Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Nagara Seithigal - Environment

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

Print PDF

தினமணி 08.04.2010

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல்

போடி
, ஏப். 7: போடி நகராட்சியில் தடை செய்யப்பட்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை நகராட்சி அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

போடி நகராட்சியில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிகமாக சேர்ந்து நகரில் சுகாதாரக் கேடு அதிகரித்தது. இதனை தினமணியும் சுட்டிக் காட்டியது.

இதையடுத்து, ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் கப்புகள், பாலிதின் பைகள் உள்ளிட்ட பொருள்களுக்கு நகராட்சி தடைவிதித்தது. மேலும் இவற்றை விற்பனை செய்பவர்களுக்கும், வாங்குபவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புதன்கிழமை உலக சுகாதார தினத்தை முன்னிட்டு போடி பகுதி கடைகளில் திடீர் சோதனை நடத்தப்பட்டது.

சுகாதார ஆய்வாளர்கள் பழனிச்சாமி, சென்றாயன், மெர்லி வர்கீஸ், சுகாதார மேற்பார்வையாளர்கள் கருப்பணன், ராஜு மற்றும் களப்பணி உதவியாளர் பாஸ்கரன் ஆகியோர் கொண்ட குழுவினர், போடி நகரில் உள்ள மளிகைக் கடைகள், பிளாஸ்டிக் பொருள் விற்பனைக் கடைகள், டாஸ்மாக் கடைகள், ஹோட்டல்கள் உள்ளிட்டவற்றில் சோதனையிட்டனர்.

இதில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தவோ, விற்பனை செய்யவோ கூடாது என கடும் எச்சரிக்கை விடப்பட்டது. இதுகுறித்து போடி நகராட்சி ஆணையாளர் க. சரவணக்குமார் தெரிவித்ததாவது: போடி நகராட்சியில் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதித்துள்ளோம். ஆனாலும் சிலர் பயன்படுத்துவதாக தகவல் வந்ததையடுத்து திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில் ரூ. 60 ஆயிரம் மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இனி தொடர்ந்து சோதனைகள் மேற்கொள்ளப்படும். போடி நகராட்சியை 100 சதவீதம் பிளாஸ்டிக் குப்பைகள் இல்லாத நகராக மாற்ற பொதுமக்களும், வர்த்தகர்களும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றார்.

Last Updated on Thursday, 08 April 2010 09:17
 

பிளாஸ்டிக் கழிவுகளை விலைக்கு வாங்கும் திட்டம்: சென்னை மாநகராட்சி அறிமுகம்

Print PDF

தினமலர் 07.04.2010

பிளாஸ்டிக் கழிவுகளை விலைக்கு வாங்கும் திட்டம்: சென்னை மாநகராட்சி அறிமுகம்

சென்னை : குப்பை கொட்டும் இடங்களில் சேரும் குப்பையின் அளவை குறைக்கும் வகையில், மறு சுழற்சிக்கு பயன்படும் பிளாஸ்டிக் கழிவுகளை மாநகராட்சி பணம் கொடுத்து வாங்க திட்டமிட்டுள்ளது.சென்னை நகரில் குப்பை அளவை குறைக்க மாநகராட்சி, மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தரம் பிரித்து கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.மக்காத குப்பையை மறு சுழற் சிக்கு பயன்படுத்த நடவடிக்கை மேற் கொள்ள மாநகராட்சி திட்டமிட்டுள் ளது. இது தொடர்பாக, பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பல வகைகளில் பிரசாரங் களை செய்து வருகிறது.குடிசைப் பகுதிகளில் குப்பைகளை தனித்தனியே போட்டு வைக்க, நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பிளாஸ்டிக் குப்பை கூடைகள் வழங் கப்பட்டது. கீழ்ப்பாக்கம் மண்டலத்தில், அண்ணா நகர் பகுதியில் இரண்டு வார்டுகளில் தனியார் நிறுவனம் வீடுதோறும் பைகள் கொடுத்து பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் பேப்பர் கழிவுகளை தனியே போடும் படி வலியுறுத்தப்படுகிறது.வாரத்திற்கு ஒரு முறை தனியார் நிறுவன ஊழியர்கள் வீடு வீடாக சென்று, பிளாஸ்டிக் மற்றும் பேப்பர் கழிவுகளை எடை கணக்கில் பணம் கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். அதுபோல், அடையாறு மண்டலத்தில் துப்புரவு பணி செய்யும் நீல் மெட்டல் நிறுவனம், குறிப்பிட்ட ஒரு பகுதியில் மட்டும் பிளாஸ்டிக் கழிவுகளை வாங்கி வருகிறது.இது போல் பிளாஸ்டிக் கழிவுகளை தனியே வாங்கி மறு சுழற்சிக்கு பயன் படுத்துவதால் குப்பை அளவு வெகுவாக குறைகிறது. இதுனால், நகரம் முழுக்க குப்பையை தரம் பிரித்து கொடுக்க வலியுறுத்துவதோடு பிளாஸ்டிக் கழிவுகளை பணம் கொடுத்து வாங்கவும் திட்டமிட்டுள் ளது.இதற்கு முன்னோட்டமாக மாநகராட்சி 703 வது வார்டு அமைந்தகரை, முத்துவிலாண்டி காலனியில் பிளாஸ் டிக் கழிவுகளை தனியே போட்டு வைக்க, வீடு தோறும் இலவசமாக பை கொடுக்கும் திட்டத்தை மேயர் சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார்.

