Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

ஆரல்வாய்மொழியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

Print PDF

தினமணி 26.04.2010

ஆரல்வாய்மொழியில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம்

நாகர்கோவில், ஏப். 25: ஆரல்வாய்மொழியில் பிளாஸ்டிக் பைகளைப் பயன்படுத்திய 2 கடைகளுக்கு சனிக்கிழமை அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.

மாவட்டத்தில் பிளாஸ்டிக் பை, கப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் பிளாஸ்டிக் பைகள் பயன்படுத்துவோர் மீது ஆட்சியர் உத்தரவின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆரல்வாய்மொழி பகுதிகளில் உள்ள கடைகளில் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பாராஜ் மற்றும் பேரூராட்சிப் பணியாளர்கள் சோதனை நடத்தினர்.

சோதனையில், ஹோட்டல், பேக்கரி கடைகளில் பிளாஸ்டிக் பைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2 கடைகளில் இருந்த 20 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, கடைகளுக்கு தலா ரூ. 500 அபராதம் விதிக்கப்பட்டது.

 

பெங்களூரை பசுமையாக்க 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: புதிய மேயர்

Print PDF

தினமணி 24.04.2010

பெங்களூரை பசுமையாக்க 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும்: புதிய மேயர்

பெங்களூர், ஏப்.23: பெங்களூரை மீண்டும் பசுமை மற்றும் குளுமை நகராக மாற்ற நகரில் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும் என்று மேயர் எஸ்.கே. நடராஜ் தெரிவித்தார்.

÷பெங்களூர் மாநகராட்சியின் புதிய மேயராக பதவியேற்ற பிறகு நடராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

÷மிகவும் குளுமையான பூங்காக்கள் நகரம் என்று பெயர் பெற்றது பெங்களூர். ஆனால் சில ஆண்டுகளாக வளர்ச்சிப் பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவதாலும், வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும் நகரின் இயற்கையான குளுமை தட்பவெப்ப நிலை மாற்றமடைந்து வெப்ப நிலையும், மாசுக்களும் அதிகரித்து வருகின்றன.

÷எனவே, நகரை மீண்டும் பசுமையான, குளுமையான அழகான நகராக மாற்ற நகரம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்க தொலைநோக்குத் திட்டம் தீட்டப்படும். வாகனங்கள் நிறுத்துவதற்கு பல அடுக்கு பார்க்கிங் காம்பிளக்ஸ் வளாகங்கள் கட்டப்படும்.

÷குடிசைப் பகுதிகள் இல்லாத நகராக பெங்களூரை மாற்றுவோம். இதற்காக வீட்டு வசதித் திட்டங்கள் செயல்படுத்தப்படும். தற்போதுள்ள குடிசைப் பகுதிகளுக்கு பட்டா வழங்கி அடிப்படை வசதிகள் செய்யப்படும்.

÷நகர சாலைகள் சிக்னல்கள் இல்லாத சாலைகளாக மாற்றி அமைக்கப்படும். பெங்களூரை குப்பைகள் இல்லாத நகராக மாற்ற சிறப்புத் திட்டங்கள் தீட்டப்படும்.

குப்பைகளை முறையாக அகற்றிவிட்டால் அவை கழிவுநீர்க் கால்வாய்களில் சிக்கி அடைப்பு ஏற்படுத்துவதை தடுக்க முடியும். இதன் மூலம் மழை காலங்களில் வெள்ள நீர் தேங்காமல் இருக்கும்.

÷மழை காலங்களில் இரவு நேரம் செயல்படும் அதிகாரிகள், ஊழியர்கள் குழு அமைக்கப்படும். இவர்கள் மழை, வெள்ளம் பாதித்த பகுதிகளில் வேரோடு சாய்ந்த மரங்களை உடனே அகற்றி, வெள்ள நீர் வடிந்து செல்ல நடவடிக்கை எடுப்பார்கள்.

மின்தடை பிரச்னையை சரி செய்வார்கள். குடிநீர், வடிகால் வாரியம் மற்றும் மின் வாரியத்துடன் இணைந்து இந்த திட்டம் செயல்படுத்தப்படும்.

÷நகரில் அதிக வளர்ச்சிப் பணிகளை செய்து மக்களின் நம்பிக்கைக்கு ஏற்ப செயல்படுவோம். கட்சி வேறுபாடுகள் இல்லாமல் நகரின் 198 வார்டுகளிலும் வளர்ச்சிப் பணிகளை செய்வோம்.

மாநகராட்சி நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறுகிறார்கள். இதை லாபத்தில் செயல்பட வைப்பதற்காக சீரிய முறையில் வரிகள் வசூலிக்கப்படும் என்றார் அவர்.

 

பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தும் பணி என்.எல்.சி., நிர்வாக இயக்குனர் துவக்கி வைத்தார்

Print PDF

தினமலர் 23.04.2010

பிளாஸ்டிக் பொருட்கள் அப்புறப்படுத்தும் பணி என்.எல்.சி., நிர்வாக இயக்குனர் துவக்கி வைத்தார்

நெய்வேலி: பொது இடங்களில் வீசப்பட்டுள்ள பிளாஸ்டிக் பைகளை சேகரித்து அகற் றும் பணியியை என். எல்.சி. நிர்வாகத் துறை இயக்குநர் பாபுராவ் துவக்கி வைத்தார். நெய்வேலி டவுன்ஷிப் பகுதிகளில் சுற்றுப்புற சூழலை பராமரிப்பதற் காக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிளாஸ் டிக் பைகளை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டது. இந்த தடை உத்தரவிற்கு நெய்வேலி நகர பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் ஒத்துழைப் போடு செயல்படுத்தப் பட்டு வரும் நிலையில் அடுத்த கட்டமாக பொது இடங்களில் பயன்படுத் திய பின் வீசியெறியப் பட்ட பிளாஸ்டிக் பைகள், கப்புகள், தண்ணீர் பாக் கெட்டுகள் மற்றும் மக்காத மெல்லிய பிளாஸ்டிக் பேப்பர் போன்றவற்றை சேகரித்து அப்புறப்படுத் தும் பணியை என்.எல்.சி., நிர்வாகத்துறை இயக்குநர் பாபுராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த பிளாஸ்டிக் பைகளை சேகரிக்கும் சிறப்பு பணியில் என். எல்.சி., நிறுவனம் சுகாதாரத் துறை பணியாளர்கள், நெய்வேலி மக்கள் சேவை பிரிவு, ஈஷா யோகா, சுய உதவிக் குழுக்கள், தன் னார்வ அமைப்பு தொண் டர்கள் மற்றும் நெய்வேலி ஜவகர் அறிவியல் கல்லூரியில் சுற்றுச் சூழல் அறிவியல் படித்துவரும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Last Updated on Friday, 23 April 2010 06:32
 


Page 98 of 135