ஆனால், தற்போதும் வழக்கம் போலவே அனைத்து வணிக நிறுவனங்களிலும், உணவகங்களிலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

பிளாஸ்டிக் தடை குறித்து விளம்பரப் பேனர்கள் வைப்பதுடன் தங்களது கடமை முடிந்து விட்டதாகவே உள்ளாட்சி அமைப்புகள் கருதுகின்றன. உரிய கண்காணிப்பு செய்வதில்லை. மேலும், பொதுமக்களும் பொருள்கள் வாங்கச் செல்லும்போது உரிய துணிப் பைகளை எடுத்துச் செல்ல விரும்புவதும் இல்லை.

உணவகங்களில் சாம்பார், குருமா, சட்னி உள்ளிட்டவைகளை இன்றும் தடிமன் குறைந்த பிளாஸ்டிக் பைகளில் ஊற்றி ரப்பர் பேண்ட் வைத்து கட்டியே கொடுக்கின்றனர். இதே போல, பழச்சாறு கடைகளில் மட்டுமின்றி டீ. காபியும்கூட பாலிதீன் பைகளில் சூடாக நிரப்பி "பார்சல்' அளிக்கப்படுகிறது. கடைகளில் டீயை பார்சல் செய்ய பிளாஸ்டிக் பை, ஊற்றிக் குடிக்க பிளாஸ்டிக் கப், இந்த இரண்டையும் கொண்டு செல்ல கேரி பேக் என்ற அளவில் சாதாரண டீ கடைகளில் கூட பார்சல் வாங்கிச் செல்லும்போது 3 பிளாஸ்டிக் பொருள்கள் பயன்படுத்தப்படும் போக்கு அதிகரித்து வருகிறது.

உணவகங்கள், வியாபார நிறுவனங்கள் இவைகளில் பிளாஸ்டிக் தடையை முறையாக அமல்படுத்தி, உரிய கண்காணிப்பும் செய்திட்டால் மட்டுமே பிளாஸ்டிக்கை படிப்படியாக ஒழிக்க முடியும். இல்லையேல் வெறும் விளம்பரத்தோடு மட்டுமே நின்றுவிடும் பிளாஸ்டிக் தடை திட்டம்.

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, கிராம ஊராட்சிகளிலும் பிளாஸ்டிக் தடையை முறையாக அமல்படுத்துவதுடன், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் விற்பனை செய்வதையும்,அவற்றை உற்பத்தி செய்வதையும் தடை செய்ய மாவட்ட நிர்வாகத்திற்கும், உள்ளாட்சி அமைப்புகளுக்கும் துணிச்சலும் உறுதியும் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பிளாஸ்டிக்கும் அழியாது. சூழல் மாசும் ஒழியாது. தீர்வு அமல் பொறுப்பில் உள்ள அதிகாரிகள் கைகளில் உள்ளது.

 

பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் அழிப்பு : கடைகாரர்களுக்கு எச்சரிக்கை

Print PDF

தினமலர் 03.05.2010

பாலிதீன், பிளாஸ்டிக் பொருட்கள் அழிப்பு : கடைகாரர்களுக்கு எச்சரிக்கை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரத்தில் கடைகளில் பயன்படுத்திய பாலிதீன், பிளாஸ்டிக் பொருட் கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப் பட்டதோடு , கடைகாரர்களுக் கும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் பாலிதீன், பிளாஸ் டிக் பொருட்கள் பயன்படுத்துவதற்கு விதிக் கப்பட்டுள்ள தடையை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக அமல்படுத்தி வருகிறது. அதிகாரிகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இயக்கத்தினரின் தொடர் நடவடிக்கையினால் நகரின் பெரும்பாலான இடங் களில் பாலிதீன் பொருட்களின் பயன்பாடு குறைந் துள்ள நிலையில் ,பொதுமக்கம் மஞ்சள் பைகளை கைகளில் எடுத்து வந்து பொருட் களை வாங்க த்துவங்கி உள்ளனர்.