மேயர் மற்றும் கமிஷனர் ராஜேஷ் லக்கானி ஆகியோர் முத்துவிலாண்டி காலனியில், வீடு வீடாக சென்று குப்பை தரம் பிரித்து கொடுக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, பிளாஸ்டிக் கழிவுகளை தனியே போட்டு வைக்க அறிவுறுத் தினர். கழிவுகளை சேர்க்கும் பைகளை பொதுமக்களிடம் வழங்கினார்.அப்போது மேயர் சுப்ரமணியன் கூறியதாவது:குப்பையை தரம் பிரித்து சேகரிக் கப்படும், பிளாஸ்டிக் மற்றும் காகித கழிவுகளை விலை கொடுத்து வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவுகளை தனியே சேகரித்து வைத்திருந்தால், மாநகராட்சி ஊழியர்கள் 15 நாட்களுக்கு ஒரு முறை வீடுவீடாக சென்று பிளாஸ்டிக் கழிவுகளை, எடை போட்டு கிலோ 2 ரூபாய்க்கு வாங்கிக் கொள்வர்.முதற்கட்டமாக தற்போது இந்த வார்டில் 850 வீடுகளுக்கு பைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

இது போல், அனைத்து மண்டலங்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் பணம் கொடுத்து வாங்க மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. அதற்காக வீடுதோறும் இலவசமாக பைகள் வழங்கப்படும்.நகரின் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் தமிழில் பிரதானமாக இடம் பெறும் வகையில், எழுத மே 31 வரை கெடு விதிக்கப் பட்டுள்ளது. மே மாத்திற்குள் வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளில் தமிழில் பிரதானமாக இடம் பெறாவிட்டால், அப்படிப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்படும்.இவ்வாறு மேயர் கூறினார்.

Last Updated on Wednesday, 07 April 2010 06:36
 

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

Print PDF

தினமணி 05.05.2010

பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

மார்த்தாண்டம், ஏப். 4: பாகோடு, நல்லூர் பேரூராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணிகள் நடைபெற்றன. பாகோடு பேரூராட்சியில் 7,8-வது வார்டு பகுதிகளில் நடைபெற்ற இந்த பிரசார பேரணியில் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்த பேரணி பாளையங்கெட்டியில் துவங்கி கழுவன்திட்டை வரை நடைபெற்றது. பேரணியை பேரூராட்சித் தலைவர் ஜெயராஜ் துவக்கி வைத்தார். பேரணியில் வார்டு உறுப்பினர்கள் பாலம்மாள், மது மற்றும் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். நல்லூர் பேரூராட்சி பகுதியில் நடைபெற்ற பேரணிக்கு பேரூராட்சித் தலைவர் விஜயகுமார் தலைமை வகித்தார். பேரணியை செயல் அலுவலர் ஜெயச்சந்திரன் துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேரூராட்சி துணைத் தலைவர் அர்ச்சுணன், உறுப்பினர்கள் ராஜசேகரன், செல்வராஜ், உள்ளிட்டோர் பேசினர். இந்த பேரணி பல்லன்விளை, கரவிளாகம், முளங்குழி, நெடுவிளை, பம்மம், வெட்டுமணி ஆகிய பகுதிகள் வழியாக சென்றது.

Last Updated on Monday, 05 April 2010 10:18
 


Page 102 of 135