Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக இரண்டு மடங்கு மரக்கன்று நட திட்டம்

Print PDF

தினமலர் 23.04.2010

வெட்டப்பட்ட மரங்களுக்கு பதிலாக இரண்டு மடங்கு மரக்கன்று நட திட்டம்

கோவை: 'ரோடு விரிவாக்கப்பணிகளின் போது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் இரண்டு மடங்கு மரக்கன்றுகள் நடவேண்டும்' என, மாநகராட்சி சுற்றுச்சூழல் குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கோவை மாநகராட்சி சுற்றுச்சூழல் கூட்டம் மேயர் வெங்கடாசலம் தலைமையில் நடந்தது. துணைமேயர் கார்த்திக் முன்னிலை வகித்தார்.

உலகத்தமிழ் செம்மொழி மாநாடு நடைபெறுவதையொட்டி, நகரில் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள சாலையோர கடைகளை வேறு இடத்துக்கு மாற்றவேண்டும்.

திருமணமண்டபங்கள், ஓட்டல்களிலிருந்து வெளியேறும் கழிவுகளை தரம்பிரித்து குப்பை தொட்டியில் போட அறிவுறுத்த வேண்டும். 20 மைக்ரான் எடைக்கு குறைவாக உள்ள ஒரு முறை பயன்படுத்தக்கூடிய தட்டுகள், டம்ளர்கள் பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும். கோவை நகரில் ரோடு விரிவாக்கப்பணிகளின் போது, வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் இரண்டு மடங்கு மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோழி, ஆடு மாடு, இறைச்சிக்கழிவுகளை பயோபேக் மூலம் மாநகராட்சி வசம் ஒப்படைக்க இறைச்சி கடை உரிமையா ளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். மாநகராட்சி குப்பை தொட்டிகளை நிரம்பி வழிய விடக் கூடாது. தேவையான இடங்களில் குப்பை தொட்டிகளை வைக்க வேண்டும். குளங்களில் கட்டட கழிவுகள் கொட்டப்படுவது, சாயப்பட்டறை மற்றும் ரசாயன கழிவுநீர் கலப்பதை தடுக்கவேண்டும். கோவையிலுள்ள வர்த்தக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும். மரம்வெட்டப்பட்ட இடங்களில் மீண்டும் மரக்கன்றுகளை நடவேண்டும். தனியாக விழா நடத்த வேண்டும் போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை கமிஷனர் சாந்தா, உதவி நகர் நலஅலுவலர் சுமதி, சுகாதாரக்குழு தலைவர் நாச்சிமுத்து, கல்வி மற்றும் பூங்கா குழு தலைவர் கல்யாணசுந்தரம், மாசுக்கட்டுப்பாடு வாரியத்துறை அதிகாரிகள், சுகாதாரத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Last Updated on Friday, 23 April 2010 06:25
 

பிளாஸ்டிக் பைகள் அகற்றும் பணி

Print PDF

தினமணி 22.04.2010

பிளாஸ்டிக் பைகள் அகற்றும் பணி

நெய்வேலி ஏப். 21: தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் நெய்வேலி நகரில் பிளாஸ்டிக் பைகள் அகற்றும் முகாம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை நடைபெற்றது.

நெய்வேலி நகரில் பிளாஸ்டிக் பொருள்களை பயன்படுத்த என்எல்சி நகர நிர்வாகம் தடைவிதித்தது. வணிக நிறுவனங்கள் பாலிதீன் பைகளை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தியது.

÷இந்நிலையில் நெய்வேலி நகரில் குப்பைகளோடு குப்பையாக கலந்துள்ள பாலிதீன் பைகளை அகற்ற என்.எல்.சி. நகர நிர்வாகம் முடிவு செய்து. அதன்படி பிளாஸ்டிக் தவிர்ப்பு இயக்கம் ஒன்றை உருவாக்கி, அந்த இயக்கத்தின் மூலம் தன்னார்வத் தொண்டு நிறுவன உதவியுடன் பாலிதீன் பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளது.

÷அதன்படி செவ்வாய்க்கிழமை பாலிதீன் பைகள் அகற்றும் பணியினை என்எல்சி நிர்வாகத்துறை இயக்குநர் பி.பாபுராவ் தொடங்கி வைத்தார்.

இந்த பணியில் என்.எல்.சி. சுகாதாரத்துறை ஊழியர்கள், நெய்வேலி ஈஷா தொண்டு நிறுவன ஊழியர்கள் மற்றும் மக்கள் சேவை இயக்கத்தின் உறுப்பினர்கள் மற்றும் ஜவகர் அறிவியல் கல்லூரியின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை மாணவர்கள் என 400 பேர் களமிறங்கி ஈடுபட்டுள்ளனர் என என்எல்சி நகர நிர்வாக முதன்மைப் பொது மேலாளர் சி.செந்தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

 

Last Updated on Thursday, 22 April 2010 09:40
 

மரம் வளர்ப்போம் வாங்க! இளைஞர்களுக்கு பேரூராட்சி அழைப்பு

Print PDF

தினமணி 21.04.2010

மரம் வளர்ப்போம் வாங்க! இளைஞர்களுக்கு பேரூராட்சி அழைப்பு

பெ.நா.பாளையம், ஏப் 17: நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் பல்வேறு இடங்களில் நடப்பட்டுள்ள மரங்களை வளர்க்கும் பணியில் பேரூராட்சியோடு இணைந்து இளைஞர்கள் ஊக்கத்துடன் செயலாற்ற வேண்டும் என்று, பேரூராட்சி மன்றத் தலைவர் பத்மாலயா இரா.சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார்.

இங்குள்ள அம்பேத்கர் நகரில் உள்ள இளைஞர்கள் இணைந்து புதிதாக ஜெய்ஹிந்த் நற்பணி அமைப்பைத் துவக்கி உள்ளனர். இதன் துவக்க விழா மற்றும் பெயர் பலகைத் திறப்பு விழா (படம்) நரசிம்மநாயக்கனபாளையத்தில் புதன்கிழமை நடந்தது.

8வது வார்டு கவுன்சிலர் மேகன்ராஜ் முன்னிலை வகித்தார். அமைப்பைத் துவக்கி வைத்து பேசிய இரா.சீனிவாசன், "பேரூராட்சியின் சார்பில் இப்பகுதிகளில் ஆயிரத்துக்கு மேற்பட்ட மரங்கள் நடப்பட்டன. இதனைப் பாதுகாக்க பேரூராட்சி கம்பி வலைகளை ஏற்பாடு செய்தது. ஆனாலும் அதில் பாதிக்கு மேல் அழியும் நிலையில் உள்ளன. எஞ்சியவற்றை பாதுகாக்கும் பணியில் இளைஞர், மகளிர் அமைப்புகள் பேரூராட்சி நிர்வாகத்தோடு இணைந்து ஈடுபட வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார்.

விழாவில் அமைப்பின் தலைவர் பி.வடிவேல், செயலாளர் பாலன் சம்பத்குமார், கார்த்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 


Page 99 of 135