இந்நிலையில் ஒரு சில இடங்களில் கடைகாரர்களே பாலிதீன் பைகளை பொதுமக்களிடம் கட்டாயமாக கொடுத்து வருவதாக தகவல் கிடைத்தது. தாசில் தார் ராஜேந்திரன் தலைமையில் வருவாய் துறை ஊழியர்கள், நுகர்வோர் இயக்க உறுப்பினர்கள் நேற்று ராமேஸ்வரத்தில் மார்க்கெட், ரயில்வே பீடர் ரோடு, துறை ஒமுக ரோடு,பஸ் ஸ்டாண்ட் பகுதி கடைகளில் சோதனை மேற்கொண்டனர்.

இதில் டாஸ் மாக் பார் உள்ளிட்ட கடைகளில் இருந்து பிளாஸ்டிக், பாலிதீன் பைகள், பிளாஸ்டிக் கப்புகள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன. ''தடைசெய்யப் பட்டுள்ள பாலிதீன், பிளாஸ்டிக் பொருட் களை பயன்படுத்துபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என ,தாசில்தார் ராஜேந்திரன் தெரிவித்தார்.

Last Updated on Monday, 03 May 2010 06:49
 

விழுப்புரம் நகராட்சி முழுவதும் 4ம் தேதி மரக் கன்றுகள் நடப்படும் : சேர்மன் ஜனகராஜ் அறிவிப்பு

Print PDF

தினமலர் 03.05.2010

விழுப்புரம் நகராட்சி முழுவதும் 4ம் தேதி மரக் கன்றுகள் நடப்படும் : சேர்மன் ஜனகராஜ் அறிவிப்பு

விழுப்புரம் : விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முன் னாள் (2008-09ம் ஆண்டு) மாணவர்கள் சந்திப்பு மற்றும் அரோரா அமைப்பு துவக்க விழா நடந்தது.

விழுப்புரம் ஆசான் திருமண மண்டபத்தில் நடந்த விழாவில் கிராமப்புற மாணவர்களின் கல்வி மேம்பாட்டு வளர்ச்சிக் கான அரோரா அமைப்பு துவக்கப்பட்டது. அமைப் பின் செயலாளர் நவீன் குமார் வரவேற்றார். நிறுவனர் பிரணவ்குமார் தலைமை தாங்கினார். தலைவர் சிவராஜ், முன் னாள் மாணவர் கிருஷ்ணமூர்த்தி, உடற்கல்வி இயக் குனர் மோகனசுந்தரம், லயன்ஸ் சங்க தலைவர் தனபால் முன்னிலை வகித்தனர்.

விழாவில் சேர்மன் ஜனகராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகையில், நான் கல்லூரியில் படிக் கும் போது இந்த சமுதாயத்திற்காக நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. என்னுடன் படித்தவர்கள் ஐந்து பேர் விஞ்ஞானிகளாகவும், 4 பேர் தொலை பேசி நிறுவனத்திலும் பணியாற்றுகின்றனர். அவர்களின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது கல்விதான். முன்னாள் மாணவர்களாகிய நீங்கள் மற்ற மாணவர்களுக்கும் நல்லதை செய்ய வேண் டும். அதற்கு நீங்கள் முதலில் வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும்.

ஏழை எளிய மக்களுக்கு நல்லதை செய்ய வேண் டும். சமுதாய தொண் டாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்கு அரசியலுக்கு வந்த பின்புதான் வந்தது. நீங்கள் அனைவரும் வாழ்க்கையில் வெற்றி பெற்று ஒவ்வொருவரும் ஒரு மாணவனை படிக்க வைக்க வேண்டும். விழுப் புரம் நகராட்சியுடன் அரோரா இணைந்து செயல் படுவதன் மூலம் வரும் 4ம் தேதி நகரம் முழுவதும் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடத்தப்படும். பள்ளி, கல்லூரி மாணவர் கள் இது போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதால் அவர் களுக்கு நல்ல எண்ணங் கள் உருவாகும் என்றார்.

Last Updated on Monday, 03 May 2010 06:44
 


Page 95 of 135