Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

"வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் 2 மடங்கு மரக்கன்று நட வேண்டும்'

Print PDF

தினமணி 21.04.2010

"வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் 2 மடங்கு மரக்கன்று நட வேண்டும்'

கோவை, ஏப். 20: சாலைவிரிவாக்கப் பணிகளின் போது வெட்டப்பட்ட மரங்களுக்குப் பதில் 2 மடங்கு மரக்கன்று நட வேண்டும் என்று, மாநகராட்சி சுற்றுச்சூழல் குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

கோவை மாநகராட்சி சுற்றுச்சூழல் கூட்டம், மேயர் ஆர்.வெங்கடாசலம் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு துணை மேயர் நா.கார்த்திக் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பங்கேற்ற குழு உறுப்பினர்கள் பேசியது:

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடைபெறுவதை ஒட்டி, நகரில் குப்பைகள் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நடைபாதைகளை ஆக்கிரமித்துள்ள சாலையோரக் கடைகளை வேறு இடங்களுக்கு மாற்ற வேண்டும்.

திருமண மண்டபங்கள், ஹோட்டல்களில் வெளியாகும் கழிவுகளை தரம்பிரித்து குப்பைத் தொட்டியில் போட அறிவுறுத்த வேண்டும். 20 மைக்ரான் எடைக்கு குறைவான ஒருமுறை பயன்படுத்தக்கூடிய தட்டுகள், தம்பளர்களை பயன்படுத்துவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை நகரில் சாலைவிரிவாக்கப் பணிகளின்போது வெட்டப்பட்ட மரங்களுக்கு பதில் 2 மடங்கு மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்க வேண்டும். கோழி, ஆடு, மாட்டு இறைச்சிக் கழிவுகளை பயோ பேக் மூலம் மாநகராட்சி வசம் ஒப்படைக்க இறைச்சி கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும், என்றனர்.

இக்கூட்டத்தில் மாநகராட்சி துணை ஆணையர் வே.சாந்தா, கல்விக்குழுத் தலைவர் ஆர்.கல்யாணசுந்தரம், சுகாதாரக் குழுத் தலைவர் நாச்சிமுத்து, ஓசை சுற்றுச்சூழல் அமைப்பு தலைவர் க.காளிதாசன், பாஸ்கர் உள்பட பலர்

Last Updated on Wednesday, 21 April 2010 10:42
 

மகளிர் குழுவினருக்கு காகிதப் பை தயாரிக்கும் பயிற்சி

Print PDF

தினமணி 20.04.2010

மகளிர் குழுவினருக்கு காகிதப் பை தயாரிக்கும் பயிற்சி

காரைக்கால், ஏப். 19: பிளாஸ்டிக் பைகளுக்கு புதுவை அரசு தடை விதித்துள்ளதையொட்டி, காரைக்காலில் மகளிர் குழுவினருக்கு காகிதப் பை தயாரிக்கும் பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

திருமலைராயன்பட்டினம் பகுதியில் காகிதப் பை தயாரிப்புக்காக அப் பகுதியில் உள்ள 100 மகளிருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் திங்கள்கிழமை மூன்று நாள் முகாமை சட்டப்பேரவை உறுப்பினர் வி.எம்.சி.சிவக்குமார் தொடங்கிவைத்தார்.

அவர் பேசும்போது, புதுவை அரசு 5 மைக்ரானுக்குள்பட்ட பிளாஸ்டிக் பொருள்களுக்கு தடை விதித்துள்ளது. ஆனாலும், பொதுமக்கள் அதை பொருள்படுத்தாமல் பயன்படுத்தி வருவது வருத்தமளிக்கிறது. சுகாதாரக்கேடு உருவாகக் கூடாது என்பதற்காக அரசு இந்த முடிவை எடுத்தது. அதற்கு நாம் ஒத்துழைப்பு தரும் வகையில் நாம் அனைவரும் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து காகிதப் பைகளை உபயோகப்படுத்த வேண்டும் என்றார்.

மாவட்ட ஆட்சியர் ந.வசந்தகுமார் பேசியது:

ஒரு காகிதப் பை தயாரிக்க ரூ. 3.50 பைசா செலவாகிறது. பையின் இருபக்கமும் அரசு நிறுவனங்கள் விளம்பரம் தருவற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒரு பை தயாரிக்க 50 பைசா கூலியாக தரப்படும். நாளொன்றுக்கு 200 பை தயாரித்தால் ரூ. 100 வருவாய் கிடைக்கும். குடும்பத்தில் உள்ள அனைவரும் இதை கற்றுக்கொண்டு செய்ய முன் வந்தால், வெளியூரிருந்து பையை நாம் வரவழைக்க வேண்டிய அவசியம் இருக்காது என்றார்.

பயிற்சி முகாமில் ஊழியபத்து அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள், தங்கள் கைவினை ஆசிரியர் கற்றுத்தந்த காகிதப் பை தயாரிக்கும் முறையை மகளிர் குழுவினருக்கு விளக்கினர். இதைத் தொடர்ந்து, சென்னை விப்ஜியார் தனியார் நிறுவனத்திலிருந்து வந்துள்ள வெங்கட்ராமன் என்பவர் பயிற்சி அளித்து வருகிறார்.

Last Updated on Tuesday, 20 April 2010 10:11
 

பெயரளவிற்கு நடந்த சோதனை கம்பத்தில் பாலிதீன் தாராளம்

Print PDF

தினமலர் 20.04.2010

பெயரளவிற்கு நடந்த சோதனை கம்பத்தில் பாலிதீன் தாராளம்

கம்பம் : கம்பம் நகரில் பாலிதீன் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கையில் நகராட்சி அதிகாரிகள் பெயரளவில் சோதனை மேற்கொண்டதால், நகரில் பாலிதீன் பைகள் பயன்பாடு தாராளமாக உள்ளது. சுற்றுப்புறச்சூழலை பாதிக்கும் வகையிலும், பெய்யும் மழை நீர் தரையில் இறங்காமல் செய்யும் பாலிதின் விற்பனையை தடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேனி மாவட்டத்தில் நகராட்சி பகுதிகளில் பாலிதீன் பயன்பாட்டை தடுக்க சுகாதார பிரிவினர், கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். பாலிதீன் பைகள் மற்றும் ஒரு முறை ஊபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

கம்பம் நகராட்சியில் சில நாட்களுக்கு முன்பு சுகாதார அலுவலர்கள் சில கடைகளில் மட்டும் பெயரளவிற்கு சோதனை நடத்திவிட்ட சென்றனர். இதையடுத்து ஓட்டல்கள், டீ கடைகள், பலசரக்கு கடைகள், பெட்டிக்கடைகள் என அனைத்து கடைகளிலும் பாலிதீன் பைகள் மற்றும் கப்புகள் விற்பனை தாரளமாக நடக்கிறது. பாலிதீன் விற்னையை தடுக்க பிற நகராட்சிகளில் கடும் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், கம்பம் நகராட்சியில் மட்டும் பெயரளவிற்கு பாலிதீன் சோதனை நடத்திவிட்டு சென்றதால் பாலிதீன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

Last Updated on Tuesday, 20 April 2010 06:52
 


Page 100 of 135